.

Loading...

திங்கள், 27 ஏப்ரல், 2009

தாமரை என்னும் திடீர் தலைவி!

தாமரை என்னும் திடீர் தலைவி!


ஈழத் தமிழர்களின் பிரச்சினையை முன்வைத்து இன்று தோன்றும் தலைவர்களின் எண்ணிக்கை என்னவோ கூடிக்கொண்டுதான் இருக்கிறதே ஒழிய ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீருகிறதா என்று பார்ப்போமெனில் நிட்சயமாக இல்லை என்றே சொல்லலாம்.

ஏற்கனவே உள்ள திடீர் தலைவர்களான சீமான் பாரதி ராஜா போன்றோர் பின்னுக்கு போகவேண்டிய கட்டாயத்திற்கு இந்த தாமரையால் தள்ளப்பட்டு விட்டார்கள். இவரின் அனல் கனக்கும் பேச்சை கேட்டு சகிக்காத அல்லது பொறாமை பட்டு உடனே நிறுத்தி கொள்ள சொல்லியுள்ளார் பாரதி ராஜா, எனில் பார்த்து கொள்ளுங்களேன். ஏற்கனவே ஜூனியர் சீமான் மேல இருப்பதால் மனம் நொந்துபோயுள்ள ராஜாவிற்கு நேற்று வந்த பெண் ஒரே அடியா மேலே போனா வருத்தமாகதானே இருக்கும்.


ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் அரசியலில் ஏற்கனவே கருணாநிதியா? ஜெயலலிதாவா? கோபால்சாமியா? ராமதாஸா? அல்ல திருமாவளவனா? என தலைவர்கள் அடித்து கொள்ளும் போது, போதா குறைக்கு திரைப்பட துறையும் சேர்ந்துள்ளது.



ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீர இலங்கை, இந்தியா, ஐக்கிய நாட்டுசபை இவை பேசித்தான் தீர்வு காண முடியுமே ஒழிய இதைமாதிரி பொடி பொடி தலைவர்கள் பேசி அல்ல. இவை எல்லாம் பத்திரிகைகளுக்கு தீனியாகவும் வாசகர்களுக்கு கேட்க சந்தோசமாகவும் இருக்குமே ஒழிய வேறொன்றுமில்லை.


எதுவாக இருந்தாலும் பேனா பிடிக்கும் கையால் துப்பாக்கி பிடிக்க தயார் என்னும் நிலைமையில் இவர் உள்ளதால் வை. கோபல்சாமியை தொடர்பு கொள்ளலாம். ஏற்கனவே கள்ள தோணியில் இலங்கை சென்று வந்தவர் என்பதால் இவர் எளிதாக உங்களை அழைத்து செல்வார். இல்லையென்றால் பழ நெடுமாறனை தொடர்பு கொள்ளலாம். இவரும் கடலில் பாதி தூரம் போய்வந்தவர்தான். ஆனால் இந்த பாரதி ராஜாவோ அல்லது சீமானோ உங்களை இலங்கைக்கு அழைத்து செல்லமாட்டார்கள்.


இது எல்லாவற்றையும் விட மேல் நீங்களே தலைமை தாங்குவது! ஏற்கனவே அன்னை சோனியா, அம்மா புரட்ச்சி தலைவி, மாயாவதி, உமா பாரதி, மம்தா பானர்ஜீ என பெண்கள்தான் இந்தியாவில் கலக்கி கொண்டிருக்கிறார்கள்.

4 கருத்துகள் :

Adriean சொன்னது…

தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

Selvaraj சொன்னது…

வருகைக்கு நன்றி சந்திரன்,

இவர்களெல்லாம் தமிழர்களின் உணர்ச்சியை தூண்டிவிடுகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை. நிஜ துப்பாக்கியை கொடுத்தால் இலங்கைக்குள் சென்று போராடுவார்களா என்ன?

லக்கிலுக் சொன்னது…

:-)

Selvaraj சொன்னது…

வாங்க லக்கிலுக்!
வந்ததே வந்தீங்க எதாவது வாய் திறந்து சொல்லியிருக்கலாமில்லையா?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!