.

Loading...

செவ்வாய், 5 மே, 2009

பெண்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு?

பெண்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு?

போராட்டம் என்பது இல்லாத ஒன்றை பெறுவதற்காகவோ அல்லது இருக்கின்ற ஒன்றை அதிகமாக பெற்றிடவோ நடத்தப்படுவது. ஆனால் பெண்கள் எதற்காக இடஒதுக்கீடு கேட்டு போராடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.



இந்திய அரசியல் சட்டத்தின் படி பெண்கள் எல்லா தொகுதிகளிலுமே போட்டியிட உரிமையுள்ளது. அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்கபட்டிருக்கும் போது எதற்காக முப்பத்திமூன்று சதவிகிதம் கேட்டு போராட வேண்டும்?



இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் நுழைந்து விட்டனர். இவர்கள் எல்லாம் பெண்களுக்கான இட ஒதுக்கீடின்படி வந்தவர்களா என்ன? இல்லையே....இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட பெண்கள் எவ்வளவு முன்னேறி உள்ளார்கள் என பாருங்கள். அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகவும் முன்னேறி உள்ளனர். இதைப்போல அரசியலிலும் பெண்கள் இன்று இல்லையெனிலும் என்றாவது ஒருநாள் நிட்சயமாக நுழைந்து அதை ஆக்ரமிப்பார்கள்.

அதற்கு இந்திய சட்டம் வழிவகை செய்துள்ளது. ஆனால் நீங்கள் என்ன கேட்கிறீர்கள். எங்களுக்கு 33 சதவிகிதம் வேண்டுமென.



சிலவேளை இந்த 33 சதவிகிதம் அமலுக்கு வந்தால், மீதியை ஆண்களுக் கென்று ஒதுக்குவார்களா? நாளை இதனால் போட்டியிட விரும்பும் ஆணோ பெண்ணோ அவர்கள் விரும்பும் தொகுதியில் போட்டியிட முடியாதபடியாகும்.நிட்சயமாக ஒருநாள் பெண்கள் அரசியலையும் ஆக்ரமிப்பார்கள். அதற்கு ஒருவேளை ஐம்பதோ நூறோ வருடங்கள் ஆகலாம்.



மீண்டும் இப்போது இருக்கின்ற சட்டத்தை திரும்ப கொண்டுவரும்படி பெண்கள் போராடவேண்டிய நிலைமை வரலாம். காரணம் அப்போது அவர்களுக்கு முப்பத்திமூன்று சதவிகிதம் என்பது பெண்களை சரிசமமாக பார்க்கவில்லை என தோன்றும். அதற்கு இப்போது இருக்கின்ற சட்டமே மேல்.


இன்றைய சட்டத்தில் நீங்கள் இத்தனை தொகுதியில்தான் போட்டியிட வேண்டுமென எங்காவது இருக்கிறதா? அப்படி இல்லையெனில் எதற்காக 33 சதவிகிதம் கேட்டு போராடுகிறீர்கள்.

நீங்கள் போட்டியிட தயங்குகிறீர்கள் என்பதுதான் உண்மையே ஒழிய வேறொன்றுமில்லை.

நீங்கள் தேர்தலில் போட்டியிட இப்போது இருக்கின்ற கட்சிகளில் சேர்ந்துதான் போட்டி இட வேண்டும் என்றில்லை. சமூக சேவை செய்யும் சங்கங்கள் வழியாக நிற்கலாமே! இன்று போராட்டம் என்பது அர்த்தமில்லாத ஒன்றாகி விட்டது அரசே அதற்கெதிராக கடையடைப்பை செய்து கேலிகூத்தாக்கிகொண்டிருக்கிறது. எனவே பெண்களே! இட ஒதுக்கீட்டிற்காக போராடாதீர். ஏனெனில் இன்றைய சட்டம் நூறு சதவிகிதம் உங்களுக்கு கொடுத்துள்ளது. ஆனால் நீங்கள் அதை பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. சிந்தியுங்கள் பெண்களே!

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!