.

Loading...

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

முதன்முதலில் ஒரு பெண்ணோடு நடனமாடியபோது!!

முதன்முதலில் ஒரு பெண்ணோடு நடனமாடியபோது!!

நான் பக்ரைனில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது நான் தங்கியிருந்த கட்டிடத்தில் சில பிலிப்பின்ஸ் நாட்டை சேர்ந்தவர்களும் இருந்தார்கள். நான் அக்கட்டிடத்தின் மேலாளராக இருந்ததால் அங்கு வசிப்பவர்கள் எல்லாருமே நண்பராகவே இருந்தனர். கிறிஸ்துமஸ் என்றாலே வெள்ளைகாரனுக்கு மிச்சமாக கொண்டாடுபவர்கள் இந்த பிலிப்பின்ஸ் நாட்டவர். (உலகத்திலேயே அதிக கிறிஸ்தவர்களை கொண்ட நாடும்கூட)

அந்த கட்டடத்திலே ஒரு வீட்டை மூன்று பெண்கள் மட்டுமே வாடகைக்கு எடுத்திருந்தனர். என்னை அவர்களின் வீட்டில் நடக்கவிருந்த கிறிஸ்துமஸ் விருந்திற்கு அழைத்திருந்தனர். இதற்கு முன்பு வேறு நாட்டவர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டதுமில்லை.
நான் சென்றதும் என்னை மற்ற நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தனர். அதிலும் ஆண்களைவிட பெண்களே அதிகமாக இருந்தனர். அதற்கு முன்பு வெள்ளைகாரிகள்தான் சிகரெட் பிடிப்பார்கள் என நினைத்திருந்ததை தவறென நிருபித்துக்கொண்டிருந்தனர். எனக்கும் புகைக்கும் ரெம்ப தூரம். எங்கே! போய் விடலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால் ஆசை யாரைவிட்டது. எல்லாம் சின்ன பொண்ணுகள் எனக்கும் அப்போது திருமணமாகவில்லை. பெரிய ஆள் போல இருந்துகொண்டேன்.

ஆக, அந்த மொத்த கூட்டத்திலும் பளிச்சென்று நான் மட்டும்தான் ஒரு கறுப்பன் இருந்தேன்.
சிறுது நேரம் ஆகியபின்னர் மியூசிக் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆடத்தொடங்கினர். நான் அதை பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். யாருடனும் போய் ஆடக்கூடிய தைரியமில்லை.
நான் தனியாக இருப்பதை பார்த்ததும், அந்த மூன்றுபேரில் ஒருத்தி என்னை இழுத்துக்கொண்டு போய்விட்டாள். அப்புறம் என்ன ஒரே நடனம்தான். வெறும் இரண்டு நிமிடம் தான் ஆகியிருக்கும் பெல்லடித்து கதவும் தட்டப்பட்டது.

கதவை திறந்த பெண்கள் பயந்து விட்டனர். காரணம் இரண்டு போலீஸ்காரர்கள் வந்திருந்ததுதான். நடனம் நிறுத்தப்பட்டது. வீட்டில் மயாண அமைதி. அலங்காரங்கள் மட்டும் மின்னிக்கொண்டிருந்தன.

யாரோ போலீசிற்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். வீட்டின் உரிமையாளர்கள் ஸ்டேஷன் வரவேண்டுமென கேட்டுக்கொண்டனர். பெண்கள் உடனே என்னிடம் வந்தனர். அக்கட்டிடத்தின் பொறுப்பு நீ என்பதால் நீ வந்தாலும் போதும் என்று சொல்லி, என்னை அழைத்து சென்றனர். காவல் நிலையம் மிக அருகிலேயே இருந்தது, நல்ல வேளையாக ஆய்வாளர் படித்தவர். அவரிடம், இது கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஜன்னல் கதவுகள் மூடப்பட்டே இது நடக்கிறது. அவர்கள் எங்களின் அனுமதியுடனே நடத்துகிறார்கள் என்று சொன்னேன். வேறு ஒன்றுமில்லை, கீழே வசிப்பவர்தான் எங்களுக்கு அழைத்து சொன்னார் நீங்கள் போகலாம். ஆனால் கொஞ்சம் சப்தத்தை குறைத்து கொள்ளுங்கள் என சொல்லிவிட்டார். எனக்கு உள்ளுக்குள் இருந்த பயம் அப்போதுதான் மாறியது.

இங்கே என் வரவுக்காக காத்திருக்கிறார்கள். நடந்ததை சொன்னேன். நாம் கொஞ்சம் சப்தத்தை குறைத்து கொள்ளனும் அவ்வளவுதான். மீண்டும் நடனம் தொடங்கியது. ஆனால் என்மனம் உனக்கெதுக்குடா நடனம் என கேட்டது. அழைத்த பெண்களிடம் நான் ஆடவில்லையென சொல்லிவிட்டேன். ஆனால் நிகழ்ச்சி முடியும்வரை நீ இருந்துதான் ஆக வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள்.(போலீஸ்காரர்கள் பயம்)

அதன்பின்னர் பெண்களோடு நடனமாடியதே கிடையாது.
என் பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் வருக!!

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!