நம் வலைத்தளத்திலோ அல்லது வலைப்பூவிலோ வாசகர்கள் விரும்பும் பதிவுகளை அவர்கள் அச்செடுக்க விரும்பினாலோ, அல்லது நம் பதிவை மின் அஞ்சல் செய்திடவோ, அல்லது பிறருடன் பகிர்ந்துகொள்ள விரும்பினாலோ, அல்லது நம் தளத்தை புக்மார்க் செய்திட விரும்பினாலோ, இப்படி ஒரு வசதி செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு அது உதவியாகவும் எளிதாகவும் இருக்கும்.
இனி இதை எப்படி நிறுவுவதென பார்ப்போம்.
நம் வலைப்பூவின் கணக்கில் சென்று Layout ஐ சொடுக்கவும். பின்னர் Add A Gadget ஐ சொடுக்கவும். இனி HTML/Javascript ஐ சொடுக்கவும். இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள HTML code ஐ ஒட்டி சேமியுங்கள்.
இதை இரண்டு விதமாக நிறுவலாம். ஒன்று ஒரே வரியில் நீளமாக. மற்றொன்று ஒன்றின் கீழ் ஒன்றாக மேலே படத்தில் கொடுத்துள்ளதுபோல.
<script type="text/javascript">stenium_url = location.href;stenium_title = document.title;stenium_style = 'classic';stenium_widgets = 'print,email,bookmark,share';stenium_layout = '1';</script><script src="http://www.stenium.com/js/widget_loader.js" type="text/javascript"></script>
இந்த code ஒன்றின் கீழ் ஒன்று வரும்படி கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஒரே வரியில் என் தளத்தில் உள்ளது போல அமைத்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள வரியை கண்டுபிடித்து அதிலுள்ள எண் ஒன்றிற்கு பதிலாக 0 என மாற்றி சேமியுங்கள்.
stenium_layout = '1';
இப்போது உங்கள் தளத்தில் இது நிறுவப்பட்டிருக்கும்.
2 கருத்துகள் :
ஒட்டு போட்டாச்சு தல
ரெம்ப நன்றிங்க அப்பாவி!
கருத்துரையிடுக