.

Loading...

சனி, 30 மே, 2009

மாசு- கட்டுப்பாடு: கண்காணிக்க மின் மீன்!

மாசு-கட்டுப்பாடு: கண்காணிக்க மின் மீன்!



இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியானது சில வருடங்களுக்கு முன்பு நாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாதவைகளை இன்று நிகழ்த்திக் காட்டுகிறது. அதில் ஒன்றுதான் இந்த மின் மீன்.
பார்ப்பதற்கு நிஜ மீன் போலவே காட்சியளிக்ககூடிய இந்த மின் மீனானது கடலில் ஏற்படும் மாசை கண்காணிக்க உருவாக்கப்பட்டுள்ளது. கப்பல்களில் ஏற்படும் எண்ணை கசிவை இவை எளிதில் கண்டுபிடிக்க பயன்படும். தற்போது ஐந்து மின் மீன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை WIFI தொழில்நுட்பம் மூலமாக செயல்படும். இவை ஸ்பெயின் நாட்டிலுள்ள கிஜோன் துறைமுகத்தில் மாசு படுவதை கண்காணிக்க விடப்படவுள்ளது. இதை உருவாக்கியவர் இங்கிலாந்த்தின் எஸ்செக்ஸ் பல்கலைகழகத்தில் பணிபுரியும் ஜப்பானை சேர்ந்த பேராசிரியர் Huosheng Hu. இதனை ஏற்கனவே லண்டனில் உள்ள மீன்காட்சி சாலையில் ஓடவிட்டு நிருபித்துள்ளனர். ஆக நிஜ மீன்போல கடலில் இவை நீந்திக்கொண்டிருக்கும். ஒரு மின் மீனை உருவாக்க இருபதாயிரம் பிரிட்டிஷ் பவுண்ட் செலவாகும். இதன் நீளம் 1.50 மீட்டர்.அதுசரி! இதே தொழில்நுட்பத்தை வைத்து கப்பல்களை தகர்த்தும் விட வாய்ப்பிருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் நம் வீட்டில் பறக்கும் ஈ கூட நம்மை கண்காணிக்கும் கருவியாக இருக்கலாம்.

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!