.

Loading...

புதன், 29 ஏப்ரல், 2009

அமெரிக்கா என்ன ஐக்கிய நாடா?


அமெரிக்கா என்ன ஐக்கிய நாடா?

உலகில் நாடுகளுக்குள் ஏற்படும் பிரட்சினைகளை தீர்த்து வைப்பதற்க்கென்றே உருவாக்கப்பட்ட ஐக்கிய நாட்டு சபை இன்று என்னவோ பெயர் அளவிற்குத்தான் செயல் பட்டுகொண்டிருக்கிறது. இதன் தீர்மானங்களை எந்த ஒரு நாடும் பின்பற்றுவதே கிடையாது என்பதுதான் உண்மை.


போதா குறைக்கு "வீட்டோ" என்னும் உருப்படாத ஒரு அதிகாரம் அமெரிக்கா போன்ற சில நாடுகளுக்கு வழங்க பட்டிருப்பதால் இந்த "வீட்டோ" அதிகாரத்தை பயன்படுத்தி இந்த குறிப்பிட்ட நாடுகளால் எந்த ஒரு முடிவையும் நிறைவேற்ற முடியாமல் செய்ய முடிகிறது.



இதை இஸ்ரேல் விசயத்தில் அமெரிக்கா பல முறை நிரூபித்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் அமெரிக்கா தன்னை சட்டம்பி போல காண்பித்துகொள்வதால் சில நாடுகள் ஐக்கிய நாட்டு படைகளுக்கு பதிலாக அமெரிக்க படைகளையே விரும்புகின்றன. இப்படி சில நாடுகள் செய்ய தொடங்கியதாலும் (குறிப்பாக அரபு நாடுகள்) இன்னும் சில நாடுகளுக்குள் தானே மூக்கை நுழைத்தும் அமெரிக்கா இன்று சர்வதேச போலீஸ் போல செயல்படுகிறது.

ஒரு காலத்தில் வியட்நாமின் கொரில்லா தாக்குதலை சமாளிக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறிய அமெரிக்கா, அதன் பின்னர் கொஞ்சம் கவனமாகவே மூக்கை நுழைக்கிறது.
முன்னாள் அதிபர் புஷ்ஷின் காலத்தில் அரபு நாடுகளுக்குள் தன படைகளை இறக்கிய அமரிக்கா இன்றுவரை அங்கு பாதுகாப்பு என்னும் பெயரில் நிரந்தரமாகவே உள்ளது. அதனால் என்ன? நன்மை தானே என்று நினைக்கலாம். அதுதான் இல்லை.

அமரிக்கா படைகள் குறிப்பிட்ட வருட ஒப்பந்த அடிப்படையிலேயே வரும். அதுவும் அதற்கான் செலவு கூட சம்பந்தபட்ட நாடுகள் கொடுக்கவேண்டி வரும். இது நம்மூரில் பிரபலங்கள் பணம் கொடுத்து பாதுகாப்பாளியை வைத்து கொள்வதுபோல.




.


அரபு நாடுகளில் மூக்கை நுழைக்க முக்கிய காரணம் புஷ் எண்ணைக்கிணறுக்கு சொந்தக்காரர் என்பதுதான். இது நம்மில் பலபேருக்கு தெரியாத ஒன்று. இந்த புஷ் A to Z வரை பெட்ரோல் பற்றி தெரிந்த தொழிலதிபர்

இன்றுவரை ஈராக் நாட்டின் எண்ணை அமரிக்கா விருப்பப்பட்ட இடத்திற்குத்தான் சென்று கொண்டிருக்கிறது. இந்த அமரிக்க படைவீரர்கள் பாலைவனத்தில் நிற்பதை தொலைக்காட்சிகளில் பார்ப்பீர்கள் பணிமுடிந்த பின்னர் நீச்சல் குளத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில்தான் குளிப்பார்கள். மூன்று மாதம் தான் பாலைவனபணி. பின்னர் அமரிக்கா சென்று விடுவார்கள் இவர்களின் அத்தனை செலவுகளையும் சம்பந்த பட்ட நாடுகள் குறிப்பாக குவைத் சவுதி அரேபியா ஈராக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

எண்ணையை மூலதனமாக கொண்டிருந்த சவுதி அரேபியா இன்று கடனாளி. அமரிக்கா நுழைந்தால் பணக்கார நாடும் பிச்சைகாரநாடாக மாற வாய்புண்டு என்பதற்கு இது உதாரணம்.

ஆக .


ஆதாயமில்லாமல் அமரிக்கா ஆற்றில் இறங்காது. இலங்கையில் அமரிக்கா இறங்க அங்கு தோண்ட தோண்ட பெட்ரோளா கிடைக்கிறது. பிணம்தானே கிடைக்கும்

அப்படியே அமரிக்கா இலங்கைக்குள் நுழைந்தாலும் அது நிட்சயமாக தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருக்காது. அமைதிப்படையாக நுழைந்த இந்திய படையை போல ஆகலாம்.




ஒரு சிறிய ஆறுதல் அமரிக்க படைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஒபாமா திரும்ப அழைத்துக்கொள்ள முடிவெடுத்திருப்பது.

2 கருத்துகள் :

Joe சொன்னது…

புஷ் பெட்ரோல் கம்பெனிகளுக்கு சொந்தக்காரர், அதனால் தான் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் போரை நுழைத்து லாபமீட்ட பார்த்தார் என்பது ஊரறிந்த ரகசியம்.

ஒபாமா வந்ததால் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்பதே நிதர்சனம்.
ஆனால் அவர் புஷ்-ஐ விட நூறு மடங்கு மேல்.

Selvaraj சொன்னது…

வாங்க Joe, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஒபாமா புஷ் அளவு இல்லை என்பதே ஆறுதல்தானே!!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!