.

Loading...
புனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஜனவரி, 2009

தமிழகத்தில் தடம் பதித்த புனிதர்கள், St. Francis Xavier புனித சவேரியார்

புனித சவேரியார்



புனித பிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் மாதம் ஏழாம் தியதி 1506 ஆம் வருடம் புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே ஸ்பானிஷ் மற்றும் பஸஃஉ மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

1525ஆம் வருடம் கல்லூரி படிப்பிற்காக பாரிஸ் சென்றார். அதன் பின்னர் பதின் ஒன்று வருடங்கள் பாரிசிலே இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை பெஅஉவைஸ் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். மீண்டும் 1534முதல் 1536 வரை இறையியலை பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு பிஎர்ரே பாவர் மற்றும் இஞதயுஸ் லயோலா நண்பராயினர். பின்னர் இவர்கள் இயேசு சபை என்னும் இயக்கத்தை தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்கின்னர்.

இதை தொடர்ந்து 1537 ஆம் வருடம் ஜூன் மாதம் 24 ஆம் நாள் குருவாக பட்டம் பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ஆம் தியதி நிறைவேற்றுகிறார். பின்னர் நண்பர்கள் போப் மூன்றாம் சின்னப்பரை சந்தித்து இறைபணி செய்வதற்க்கான தங்கள் விருப்பத்தை தெரிவிக்கின்றனர். இந்த வேளையில் போர்த்துகீசிய மன்னன் அப்போது தங்கள் கீழ் இருந்த நாடுகளுக்கு குருக்களை தந்துதவும்படி வேண்டுகிறார். இதன்படி புனித சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலணி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

புனித சவேரியார் 1540இல் ரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பான் செல்கிறார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்துவிட்டு 1542 மே மாதம் 6ஆம் தியதி கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழக கடற்கரை கிராமங்களில் தனது இறைபணியை செய்துவந்தார்.

1543இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைபணியை தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் இங்கு கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளை கூறியும் நோயாளிகளை சந்தித்தும் வந்துள்ளார். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டது.

இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டது. இந்த ஆலயம் கட்ட மன்னரிடம் இடம் கேட்டு மறுக்கவே, புனித சவேரியார் ஒரு ஆட்டின் தோல் அளவு இடம் கேட்கவே மன்னர் சம்மதிக்கிறார். பின்னர் இத்தோலானது விரிந்து கொண்டே சென்றதாம். இந்நிகழ்வின் மூலம் திருவிதாங்கூர் மன்னர் புனித சவேரியாரின் நண்பராகிறார். மேலும் கிறிஸ்தவர்களாக மதம் மாற இருந்த தடையும் நீக்கப்பட்டதாம்.

மேலும் மதுரை மன்னர் 1544இல் திருவிதாங்கூர் ராஜ்ஜியதோடு போர் தொடுக்க படைகளோடு நெருங்கிய போது திருவிதாங்கூர் ராஜா புனித சவேரியாரின் உதவியை நாடவே, புனித சவேரியார் படைகளின் முன்பாக தன் சிலுவையை காண்பித்தபடியே செல்ல மதுரை மன்னனின் படைகள் பின்வாங்கி விட்டனவாம். இன்னும் ஏராளமான புதுமைகள் இவரால் செய்யப்பட்டுள்ளன.

ஒரு முறை கிறிஸ்தவர்களாக மாறிய கிராமத்தை தாக்க வந்தவர்களை திருப்பி போகும்படியாக கேட்டும், போகாதபோது, பக்கத்தில் ஒருநாள் முன்புதான் கட்டி முடிக்கப்பட்ட கல்லறையை நோக்கி, கிறிஸ்துவே உம்முடைய வார்த்தையை இவர்கள் அங்கீகரிக்கும்படியாக இந்த கல்லறையானது திறக்கட்டும் என்கிறார். உடனே கல்லறையானது திறக்கிறது. பின்னர் இறந்தவரை எழும்பி வெளியே வரும்படி கூற அவரும் அவ்வாறே வெளியே வந்துள்ளார். இதை பார்த்ததும் அவ்விடத்தை சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்களாக மாறுகின்றனர். மேலும் இதே இடத்தில் கால்கள் புண்களால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பிச்சை காரரின் கால்களை குணமாக்குகிறார்.

கொம்புதுற என்னும் இடத்தில் கிணற்றில் விழுந்து இறந்த ஒரு சிறுவனின் மேல் கையை வைத்து செபிக்க அவன் உயிர் பிழைக்கிறான். ஜப்பானில் பார்வை இல்லாத ஒரு வியாபாரியின் தலை மீது சிலுவையை வைத்து செபிக்க அவர் மீண்டும் பார்வை பெறுகிறார். ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போகிறது, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்த சிலுவையை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்கமாக பயணம் செய்து இறைபணியை செய்துள்ளார். கடைசியாக சன்சியன் தீவில் வைத்து நோயால் பாதிக்கபடுகிறார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் போர்த்துகீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ஆம் வருடம் டிசம்பர் இரண்டாம் தியதி உயிர் துறக்கிறார். ஜார்ஜ் அல்வறேஸ் புனித சவேரியாரை அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டு சென்று விடுகிறார்.

மீண்டும் சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து ( பெப்ருவரி மாதம் 17ஆம் தியதி 1553ஆம் வருடம்) அத்தீவின் வழியாக வரும்போது அவருடைய கல்லறையை திறக்கின்றனர். அப்போது அவரது உடல் எந்த பாதிப்பும் இல்லாமல் வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மலக்க கொண்டு செல்கின்றனர். இக்கப்பலானது மார்ச் மாதம் 22 ஆம் தியதி 1553ஆம் வருடம் மலக்கவை வந்தடைகிறது. மீண்டும் மாதாவின் ஆலயத்தில் வைத்து அவரது உடலை பார்த்த போது அது கெட்டுபோகாமல் நறுமணம் வீசியுள்ளது. பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பரின் தேவாலயத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் உடலை கோவா கொண்டுசெல்ல உத்தரவிடுகிறார். இதன்படி டிசம்பர் 1553இல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களை தாண்டிய பின்னரும் இன்றும் இப்புனிதரின் உடல் மக்கள் பார்க்கும் படியாகவே வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலை தரிசித்த பல கோடி மக்களில் நானும் ஒருவன்

தமிழகத்தில் தடம் பதித்த புனிதர்கள், St. Thomas புனித தோமையார்


புனித தோமையார்

உயிர்த்த இயேசு,


தன் சீடர்களை பார்த்து நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் ஞானஸ்தானம் கொடுங்கள் என்றார். அதன்படியே சீடர்கள் ஒன்றுகூடி உலகெங்கும் சென்று கிறிஸ்தவத்தை அறிவிக்க முடிவு செய்தனர். அதில் புனித தோமையார் இந்தியாவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அன்றைய கேரளக் கடற்கரைக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்தது. யவனர்களும் அராபியர்களும் தொடர்ந்து வணிக நோக்கத்துடன் கேரளத்துக்கு வந்தபடி இருந்தனர். இக்கடற்கரையில் இன்றும் குவியல் குவியலாக நாணயங்கள் கிடைத்தபடியுள்ளன. அதிகமும் ரோமாபுரி நாணயங்கள். அதற்கும் முன்பு கிமு 970 முதல் 930 வரை ஆண்ட இஸ்ரேலரின் சாலமோன் மன்னரின் மரக்கலங்கள் கேரளக் கடற்கரைக்கு வந்தபடி இருந்தன. அதற்கு புராதன பழைய ஏற்பாடு பைபிளிலேயே ஆதாரங்கள் உள்ளன. முசிரிஸ் என்று அப்போது குறிக்கப்பட்ட கொடுங்கல்லூரில் இருந்து முத்தும் மணிகளும் கொண்டுவரப்பட்டு மன்னருக்குப் படைக்கப்பட்டன. கேரளக்கடற்கரையிலிருந்து பெறப்பட்ட மிளகு முதலிய நறுமணப்பொருட்கள் அக்காலம் முதலே ஐரோப்பாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் மிகமிக பிரியமானவையாக இருந்தன.

ரோமாபுரி பயணியும் வரலாற்றாசிரியருமான ப்ளினி கிமு 23-79 ஒவ்வொரு வருடமும் பொன்னாகவும் மணியாகவும் பெருஞ்செல்வம் கேரளத்துக்குச் செல்வதைப்பற்றி வருந்தி எழுதியிருக்கிறார். மலபார் பகுதிக் கப்பல்கள் பாரசீக வளைகுடா கடந்து சென்று வணிகம் செய்வதைப்பற்றியும் அவர் எழுதியுள்ளார். ப்ளினியைப் போலவே டாலமி (கிமு 100-160) மற்றும் பெரிப்ளூஸ் ஆகியோரும் சேரக் கடற்கரைக்கு மேலைநாடுகளுடன் இருந்த நெருக்கமான உறவைப்பற்றி எழுதியுள்ளனர். முதல் நூற்றாண்டு முதலே கேரளத்தில் மட்டாஞ்சேரி என்ற இடத்தில் யூத குடியிருப்புகள் உருவாகிவிட்டன. சமீப காலம் வரை யூதர்கள் ஒரு தனிச்சமூகமாக அங்கிருந்தனர். அவர்களின் கோயிலும் சினகாக் அங்குள்ளது. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வாய்ப்புள்ள யூதாஸ்- தாமஸ் குறிப்புகளின் படி முதல் நூற்றாண்டின் இறுதியில் புனித தோமையார் தன் சுவிசேஷங்களை கோண்டபறேஸ் என்ற பார்த்திய மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் செய்து கொண்டிருந்தார் .
இலக்கிய ஆதாரங்கள் தவிர இன்றும் எஞ்சும் தோமையார் மரபு கிறித்தவர்களின் மார்த்தோமா கிறித்தவர்கள் சமூகம் அவரது வருகைக்கான சிறந்த ஆதாரமாகும். இவர்கள் பாலையூர் அர்த்தாடு நிலம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளம் முழுக்க பரவினார்கள். மயிலாப்பூரில் உள்ள தோமையாரின் சமாதியும் பறங்கிமலை கோயிலும் இன்றும் உள்ளவை. இப்புனித அப்போஸ்தலரின் எலும்புகள் எடெஸ்ஸா என்ற ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
புனித தோமையார் இன்றைய கேரளத்தின் கொடுங்கல்லூரில் கடல் மார்கமாக கி.பி 52 இல் வந்திறங்கியதாக சரித்திரம் கூறுகிறது. புனித தோமையார் சுமார் பதினேழு வருடங்கள் இந்தியாவில் போதித்துள்ளார்.( நான்கு வருடங்கள் சிந்துவிலும் ஆறு வருடங்கள் மலபாரிலும் ஏழு வருடங்கள் மைலாபூரிலும்) இவர் மலபாரில் போதித்த போது அங்கு பிராமணர்கள் தண்ணீரை வான் நோக்கி தெளித்து பூஜை செய்வதை பார்த்தார். தானும் அவர்கள் அருகில் போய் தண்ணீரை வான் நோக்கி தெளித்து ஜெபித்தார். அப்போது அத்தண்ணீர் அந்தரத்தில் அப்படியே தொங்கிக்கொண்டே இருந்ததாம் இதை பார்த்த பிராமணர்கள் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவர்களாக மாறிஇருக்கிறார்கள். இதுதான் புனித தோமையர் செய்த முதல் அற்புதம்.
இதை தொடர்ந்து பலரை கிறிஸ்தவர்கள் ஆக்கியதோடு ஏழரை ஆலயங்களையும் நிறுவினார். அவைகள் கொடுங்கல்லூர், கொல்லம், நிரணம், நிலாக்கள், கொக்கமங்க்லம், கொட்டக்கயல், பழையூர், திருவிதாங்கோடு அரப்பள்ளி.

கோண்டபறேஸ் ராஜாவும் புனித தோமையாரும்
According to tradition, the Indo-Parthian king Gondophares was proselitized by St Thomas, who continued on to southern India.
புனித தோமையாரை பத்தி கேள்விபட்ட ராஜா அவரை சந்தித்து உமக்கு என்ன தொழில் தெரியும் என கேட்டார். தான் ஒரு தச்சன் எனவும் தன்னால் அரண்மனைகளை கட்ட முடியும் எனவும் கூறினார். இதை கேட்டு சந்தோஷ பட்ட ராஜா தனக்கு ஒரு அரண்மனை கட்டிதரும்படி கேட்கிறார். இதற்காக நிறைய பொன்னும் பொருளும் கொடுக்கிறார். ஆனால் புனித தோமையார் அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கிறார். சிறிது காலம் கழித்து ராஜா கேட்கும்போது அரண்மனை முடியும் தறுவாயில் உள்ளது என கூறுகிறார். ஆனால் ராஜாவிடம் பணிபுரிபவர் அவர் அரண்மனை எதுவும் கட்டவில்லை. மாறாக நாம் கேள்விப்படாத புதிய மதம் ஒன்றை போதித்து வருகிறார் என ராஜாவிடம் சொல்கின்றனர். இதைகேட்ட ராஜா மிகுந்த கோபம் கொண்டு அவரை அழைத்து எங்கே என் அரண்மனை என கேட்கிறார்? புனித தோமையாரோ வானை நோக்கி சொர்கத்திலே உமக்கு அரண்மனை கட்டியுள்ளேன், அதை நீர் இப்போது பார்க்க முடியாது. நீர் இறந்தால்தான் பார்க்கமுடியும் என் கூறுகிறார். இதைகேட்ட ராஜா மிகுந்த கோபம் கொண்டு அவரை சிறையில் அடைக்கிறான்.
அதன் அடுத்த நாளே ராஜாவின் சகோதரனான கட் மரணம் அடைகிறான்பின்னர் இறந்த அவன் ராஜாவின் கனவில் தோன்றி சகோதரா, நீர் என்மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளீர் என தெரியும். நான் எதை கேட்டாலும் நீர் தருவீர் எனவும் தெரியும். நீர் சொர்க்கத்தில் கட்டிவைத்திருக்கும் அரண்மனையை எனக்கு விலைக்கு தரவேண்டும் என்கிறான். குழம்பிப்போன ராஜா இல்லாத ஒன்றை கேட்டால் எப்படிதருவேன் என்கிறான். அப்போது ராஜாவின் சகோதரன் இறந்த தன்னை வானதூதர்கள் சொர்க்கத்திற்கு அழைத்து சென்றதாகவும் அங்கு பல அழகிய அரண்மனைகளை காண்பித்ததாயும் அதில் மிகவும் அழகுடைய அரண்மனையை நான் கேட்டபோது அது கோண்டபருஸ் ராஜாவிற்கு சொந்தமானது, உமக்கு தரமுடியாது என்றனர். நானோ அதை விலைக்கு வாங்கவேண்டும் என்றேன். அதனால் தான் என்னை இங்கே திரும்ப அனுப்பினார்கள் என்றான். அப்போது தான் புனித தோமையாரை ராஜா விடுதலை செய்து ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக மாறுகிறார்.

மைலாப்பூரில் புனித தோமையார்!

மலபார் கடற்கரையிலிருந்து மயிலைப்புரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மயிலாப்பூரான பழைய சென்னை கடற்கரை பகுதிக்கு வந்து சேர்ந்தார். அப்போது அப்பகுதியை ஆண்டு வந்த இராஜா மகாதேவன், தோமையாரை வரவேற்றான் மன்னனின் ஆதரவுடன் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு தனது போதனைகளை தொடங்கினார். புனிதரின் போதனையையும் புதுமையையும் கண்டு மக்கள் அவர் பின்னால் போவதையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதையும் கண்டு இராஜா மகாதேவனும் அவனது ஆட்களும் புனிதத் தோமையாரை தீர்த்துக் கட்ட முடிவெடுத்தனர். மன்னனும் அவனது ஆட்களும் வேவு பார்ப்பதை கண்ட புனித தோமையார் சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள சின்ன மலைக் குகையில் மறைவாகத் தங்கிக் கொண்டு மக்கள் மத்தியில் வேதம் போதிக்க மட்டும் வெளியில் வந்தார். புனித தோமையார் சின்னமலை குகையில்தான் இருக்கிறார் எனத் தெரிந்த மன்னரின் ஆட்கள் மலைக்குள் நுழைய மன்னரின் ஆட்களில் ஒருவன் ஈட்டியால் புனித தோமாவின் முதுகில் குத்த அவர் உயிர் துறந்தார்.கி.பி. 72ல் வேதசாட்சியாக மரணமடைந்த புனிதத் தோமையாரின் திருவுடல் மயிலாப்பூர் கடற்கரையில் அவரே கட்டிய ஆலயத்தில் புதைக்கப்பட்டது. புனித தோமையார் புதைக்கப்பட்ட இடத்தில் வானுயர எழுந்த பேராலயம் தான் புனித சாந்தோம் பேராலயம்.
தோமையார் கொல்லப்பட்ட நாளில் 18-ம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவர்கள் அந்தப் பாறைக்குச் சென்று பிரார்த்தனை நடத்தி வந்தனர். தோமையாரைக் கொல்லப் பயன்படுத்திய ஈட்டியின் முனை அவரது ரத்தம் தோய்ந்த மண் ஆகியன மயிலைக்குக் கொண்டுவரப்பட்டு அவரது உடலுடன் அடக்கம் செய்யப்பட்டன. இந்தியாவின் அப்போஸ்தலர் என அழைக்கப்படும் தோமையாரை கௌரவிக்கும் படியாக இந்தியா இரண்டுமுறை அவருடைய தபால் தலைகளை வெளியிட்டுள்ளது (1964 மட்டும் 1973

புனித அல்போன்சா Saint Alphonsa

முதல் இந்திய பெண் புனிதர்

புனித அல்போன்சா
Saint Alphonsa
















கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குடமலூர் என்ற குக்கிராமத்தில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி ஜோசப்-மேரி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார் சிஸ்டர் அல்போன்சா. அவரது இயற்பெயர் அன்னக்குட்டி. இளம்வயதிலேயே தாயை இழந்தார்.
பாதிரியாரான அவரது பெரியப்பா ஜோசப் என்பவர்தான் அவரை படிக்க வைத்தார். அவருக்கு 13 வயது இருக்கும்போது உமி எரிந்துகொண்டிருந்த குழிக்குள் கால் வழுக்கி விழுந்துவிட்டார். இதில் அவரது கால் கருகி ஊனமானார்.
மரணம் அடைந்தார்
பட்ட காலிலே படும் என்பதைப் போல இளமையில் தாயின் மரணம், தோல் நோய் பாதிப்பு, கால் ஊனம், வளர்ப்பு தாயின் மரணம் என அடுத்தடுத்து அவரது வாழ்வில் சோதனைகள் நேரிட்டன. கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக ஒவ்வொரு சோதனையையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். ஏசுவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க விரும்பிய அவர் 1936-ம் ஆண்டு கன்னியாஸ்திரி ஆகி ஆசிரியராக பணியாற்றினார். உடல்நலக்குறைவு காரணமாக ஆசிரியர் பணியை அவரால் தொடர முடியவில்லை.
இந்த நிலையில், கடும் நிமோனியா காய்ச்சல் தாக்கி மேலும் பலவீனமடைந்து படுத்த படுக்கையானார். இதற்கிடையில் `அம்னீசியா' என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டு ஞாபக சக்தியை இழந்தார். பின்னர் தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் ஓரளவு குணமடைந்தார். இருந்தாலும் முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில், உடல்நலக்குறைவு மேலும் அதிகமாகி 35-வதில் சிஸ்டர் அல்போன்சா மரணம் அடைந்தார்.
On her death bed அவரது உடல் பரனன்கணம் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கல்லறையில் நடக்கும் புதுமைகள்
சிஸ்டர் அல்போன்சா அனுபவத்தை துன்பங்களை கேள்விப்பட்ட கிறிஸ்தவர்கள் அவரது கல்லறைக்கு சென்று பார்த்து வருவது வழக்கம். அப்படி கல்லறைக்குச் சென்று வேண்டும்போது அவர்கள் கேட்டவை நடக்க ஆரம்பித்தன. அவரது பெயரால் ஆங்காங்கே புதுமைகளும் நடந்தன. அல்போன்சாவின் கல்லறைக்கு சென்று வேண்டியதால் தீராத நோய்கள் குணமானது என்றும், கேட்ட வரங்கள் நடக்கின்றன என்றும் ஏராளமானோர் சாட்சி கூறினர்.
இதனால், சிஸ்டர் அல்போன்சாவின் புகழ் உலகம் எங்கும் பரவ தொடங்கியது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனுக்கும் தகவல் போனது. இதைத்தொடர்ந்து, அல்போன்சா பெயரால் புதுமைகள் நடப்பது உண்மைதானா? என்பதை கண்டறியும் வகையில் இறையியல் வல்லுனர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கேரளா சென்று கல்லறையை பார்த்து வந்ததுடன் பயனடைந்த மக்களிடமும் நேரில் விசாரணை நடத்தியது. பின்னர், மக்கள் கூறுவது எல்லாம் உண்மைதான் என்று அந்த குழு போப் ஆண்டவருக்கு அறிக்கை சமர்பித்தது.
அருளாளர் பட்டம்
இதைத்தொடர்ந்து, சிஸ்டர் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்க திருச்சபை கூடி முடிவு செய்தது. புனிதர் பட்டத்திற்கு முன்பாக தரப்படும் அருளாளர் பட்டத்தை 1985-ம் ஆண்டு அப்போதையை போப் ஆண்டவர் 2-ம் ஜான்பால் அல்போன்சாவுக்கு வழங்கினார்.
அருளாளர் பட்டத்தை தொடர்ந்து அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தற்போதைய போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட் கடந்த ஆண்டு அறிவித்தார். இதன்படி அக்டோபர் மாதம் 12ஆம் தியதி 2008ஆம் வருடம் அருளாளர் அல்போன்சாவிர்க்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

புனிதர் பட்டதிருப்பலியில் குருப்பன்தாராவின் 11 வயது ஜினில் ஷாஜியும் அவனது தந்தை ஷாஜியும் கலந்து கொண்டனர்.
ஜினில், கோணலான கால்களுடன் பிறந்தவன். எனினும் அருட்சகோதரி அல்போன்சாவின் சமாதியில் செபித்ததன் பலனாக அவனின் கால்கள் குணமடைந்து நேராகின. இப்புதுமை 1999ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்புதுமை, அருளாளர் அல்போன்சா புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குடமலூரில் அல்போன்சாவின் வீடு அருங்காட்சியகமாக மாறியுள்ளது. அங்கு ஒரு சிற்றாலயமும் கட்டப்பட்டுள்ளது.

கேரள அரசு அல்போன்சாவின் சமாதி இருக்கும் பரணஞானத்திற்குச் செல்லும் சாலையை 3 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துள்ளது.

Stamp
புனித அல்போன்சாவை கௌரவிக்கும் படியாக இந்தியஅரசு 19 ஜூலை 1996ஆம் வருடம் அவருடைய தபால் தலையை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!