.

Loading...

சனி, 23 மே, 2009

நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?

நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?

சில காலமாகவே தமிழக முதல்வர் நகரும் நாற்காலியின் துணையுடன்தான் நடமாடி வருகிறார். இப்படி கஷ்டப்பட்டு அவர் நடமாடுவதை பார்க்கும்போது என்னவோ மனசிற்கு கொஞ்சம் கஷ்டமாகவே உள்ளது.

ஒரு பழுத்த அரசியல் வாதியான முதல்வர், "பதவி என்றால் பசைபோட்டு" ஒட்டிக்கொள்ளக்கூடியவர். இந்தியாவின் தொங்கு பாராளுமன்றங்கள் மாநில அளவில் இருந்த இவர்களை, இந்திய அளவில் பதவிகளை பிடிக்க வழிவகை செய்து கொடுத்துவிட்டது. ஒரு சமயத்தில் தேசிய கட்சிகளை மிரட்டி கூட மந்திரி பதவிகளை பெற்று விடுகிறார்கள்.

அது எப்படியும் இருக்கட்டும். இந்த தள்ளாடும் வயதிலாவது தானே முன்வந்து, முதல்வர் பதவியை துறக்கலாமே! அப்படி துறந்தால், கழக கண்மணிகள் என்ன அன்பழகனையா முதல்வர் ஆக்குவார்கள்? உங்கள் வாரிசு ஸ்டாலின்தானே முதல்வர் ஆவார்! எப்படியும்

உங்களின் காலத்திற்குப்பின் ஸ்டாலின்தான் முதல்வர் ஆவார். அது தமிழகத்தின் தலைவிதியாககூட இருக்கலாம். அதை நீங்கள் இருக்கும்போதே, "இளைய தலைமுறைக்கு" (இளைய தளபதிக்கு) வழிவிடுகிறேன் என சொல்லி அவரை முதல்வராக அழகு பார்க்கலாமே. அதுதான் உங்களின் ஆசையாகக்கூட இருக்கலாம்.

என்ன? மதுரையின் மகாராஜா! அதுதாங்க! அழகிரி கோபப்படுவார் என, நீங்கள் நினைப்பது புரியுது. இருந்தாலும் அவர் பாராளுமன்றம் சென்று விட்டதால் அதைப்பற்றி கவலை படவேண்டாம். முடிந்தால் அவர் பிரதமராக வாய்ப்புண்டா? என பாருங்கள். தற்போது நீங்கள் ஸ்டாலினுக்கு வழிவிடுவது இளைய சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் ஒரு பெரிய தியாகமாக இருக்கும்.

இப்படி கஷ்டப்பட்டு, நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?

12 கருத்துகள் :

வான்முகிலன் சொன்னது…

செல்வராஜ் அவர்களே, இந்தத் தள்ளாத வயதில் அவரால் வீடாள முடியவில்லை என்ற காரணத்தால்தான் அவர் நாடாண்டு கொண்டிருக்கிறார். அவருக்க முதல்வர் என்ற பட்டப்பெயர் ஒன்று மட்டும் இப்பொழுது இல்லையென்றால் அவர் கதி....

Selvaraj சொன்னது…

...அதோ கதி! என்றா சொல்ல வந்தீர்கள்?

Joe சொன்னது…

//
முடிந்தால் அவர் பிரதமராக வாய்ப்புண்டா? என பாருங்கள்.
//
அய்யா, நீங்க இங்கிலாந்து-ல இருக்கிறதுனாலே இந்த நாடு நாசமா போனாலும் பரவாயில்லைன்னு நினைக்கலாமா? ;-)

அஹோரி சொன்னது…

எல்லாம் மெரினா பீச் ல இடம் பிடிக்கத்தான்.

Selvaraj சொன்னது…

Joe said...
//
முடிந்தால் அவர் பிரதமராக வாய்ப்புண்டா? என பாருங்கள்.
//
அய்யா, நீங்க இங்கிலாந்து-ல இருக்கிறதுனாலே இந்த நாடு நாசமா போனாலும் பரவாயில்லைன்னு நினைக்கலாமா? ;-)

"என்னங்க! ஒரு நினைப்புதானுங்க!! அதற்கே
தடா போட்டு விடுவீர்களா?"

Selvaraj சொன்னது…

அஹோரி said...
எல்லாம் மெரினா பீச் ல இடம் பிடிக்கத்தான்.

"தாராளமா பிடிச்சிட்டு போகட்டுமுங்க!"

அது சரி(18185106603874041862) சொன்னது…

//
ஒரு பழுத்த அரசியல் வாதியான முதல்வர், "பதவி என்றால் பசைபோட்டு" ஒட்டிக்கொள்ளக்கூடியவர். இந்தியாவின் தொங்கு பாராளுமன்றங்கள் மாநில அளவில் இருந்த இவர்களை, இந்திய அளவில் பதவிகளை பிடிக்க வழிவகை செய்து கொடுத்துவிட்டது. ஒரு சமயத்தில் தேசிய கட்சிகளை மிரட்டி கூட மந்திரி பதவிகளை பெற்று விடுகிறார்கள்.
//

ஐயா,

இந்தியா என்பதே பல மாநிலங்களின் கூட்டமைப்பு தானே?? இதில் மாநில கட்சிகள் மத்தியில் பதவி பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும்?? இதில் மிரட்டி பதவி வாங்குகிறார்கள் என்று வருத்தப்பட முடியுமா??

Thamizhan சொன்னது…

வேறு காரணங்களைச் சொல்லுங்கள் ஆனால் நாற்காலியைச் சொல்லுவது மனித நேயம் அல்ல.
பிரான்க்லின் ரூசுவெல்ட் நாற்காலி இரண்டாம் உலகப் போரை நடத்தியது.
நேரு,நரசிம்மர்,ஆன் டென்னா வை மாற்றச் சொன்னதிற்கு அந்தோனியை மாற்றிய ஆட்சிகள் நடந்துள்ளன்.
கடும் உழைப்பாளி.தலை மிகவும் அறிவும் ஆற்றலும்,நகைச்சுவையும் நிறைந்தது.
ஆகவே குறை சொல்ல முடியாது.
அனைத்தயும் பார்த்து விட்டவர்.
அவரைவிடச் சிறந்தவர் இல்லை என்பதால் ஆள்கிறார்.

Selvaraj சொன்னது…

அது சரி said...

ஐயா,

இந்தியா என்பதே பல மாநிலங்களின் கூட்டமைப்பு தானே?? இதில் மாநில கட்சிகள் மத்தியில் பதவி பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும்?? இதில் மிரட்டி பதவி வாங்குகிறார்கள் என்று வருத்தப்பட முடியுமா??

"இந்தியாவில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என இருக்கின்றனவே. பலமுறை மாநில கட்சிகள், ஆளும் கட்சிகளுக்கு ஆதரவு தருவதை மறுபரிசீலனை செய்யவேண்டிவரும் என கூறுவதை கேட்கிறோமல்லவா! இது ஒருவகை மிரட்டல்தானே!"

Selvaraj சொன்னது…

Thamizhan said...
வேறு காரணங்களைச் சொல்லுங்கள் ஆனால் நாற்காலியைச் சொல்லுவது மனித நேயம் அல்ல.
பிரான்க்லின் ரூசுவெல்ட் நாற்காலி இரண்டாம் உலகப் போரை நடத்தியது.
நேரு,நரசிம்மர்,ஆன் டென்னா வை மாற்றச் சொன்னதிற்கு அந்தோனியை மாற்றிய ஆட்சிகள் நடந்துள்ளன்.
கடும் உழைப்பாளி.தலை மிகவும் அறிவும் ஆற்றலும்,நகைச்சுவையும் நிறைந்தது.
ஆகவே குறை சொல்ல முடியாது.
அனைத்தயும் பார்த்து விட்டவர்.
அவரைவிடச் சிறந்தவர் இல்லை என்பதால் ஆள்கிறார்.

"முதல்வர் அறிவாளி இல்லையென்று சொல்லவில்லை. அன்னை சோனியா நம் பிரதமரை இயக்குவதைப்போல, முதல்வர், ஸ்டாலினை முதல்வராக்கிவிட்டு வீட்டிலிருந்து இயக்கலாமே?"

Unknown சொன்னது…

மானங்கெட்ட பிழைப்பு, இதைவிட நாக்கை பிடுங்கிகொண்டு சாகலாம்--வாஹே குரு

Selvaraj சொன்னது…

Wahe Guru said...

மானங்கெட்ட பிழைப்பு, இதைவிட நாக்கை பிடுங்கிகொண்டு சாகலாம்--வாஹே குரு
26 May 2009 05:44

//முதல் இரண்டு வார்த்தைகளும் பெரும்பாலும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!