.

Loading...

வெள்ளி, 17 ஜூலை, 2009

துபாயில் விபச்சாரம்! வெள்ளைக்காரன் கைது!!

துபாயில் விபச்சாரம்! வெள்ளைக்காரன் கைது!!




இங்கிலாந்தில் சில மாதங்களுக்கு முன்பு பரவலாக பேசப்பட்டு வந்த ஒரு செய்தி.

என்னால் இந்த செய்தியை நம்ப முடியவில்லை. காரணம் அரபு நாடுகளில் வெள்ளைக்காரனுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதுதான் உண்மை.
அதுமட்டுமல்ல கொலை, கொள்ளை, விபச்சாரம் என இதில் எல்லாம் ஈடுபட்டு பிடிபட்ட வெள்ளைக்காரரல்லாம் எந்த பாதிப்பும் இல்லாமல் போய் விடுவார்கள். மொத்த நிறுவனத்தையுமே கொள்ளையடித்துப்போன வெள்ளையர்களுமுண்டு. அதனால்தான் எனக்கு இந்த செய்தியை நம்ப முடியவில்லை.

ஒரு முறை பக்ரைனிலுள்ள பௌலிங் சென்டெரில்(Bowling Centre) அதன் பின்புறத்தில் ஒரு வெள்ளைக்காரனும் பிலிப்பினோ பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது அங்குள்ள பாகிஸ்தானி காவலாளியால் பிடிக்கப்பட்டு காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது. வந்த காவல்துறையினர் வெள்ளைகாரனிடம் கைகுலுக்கிவிட்டு அவனை போக சொல்லிவிட்டனர். தடைப்பட்ட மீதி செக்ஸ்-ஐ வீட்டில் வைத்துகொள்கிறேன் என, அவளையும் கூட்டிக்கொண்டு போய்விட்டான். அதே நேரத்தில், அது ஒரு இந்தியனோ, பாகிஸ்தானியோ, இலங்கைகாரனோ அல்லது பங்க்ளதேஷியோ என்றால் நிலைமையே வேறு. இஸ்லாமிய முறைப்படி தண்டனையை அரங்க்கேற்றி விடுவார்கள். இப்படி வெள்ளைக்காரனுக்கு அரபு நாட்டில் ஒரு தனி மரியாதையே உண்டு.

சரி இதாவது விபச்சாரம். கொலை செய்தாலோ?

இது சில வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் ரியாத்திலுள்ள ராணுவ மருத்துவ மனையில் நடந்த சம்பவம். அங்கு நர்சாக வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிலிப்பினோ பெண்ணை, ஒரு வெள்ளைகாரி நர்ஸ் வேறு ஒரு பிலிப்பினோ நர்சுடன் சேர்ந்து கொலை செய்து விட்டாள். அங்குள்ள சட்டப்படி கைது செய்து மரண தண்டனை கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.

நேர்மையான தீர்ப்பு என்று தானே நினைக்கிறீர்கள். இனிதான் வெள்ளைக்காரனின் வேலை தொடங்கியது. அப்போது டோனி பிளயர் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தார். அப்பெண்ணின் தலை அங்கு உருண்டால், இங்கு டோனி பிளயரின் தலை உருளும் என்பதை அறிந்த டோனி பிளயர், தனி விமானத்தில் சென்று மரண தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக்காரியை தன்னோடு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். ஆக வெள்ளைக்காரனுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதுதான் அரபு நாட்டின் நிலை.

ஆனால் துபாயில் எப்படி, இப்படி சுற்றுலா சென்ற வெள்ளைகாரனையும், வெள்ளைக்காரியையும் (Michelle Palmer, 36, of Oakham, and Vince Acors, 34)கைது செய்து சிறையில் அடைத்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்தது. இவர்கள் அங்குள்ள ஒரு கடற்கரையில் திறந்த வெளியில் உல்லாசத்தில் ஈடுபட்டார்கள் என்பதுதான் பிரச்சினை. வெள்ளைக்காரர்களுக்கு விபச்சாரம் என்ன தப்பா? என்பதுதான் கேள்வி. என்ன இருந்தாலும் இந்த விசயத்தில் துபாய்க்கு ஒரு "ஜெ" போடலாம். கொஞ்சம் மாதங்கள் வெள்ளைக்காரனை உள்ளே வைத்துவிட்டுதான் வெளியே விட்டார்கள்!

4 கருத்துகள் :

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இப்படியா செய்தி!
இன்சா அல்லா!

Selvaraj சொன்னது…

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இப்படியா செய்தி!



//ஆமாங்க!//

Shabeer சொன்னது…

Inkeyum (kuwait) appithan. Avanukku oru sattam. Nammalukku oru sattam.

Selvaraj சொன்னது…

Shabeer said...
Inkeyum (kuwait) appithan. Avanukku oru sattam. Nammalukku oru sattam.

//கருத்துக்கு நன்றி ஷபீர்!

எல்லா நாட்டிலுமே சட்டம் ஆட்களை பார்த்துதான் செயல்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!