.

Loading...

செவ்வாய், 19 மே, 2009

பேருந்து நிலையத்தில் போக்கிரிகள்!

பேருந்து நிலையத்தில் போக்கிரிகள்!
இது திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம்..
நான் அப்போது அரபு நாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம். பொதுவாகவே அரபு நாடுகளில் பணிபுரிபவர்கள் ஊருக்கு செல்வதென்றால் முன்பே வீட்டிற்கு தெரியப்படுத்தி குடும்ப சகிதம் விமான நிலையத்தில் வரும்படி செய்வார்கள். நம் வீட்டாரோ நாம் செல்வதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே அங்கே ஆஜராகி விடுவார்கள்.
இந்த விசயங்களைபற்றி நண்பர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டிற்கு, என்று வருகிறோம் என சொல்லாமல், நாமே பேருந்தை பிடித்து வீட்டிற்கு செல்ல வேண்டுமென முடிவெடுத்தோம். இந்த முடிவின்படி நான்தான் முதலில் ஊருக்கு செல்ல ஆயத்தமாக இருந்தேன். இது எனக்கு ஒரு பெரிய பிரட்ச்சனை என தோன்றவில்லை காரணம் நான் நிறைய பொருட்களை வாரி கொண்டுபோகும் பழக்கம் உடையவனல்ல. அதுமட்டுமல்ல
திருவனந்தபுரத்திலிருந்து இரண்டு மணி நேரத்தில் வீட்டை அடைந்துவிடலாம்.

சரி, இனி விசயத்திற்கு வருவோம்.

நான் என்னால் தூக்கி செல்லும்படியான ஒரு பெட்டியுடன் விமானநிலையத்திலிருந்து ஆட்டோ ரிக்சா மூலம் திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தை அடைந்தேன். ஏற்கனவே நின்றுகொண்டிருந்த நாகர்கோயில் பேருந்தில் ஏறவும், என்பின்னால் வந்து பெட்டியை நீ பேருந்தில் ஏற்றக்கூடாதென ஒருவர் சொன்னார். இதென்னடா பைத்தியம்! என நினைக்கவும், அவன் சொன்னான் இங்கு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள்தான் வண்டியில் பொருட்களை ஏற்றவோ இறக்கவோ முடியும் என்றான். நான் இது என்னுடைய பெட்டி உன் உதவி எனக்கு தேவை இல்லை. நானே ஏற்றிககொள்கிறேன் என்றேன். அவன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் எனக்கும் அவனுக்கும் பெரிய வாக்குவாதம் நிகழ ஆரம்ப்பித்துவிட்டது. இதற்கிடையில் அவனுடைய தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் நிறைய பேர் கூடிவிட்டனர். எல்லோருமே நீ பெட்டியை பேருந்தில் ஏற்றக்கூடாது. நாங்கள்தான் ஏற்றுவோம். அதற்கான கூலியை நீ கொடுக்க வேண்டுமென! என்னுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமல்ல மலையாளம் தெரிந்ததால் நானும் விட்டுக்கொடுக்கவில்லை. என்னை சுற்றி ஒரு பெரிய கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. ஒருவரும் அவர்களுக்கு எதிராக குரல்கொடுக்கவில்லை. சிலர் என்னிடம் சொன்னார்கள் அவர்கள் கேட்பதை பேசாமல் கொடுத்துவிட்டு போ என்றார்கள்.

நான் விடாப்பிடியாக இருக்கவும் அவர்கள் சொன்னார்கள். சரி உன் பெட்டியை நீ ஏற்றிக்கொள் ஆனால் எங்களுக்கான கூலியை நீ தந்துதான் ஆகவேண்டுமென! நான் போலீசிடம் சொல்வேன் என்றேன். கூட்டத்திலிருந்து ஒருவன் சொன்னான் போலீஸ் அவர்களை ஒன்றும் செய்யாது. அவர்களுக்கு இது தெரிந்துதான் நடக்கிறது. நீ பேசாம கேட்கிற பணத்தை கொடுத்துகிட்டு போ என்றான்.

நல்லவேளையாக இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போது என்னுடைய ஒரு உறவுக்காரர் நாகர்கோயில் திருவனந்தபுரம் பேருந்தை ஒட்டிக்கொண்டிருந்தவர் அங்கு வந்து சேர்ந்தார். எனக்கு பாதி உயிர் வந்தமாதிரி இருந்தது. அவருக்கு இந்த அடாவடிகளின் செயல் ஏற்கனவே தெரிந்ததால், என் பெட்டியை அவரே பேருந்தில் ஏற்றபோனார். அதுவரை துள்ளிக்கொண்டிருந்தவ்ர்கள் அடங்கி போனார்கள். பின்னாலே வந்து, சார்! சாயை குடிக்கவாவது காசுதரும்படி கேட்டார்கள். எதோ டீ குடிக்க காசு கொடுத்தேன். ஆனால் ஒரு நிபந்தனையின் படி. இப்போது என் பெட்டியை நீ வண்டியில் ஏற்று தருகிறேன். அப்படி ஏற்றிய பின்தான் கொடுத்தேன்.

பின்னர் இதைப்பற்றி விசாரித்தபோது மேலும் பல சம்பவங்கள் இதைப்போல அடிக்கடி நடப்பதாக சொன்னார்கள். குறிப்பாக வெளி மாநிலத்தவர்களை இவர்கள் இப்படி குறிவைத்து பணம் பறித்து விடுகிறார்கள். நம் பெட்டி, நாம் ஏற்றுகிறோம். இவனென்ன இடையில்! என தோன்றலாம். ஆனால் இந்த பொறுக்கிகளிடம் இவை ஒன்றும் எடுபடாது. இது ஒரு மாநிலத்தின் தலைநகருக்கு தலைகுனிவு என்பதுதான் உண்மை.

15 கருத்துகள் :

Unknown சொன்னது…

கம்யூனிஸ்ட்கள் ஒரு மாநிலத்தை ஆண்டால் இந்த லட்சணத்தில் தான் இருக்கும்...இதற்கு தானே இந்த தேர்தலில் அவர்களுக்கு விழுந்தது செருப்படி

வினோத் கெளதம் சொன்னது…

இதே மாதிரி கூட அநியாயம் நடக்குதா..

dondu(#11168674346665545885) சொன்னது…

இதற்குப் பெயர் தலைக்கூலி. இந்த கேடு கெட்ட கம்யூனிஸ்டுகள் இம்மாதிரி கூலிகளுக்கு உரிமைகளை மட்டும் பெரிதாகச் சொல்லிக் கொடுத்து கடமைகளை பற்றி கண்டு கொள்ளாமல் விட்டதன் பலனே இம்மாதிரி கூலிகளை அதிகாரப் பிச்சைக்காரர்களாக்கியுள்ளனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சொல்லரசன் சொன்னது…

இதற்கு பெயர்தான் பார்வைகூலி என்று வேள்விபட்டுஇருக்கிறேன்,
இது தோழர்களிடையே சகஜம்.

ரவிஷா சொன்னது…

இதை நான் பல வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டிருக்கிறேன்! அதுவும் ஒரு மலையாளி மூலமாக! பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு ஸ்டாண்டிலோ அல்லது ஸ்டேஷனிலோ வேலை செய்யும் கூலிகளைத் தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று! அதனால் தான் கேரளா ஒரு மோசமான மாநிலமாக இருக்கிறது என்றும் சொன்னான்!

தமிழ். சரவணன் சொன்னது…

//ஆனால் இந்த பொறுக்கிகளிடம் இவை ஒன்றும் எடுபடாது. இது ஒரு மாநிலத்தின் தலைநகருக்கு தலைகுனிவு என்பதுதான் உண்மை.//

இதுமாதிரி இடத்தில் தான் அரசியல் வாதி உருவாகின்றான்(நம்மிடம் உருவுகின்றான்) இது போல் கூட்டத்துக்கு சில காவலர்களும் உடந்ததையாக இருப்பது தான் நமக்கு பேரிடீ... ஆமாம் இது போல் சம்பாதித்து வயிற்றைக்கழுவும் கூட்டத்தால் எப்படி நிம்மதியாக உறங்க முடிகின்றது?

Joe சொன்னது…

சரியா மாட்டினீங்க போங்க!

சென்னை விமான நிலையத்தில் ஒரு முறை டாக்ஸி ஏற்பாடு செய்தவர் (அல்லது அந்த நிறுவனத்தின் புரோக்கர்) எனது ட்ராலியை தள்ளி வந்தார், நான் வேண்டாம் என்று சொல்லியும். பெட்டிகளை ஏற்றியபிறகு டாக்ஸியில் கேட்டார் பாக்கணும் "பத்து டாலர் கொடுங்க சார்". நான் டாலர்கள் புழங்கும் நாட்டுக்கு சென்று வரவில்லையென்றாலும் விடவில்லை. அப்புறம் பத்து ரூபாய் கொடுத்த பின்பு முனகியபடியே போனார். ;-)

Selvaraj சொன்னது…

Kamal said...

கம்யூனிஸ்ட்கள் ஒரு மாநிலத்தை ஆண்டால் இந்த லட்சணத்தில் தான் இருக்கும்...இதற்கு தானே இந்த தேர்தலில் அவர்களுக்கு விழுந்தது செருப்படி

கம்யூனிஸ்ட் கட்சி தோற்றாலும் இந்த பொறுக்கிகளை மாற்றமுடியாது என்பதுதான் உண்மை.

Selvaraj சொன்னது…

Vinoth Goutham said...

இதே மாதிரி கூட அநியாயம் நடக்குதா..

இது அங்கு சகஜமென கேள்விப்பட்டேன்.

Selvaraj சொன்னது…

Dondu Raghavan said...

இதற்குப் பெயர் தலைக்கூலி. இந்த கேடு கெட்ட கம்யூனிஸ்டுகள் இம்மாதிரி கூலிகளுக்கு உரிமைகளை மட்டும் பெரிதாகச் சொல்லிக் கொடுத்து கடமைகளை பற்றி கண்டு கொள்ளாமல் விட்டதன் பலனே இம்மாதிரி கூலிகளை அதிகாரப் பிச்சைக்காரர்களாக்கியுள்ளனர்.

"நிஜமாகவே இவர்கள் அதிகார பிச்சைக்காரர்கள்தான்".

Selvaraj சொன்னது…

சொல்லரசன் said...

இதற்கு பெயர்தான் பார்வைகூலி என்று வேள்விபட்டுஇருக்கிறேன்,
இது தோழர்களிடையே சகஜம்.

"தோழர்களின் பார்வைக்கே கூலியா"?

Selvaraj சொன்னது…

ரவிஷா said...

இதை நான் பல வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டிருக்கிறேன்! அதுவும் ஒரு மலையாளி மூலமாக! பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு ஸ்டாண்டிலோ அல்லது ஸ்டேஷனிலோ வேலை செய்யும் கூலிகளைத் தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று! அதனால் தான் கேரளா ஒரு மோசமான மாநிலமாக இருக்கிறது என்றும் சொன்னான்!

"அவர் உண்மையை சொல்லியுள்ளார்".

Selvaraj சொன்னது…

தமிழ் சரவணன் said...
இதுமாதிரி இடத்தில் தான் அரசியல் வாதி உருவாகின்றான்(நம்மிடம் உருவுகின்றான்) இது போல் கூட்டத்துக்கு சில காவலர்களும் உடந்ததையாக இருப்பது தான் நமக்கு பேரிடீ... ஆமாம் இது போல் சம்பாதித்து வயிற்றைக்கழுவும் கூட்டத்தால் எப்படி நிம்மதியாக உறங்க முடிகின்றது?

"இவர்களால் பாதிக்கப்படுபவர்களுக்குத்தான் நிம்மதியாக தூங்க முடியாதே ஒழிய! இவர்களுக்கு நிம்மதியாக தூங்க முடியும். ஏனெனில் இவர்களுக்கு பிழைப்பே இதுதானே".

Selvaraj சொன்னது…

Joe Said...
சரியா மாட்டினீங்க போங்க!

சென்னை விமான நிலையத்தில் ஒரு முறை டாக்ஸி ஏற்பாடு செய்தவர் (அல்லது அந்த நிறுவனத்தின் புரோக்கர்) எனது ட்ராலியை தள்ளி வந்தார், நான் வேண்டாம் என்று சொல்லியும். பெட்டிகளை ஏற்றியபிறகு டாக்ஸியில் கேட்டார் பாக்கணும் "பத்து டாலர் கொடுங்க சார்". நான் டாலர்கள் புழங்கும் நாட்டுக்கு சென்று வரவில்லையென்றாலும் விடவில்லை. அப்புறம் பத்து ரூபாய் கொடுத்த பின்பு முனகியபடியே போனார். ;-)

"நான் சென்னை மற்றும் திருவனந்தபுரம் விமானநிலையங்கள் வழியாக பலமுறை வந்த்துள்ளேன். இருந்ததாலும் சென்னை எவ்வளவோ மேலுங்க! சென்னையில் நீங்க கொடுத்ததை வாங்கிகிட்டு போனானே அதே பெருசுதான்".

Selvaraj சொன்னது…

Kripa said...
You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

உங்கள் வாழ்த்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!