இன்று நமக்கு தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வதற்கு வலைத்தளங்களை அல்லது வலைப்பூக்களை நாடினாலே தெரிந்து கொள்ளலாம். யாராவது ஒருவராவது நமக்கான பதிலை அங்கு பதிவு செய்திருப்பார்கள்.
அதுமட்டுமல்ல இன்று நமக்கு பிடிக்காத ஒன்றிலிருந்து பிடித்ததற்கு மாறும் வசதிகளும் உள்ளன. அது நம் நிஜ வாழ்வில் ஆகட்டும் அல்லது நாம் பயன்படுத்தும் பொருட்களிலாகட்டும்.
இப்போது பார்த்தீர்களானால் விண்டோஸ் ஏழுக்கு எப்படி மாறுவதென அழகாக விவரித்தது எழுதுகிறார்கள். ஆனால் "இதை" எப்படி மாற்றுவதென இதுவரை யாரும் சொல்லியுள்ளதாக தெரியவில்லை. நானும் ஒவ்வரு வலைப்பதிவா படிக்கிறேன்.
பழைய குடும்ப வீடாக இருந்தால்கூட அது மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலோ அல்லது வசதிகுறைவு என்றாலோ மனதிற்கு பிடித்த வீடாக மாறிவிடுகிறோம்.
முழுக்க முழுக்க கிராமத்து வாசியாக இருந்தாலும் நாம் பட்டணம் சென்றுவிட்டால் அங்குள்ள கலாச்சாரத்திற்கேட்ப மாறிவிடுவோம்.
உணவு பழக்கத்தை கூட சைவத்தில் இருந்து அசைவத்திற்கோ அல்லது அசைவத்தில் இருந்து சைவத்திற்கோ மாற்றிவிடலாம். ஆனால் "இதை" எப்படி மாற்றுவது என்றுதான் தெரியவில்லை.
அது மட்டுமல்ல கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லையா? அல்லது மனைவிக்கு கணவனை பிடிக்கவில்லையா? மாற்றிகொள்கிறார்கள்.
ஏன் நம் உடலின் நிறத்தை கூட மாற்றிவிடலாம். பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்சன் கறுத்த மேனியை கலராக மாற்றிவிட்டார். இப்படி பிடிக்காத ஒன்றிலிருந்து பிடித்த ஒன்றிற்கு மாறும் வசதி பெருபாலும் எல்லாவற்றிற்குமே இருக்கிறது
இன்னும் சொல்ல வேண்டுமெனில் நாம் சார்ந்திருக்கும் மதம் கூட நமக்கு பிடிக்கவில்லையெனில் அதிலிருந்து மாறிவிடலாம். இந்த "இதை" எப்படி மாற்றுவதென தெரியவில்லை. அட, நாம் செய்கிற வேலைகூட பிடிக்கவில்லை எனில் மாற்றிவிடலாமுங்க! இது எல்லாவற்றையும்விட ஒரு ஆணுக்கு பெண்ணாக மாற ஆசை என்றாலோ,அல்லது ஒரு பெண்ணுக்கு ஆணாக மாற ஆசை என்றாலோகூட இன்று மாறி விடலாம். ஆனா, இந்த பாழாப்போன "ஜாதியைத்தான் எப்படி மாற்றுவதென தெரியல்ல".
அதுசரி "இதை எப்படி மாற்றுவது"?
0 கருத்துகள் :
கருத்துரையிடுக