பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.
.
Loading...
வெள்ளி, 29 மே, 2009
கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
நான் எனது முந்தைய பதிவான "நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?" http://tamilcatholican.blogspot.com/2009/05/blog-post_23.htmlவில் முதல்வர், தனது மகனை முதல்வராக்க வேண்டுமென சொல்லியிருந்தேன். ஆனால் முதல்வராக்காவிட்டாலும் குறைந்தபட்சம் துணை முதல்வராகவாவது ஆக்கியுள்ளார். அதற்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். இன்னும் கொஞ்சம் நாட்களில் ஸ்டாலின் முதல்வரானாலும் ஆவார். இது வெள்ளோட்டமாககூட இருக்கலாம். இருந்தாலும் முதல்வர் தன பதவியை துறப்பது இளைய சமுதாயத்திற்கு அவர் செய்யும் ஒரு பெரிய தியாகமாக இருக்கும். அவர் வீட்டில் இருந்தாலும்கூட அவரின் ஆலோசனையின்படிதான் ஸ்டாலின் செயல்படுவார். ஏன்? தி.மு.க வே அவர் மறையும்வரை தலைவராகவே வைத்துக்கொள்ளும். அதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.
இன்றுதான் நாம் பார்க்கிறோமே! எடுத்ததற்கும் பிடித்ததற்கும் அன்னை சோனியாவின் அனுமதியில்லாமல் ஏதாவது காங்கிரசில் நடக்கிறதாவென்று? பிரதமராக மன்மோகன் சிங் இருந்தாலும், பிடி என்னவோ சோனியாவிடம்தான். அதுமாதிரிதான் இதுவும். இருந்தாலும் கஷ்டப்பட்டு நகரும் நாற்காலியிலிருந்து நாடாளுவதிலிருந்து கொஞ்சம் விடுதலை. முழுவதுமாக விடுதலை கிடைத்திட முதல்வர், முதல்வர்,பதவியை முழுவதுமாக மகனுக்கு வழங்கிவிட வேண்டும். வழங்குவார்! அதுதானே அவரின் விருப்பமும்!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!
0 கருத்துகள் :
கருத்துரையிடுக