காஃபி டு விவாகரத்து!
இன்றைய நாகரீக உலகில் விவாகரத்தின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. என்ன காரணத்திற்காக விவாகரத்து கேட்கிறோம் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்கொண்டிருக்கிறது.
அதற்கு இது ஒரு உதாரணம்.
பையனுக்கு மும்பையில் வேலை. பெண்ணும் படித்தவள். திருமணமான இரண்டு வாரங்களிலேயே இருவரும் மும்பை சென்றுவிட்டனர். மனைவி இப்போதுதான் முதல்முறையாக மும்பை வருகிறாள். மும்பையை அடைந்தவனுக்கு அடுத்த நாளே வேலைக்கு போகவேண்டிய கட்டாயம். எனவே மனைவியிடம் யார் வந்தாலும் கதவை திறக்காதே! என சொல்லிவிட்டு போய் விட்டான்.
கணவன் மாலை வீடு திரும்பும் நேரமானதும், மனைவி காஃபி பொடியை தேடியிருக்கிறாள். வீட்டில் காஃபி பொடி இல்லை. கணவனுக்கோ காஃபியில் கொள்ளை பிரியம். கணவன் வந்ததும் காஃபி கொடுத்து அசத்தனும் என நினைத்தவளுக்கு இது ஒரு ஏமாற்றமாக போய் விட்டது. ஆனால் வீடு இருந்த அதே தெருக்கோடியில் கடை இருந்திருக்கிறது. உடனே அவசரஅவசரமாக காஃபி பொடி வங்கபோயிருக்கிறாள். கடை தெருக்கோடியில் உள்ளதால் வீட்டை திறந்து போட்டுக்கொண்டே போயிருக்கிறாள். இதற்கிடையில் கணவன் வந்திருக்கிறான். வீடு திறந்து கிடக்கிறது. மனைவி இல்லை! அவன் பதறி விட்டான். இப்படி பதட்டத்தோடு மனைவியை தேடும்போது, அவள் காஃபி பொடியுடன் சந்தோசமாக வந்திருக்கிறாள்.
கோபம்கொண்ட கணவன் நான் கதவை திறக்ககூடதென சொல்லிக்கொண்டு போனபிறகும், நீ ஏன் வெளிய போனாய்? என தொடங்கிய பிரச்சினை கடைசியாக விவாகரத்துவரை வந்து விட்டது. நல்ல வேளையாக நல்ல ஒரு Counsellor இந்த வழக்கில் சம்பந்தபட்டதால் இருவரும் பிரியாமல் மீண்டும் ஒற்றுமையாக போய்விட்டார்கள். இதற்கெல்லாம் விவாகரத்து தேவையா? குடும்பம் என்றால் நிட்சயமாக பிரச்சனைகள் இருக்கும். குடும்பத்திலுள்ள எல்லா பிரட்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காணலாம். அது சரி, மனைவிதான் காஃபி போடணுமா என்ன?
0 கருத்துகள் :
கருத்துரையிடுக