வலைப்பூக்களில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் இன்று பெண்களும் அதில் நுழைந்து கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் முஸ்லீம் பெண்களும் நிறைய இருக்கிறார்கள் என்பது இன்னும் நல்ல விஷயம். காரணம் முஸ்லீம் பெண்களுக்கு நிறைய கெடுபிடிகள் இருக்கும்.
உலகம் முழுவதும் இணையம் பிரபலமாகிய நேரம், அதை முஸ்லீம் நாடான சவுதி அரேபியாவில் நுழைய விடவில்லை. காரணம் அதன் தீமைகளையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். பின்னர் நீண்டகால இடைவெளிக்கு பிறகு பஹ்ரைன் நாட்டின் வழியாக இந்த இணைய வசதியை பயங்கர தணிக்கையுடன் வழங்கி வந்தார்கள். உருப்படியாக ஒரு தளத்தையும் பார்க்கமுடியாது.
செக்ஸ் மற்றும் பிற சமயம் சார்ந்த தளங்கள் எல்லாம் திறக்கவே செய்யாது. இணையமும் அன்றைய வேகத்தில் ஒரு பக்கம் திறப்பதற்குள் ஒரு காஃபி போட்டு குடித்து முடித்து விடலாம். இதில் அரபு நாடுகளில் பெண்கள் இணையத்தை பயன்படுத்தாதபடிக்கு என்னவெல்லாமோ செய்தார்கள். இணையத்தில் பெண்களை உலவவிட்டால் பிற ஆடவருடன் பழகும் வாய்ப்பு ஏற்படும் என சொல்லியிருந்தார்கள். குவைத்தில் முஸ்லீம் மதகுருவால் Fatwa(பத்வா) கூட வழங்கப்பட்டது.

அந்த மாதிரி தடைகளையும் தாண்டி முஸ்லீம் பெண்கள் இன்று தங்கள் திறமைகளை வலைப்பூவின் வழியே வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதில் இவர்களுக்கு வரும் பின்னூட்டங்கள் எல்லாம் குறிப்பிட்ட பதிவு சம்பந்தமானதாகத்தான் இருக்கிறதா? என்றால் இல்லை! என்றுகூட சொல்லலாம். இந்த பெண்களுக்கு பின்னூட்டமிடும் விசயத்தில் ஆண்கள் கொஞ்சம் அதிகமாகவே செயல்படுகிறார்கள். இது ஆரம்ப காலத்து யாகூ மெசஞ்சரை ஞாபக படுத்துகிறது. இருந்தாலும் வலைப்பூக்கள் இவர்களுக்குள் மறைந்திருந்த திறமையை இன்று உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது என்பது, மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை.
4 கருத்துகள் :
//பிற சமயம் சார்ந்த தளங்கள் எல்லாம் திறக்கவே செய்யாது.// பயம்தான் காரணம்.
Robin
//பிற சமயம் சார்ந்த தளங்கள் எல்லாம் திறக்கவே செய்யாது.// பயம்தான் காரணம்.
//உங்கள் கருத்திற்கு நன்றி! ஆனால் இப்போது நிறைய பிற சமய தளங்களும் திறக்கின்றன!//
//இந்த பெண்களுக்கு பின்னூட்டமிடும் விசயத்தில் ஆண்கள் கொஞ்சம் அதிகமாகவே செயல்படுகிறார்கள். இது ஆரம்ப காலத்து யாகூ மெசஞ்சரை ஞாபக படுத்துகிறது.//
உங்களுக்காவது பதிவு சம்மந்தப்பட்ட பின்னூட்டம் மாத்திரமே வந்து சேர பிரார்த்திக்கின்றேன்.
சென்ஷி
உங்களுக்காவது பதிவு சம்மந்தப்பட்ட பின்னூட்டம் மாத்திரமே வந்து சேர பிரார்த்திக்கின்றேன்.
//உங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி!//
கருத்துரையிடுக