.

Loading...

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ரயில் பயணசீட்டை வாங்கும்போது பாக்கிபணத்தை எண்ணவும்!

ரயில் பயணசீட்டை வாங்கும்போது பாக்கிபணத்தை எண்ணவும்!

இது ரயில் பயணசீட்டு கொடுப்பவருடன் சிலகாலம் தங்கியிருந்தவர் சொல்லியது.

நம் எல்லோருக்கும் தெரியும் பயணசீட்டு பெறுவதற்கு ஒரு பெரிய கூட்டம், காலை மற்றும் மாலைவேளைகளில் இருப்பது. இந்த நெருக்கத்திற்கு இடையில் பயணசீட்டை பெற்றுக்கொண்டு ரயிலை பிடிப்பதற்கு ஓடும்போது, யாரும் பொதுவாக பாக்கி பணத்தை எண்ணுவது கிடையாது. அப்படி எண்ணத் தொடங்கினாலும் பின்னால் நிற்பவர்கள் கத்த தொடங்கிவிடுவார்கள். காரணம் அவர்களும் அதே ரயிலை பிடிக்கவேண்டி நிற்பவர்கள்தான். இதனாலேயே பெரும்பாலானவர்கள், தங்கள் மீதி பணத்தை எண்ணுவது கிடையாது. சிலர் அப்படி எண்ணினால் மதிப்பு குறைந்து விடும் என்றுகூட எண்ணுவார்கள்.

இந்த அவசர சூழ்நிலையை பயன்படுத்தி, வேண்டுமென்றே சில்லறையை குறைத்து கொடுக்கும் பயணசீட்டு கொடுப்பவர்களும் உண்டு. அப்படி வேண்டுமென்றே குறைத்து கொடுக்க கூடியவருடன்தான் இதை சொல்லியவர் சிலகாலம் தங்கி இருந்தார். அப்போது அவர் பெரும்பாலானவர்கள் இப்படி ஈடுபடுவதாக சொல்லியிருக்கிறார். ஆனால் எல்லோரும் அல்ல! ஆகவே நல்ல பயணசீட்டு கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல இவர்கள் இப்படி செய்யும்போது யாராவது திரும்ப பணம் குறைவு
என்று சொன்னால் sorry! என எளிதாக சொல்லி மீதியை சரியாக கொடுத்து விடுவார்களாம். ஆனால் ரயிலில் போய் உட்கார்ந்த பின்னர், ஐந்தோ பத்தோ குறைவு என்று சொல்லி யாரும் இறங்கி போய் திரும்ப பாக்கியை கேட்க மாட்டார்கள். இதை சாக்காக வைத்தே இப்படி வேண்டுமென்றே குறைத்து கொடுப்பார்களாம் சிலபேர்.

இதில் தவறு நம்மிடமுண்டு. மீதி பணத்தை சரியாக இருக்கிறதா? என எண்ணிப்பார்த்த பின்னர்தான் அங்கிருந்து போகவேண்டும். காரணம் ஏமாளிகள் இருப்பதால்தான் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள்.

நீங்கள் ஏன் ஏமாளியாக இருக்கவேண்டும்?


என்னுடைய இந்த பதிவை படித்த உங்களுக்கு நன்றி! மீண்டும் வருக!

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!