.

Loading...

சனி, 29 ஆகஸ்ட், 2009

மறைந்து போகும் அம்மா, அப்பா, மாமா, மாமி வார்த்தைகள்!

மறைந்து போகும் அம்மா, அப்பா, மாமா, மாமி, சித்தப்பா, சித்தி வார்த்தைகள்!

இன்னும் கொஞ்சம் நாட்களில் தமிழில் இந்த வார்த்தைகள் மறைந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. யாருமே பிள்ளைகளுக்கு இந்த வார்த்தைகளை தமிழில் சொல்லி கொடுப்பதில்லை. மம்மி, டாடி, அங்கிள், ஆன்டி என்றே சொல்லிக்கொடுக்கிறார்கள். நாமும் பிள்ளைகள் மம்மி, டாடி, அங்கிள், ஆன்டி என அழைத்தால், உள்ளம் குளுர்ந்து விடுகிறோம். அழகிய தமிழ் வார்த்தைகளான அம்மா, அப்பா மறைந்து வருகிறது. அது இப்போது மம்மி, டாடி என உருமாறி இருக்கிறது.

இங்கிலாந்தில் பிள்ளைகள் மம்மி, டாடி என்றும் அழைப்பதில்லை. மம், டட் என்று தான் அழைக்கிறார்கள். எனவே மம்மி, டாடி என்று சொல்லிக்கொடுப்பவர்கள், இன்னும் கொஞ்சம் நாகரீகமாக இங்கிலாந்து பிள்ளைகளை போல மம், டட் என சொல்ல சொல்லிக்கொடுக்கலாம். நாம்தாம் நம் கலாச்சாரத்திலிருந்து மாறி வருகிறோமே! நான் ஏன் இந்த பதிவை எழுதினேன் என்றால், என் மகனின் கூட படிக்கும் எட்டு வயது பிள்ளைகள்கூட என்னை காணும்போது "மிஸ்டர் ராஜ்" என்று தான் அழைக்கும். ஒரு வெள்ளைக்கார பிள்ளையும் அங்கிள் என அழைப்பதில்லை. ஆக, வெள்ளைக்கார பிள்ளைகள் எல்லா பெரியவர்களையும் இப்படித்தான் அழைக்கிறது. நமது இந்திய பிள்ளைகள்தான் அங்கிள் என்றாவது அழைக்கும்.

என் வீட்டிற்கு பால் கொண்டுவரும் வெள்ளைக்காரனை, அங்கிள் என்றே அழைக்க, என் பிள்ளைகளுக்கு சொல்லிகொடுத்திருந்தேன். பிள்ளைகளும் அப்படியே அழைக்கும். பெரும்பாலும் இந்த பால்காரனை பார்ப்பது கிடையாது. காரணம் வீட்டின் முன்பு பாலை வைத்துவிட்டு போய்விடுவான். சில நேரங்களில்தான் இவனை பார்க்க முடியும். இப்படி ஒருமுறை பார்க்கும் போது சொன்னான். ஒரு வெள்ளைக்கார பிள்ளையும் என்னை அங்கிள் என அழைப்பதில்லை. "மில்க் மேன்" என்று தான் அழைக்கும். உன் பிள்ளைகள் அங்கிள் என அழைப்பது கேட்க சந்தோசமாக இருக்கிறதென்று.

இதைப்போல இன்று அங்கிள், ஆன்டி என சொல்லும் நம் பிள்ளைகளும், நாளை அதற்கு பதிலாக மிஸ்டர், மிசெர்ஸ் என அழைக்க தொடங்கலாம். ஏதாவது பிள்ளை தப்பி தவறி
மாமா, மாமி, சித்தி, சித்தப்பா என அழைத்தால், அப்போது இந்த பால்காரனைப்போல நாமும் இப்படி சந்தோசப்படக்கூடிய வாய்ப்புள்ளது.

இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் வருகைதரும்படி கேட்டுக்கொள்ளும் செல்வராஜ்!!

2 கருத்துகள் :

நிலாமதி சொன்னது…

உண்மையினை கதையாக சொன்னவிதம் அழகு ......

Selvaraj சொன்னது…

நிலாமதி

உண்மையினை கதையாக சொன்னவிதம் அழகு ......

//உங்கள் கருத்திற்கு நன்றி!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!