.

Loading...

ஞாயிறு, 19 ஜூலை, 2009

பன்றி காய்ச்சல்! மருத்துவர் பலி!!

பன்றி காய்ச்சல்! மருத்துவர் பலி!!




ஏற்கனவே இந்த பன்றி காய்ச்சலைப்பற்றி வலைப்புலிகள் எல்லாம் எழுதிவிட்டதால் வலைப் புழுவாகிய நான் அதைப்பற்றி எழுதவில்லை. ஆனால் இன்று காலை தேவாலயத்திற்கு சென்றபோது வழக்கமாக நுழைவாயிலில் வைக்கப்பட்டிருக்கும் தீர்த்த தண்ணீர் வைக்கப்படவில்லை. நான் ஏன் என்று பக்கத்தில் நின்ற வெள்ளைக்காரியிடம் கேட்டபோது, அவளுக்கும் தெரியவில்லை. திருப்பலி தொடங்க்கியபோது குருவானவர் சொன்னார், பன்றி காய்ச்சல் ஒருவரிடம் இருந்து வேறு ஒருவருக்கு எளுதில் பரவுவதால் சில முன் எச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக தீர்த்த தண்ணீர் வைக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, நற்கருணை நாவில் கொடுக்கப்படமாட்டாது. கையில் மட்டுமே கொடுக்கப்படும். ஒருவருக்கொருவர் சமாதானமும் சொல்லிக்கொள்ளும்போது, கைகுலுக்கி கொள்வதும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று.

எதற்காக இப்படி அதிரடி நடவடிக்கை என்றால், சில நாட்களுக்கு முன்னர் அறுபத்தி நான்கு வயதுள்ள ஒரு மருத்துவரே,
(Dr. மைக்கல் டே) இங்கு இந்த பன்றி காய்ச்சலுக்கு பலியானதுதான். இந்த காய்ச்சல் வராமல் எப்படி தடுப்பதென ஆலோசனை சொல்லக்கூடிய ஆசானுக்கே அடி சறுக்கியதால் அதிர்ந்து போன அரசு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே இதைப்பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து வெளியிடப்பட்டாலும், அரசு சரியாக இதை கையாளவில்லை என, "நேஷனல் ஹெல்த் சர்வீஸ்" குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்னடைவை கண்டுள்ள இங்கிலாந்தின் பிரதமர் எதை தின்னால் பித்தம் தெளியும் என்னும் நிலைமையில் இருக்கும்போது, இது வேறு பிரச்சனை. பாவம் மனிதர் ஆடிப்போயுள்ளார்.

என்ன இருந்தாலும், இன்று மத சடங்குகள் சம்பிரதாயத்திற்கு நடந்தாலும் அதிலும் இதைப்போல் அதிரடி நடவடிக்கை தேவைதான்.



இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் நீங்கள் வரவேண்டுமென விரும்பும் செல்வராஜ்

2 கருத்துகள் :

Muruganandan M.K. சொன்னது…

"சடங்குகள் சம்பிரதாயத்திற்கு நடந்தாலும் அதிலும் இதைப்போல் அதிரடி நடவடிக்கை தேவைதான்." நல்ல காலத்திற்கு ஏற்ற கருத்து

Selvaraj சொன்னது…

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
"சடங்குகள் சம்பிரதாயத்திற்கு நடந்தாலும் அதிலும் இதைப்போல் அதிரடி நடவடிக்கை தேவைதான்." நல்ல காலத்திற்கு ஏற்ற கருத்து

//வருகை தந்து கருத்து சொன்னமைக்கு நன்றி!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!