.

Loading...

வெள்ளி, 1 மே, 2009

எழுதப்படிக்க தெரியாத ஆங்கிலேயர்கள்!

எழுதப்படிக்க தெரியாத ஆங்கிலேயர்கள்!




ஆங்கிலேயர்கள் என்றதுமே அறிவு ஜீவிகள என்ற ஒரு எண்ணம் நமக்கெல்லாம் உண்டு. இது எனக்கும் இருந்தது, நான் இங்கிலாந்து வரும்வரை. இங்கு வந்த பின்னர்தான் தெரிந்தது அது தவறென. சில மாதங்களுக்கு முன் நான் கலந்துகொண்ட ஒரு தொண்டு நிறுவனத்தின் கூட்டத்தில் வந்திருந்த சில ஆங்கிலோயர்களுக்கு அங்கே கொடுக்கப்பட்டிருந்த விண்ணப்ப படிவத்தை வாசிக்க தெரியாமல் பிறர் துணையை நாடிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் தெரிந்தது இங்கேயும் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள் என. பின்னர் சமிபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இந்த முதியோர் கல்வி திட்டம் பற்றிய நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில் கேட்ட சில விசயங்கள் நம்ப முடியாதபடி இருந்தன. அட நம்மூரு முதியவர்களை விட மோசமுங்க.



இருபது சதவிகிதம் ஆங்கிலேயர்களுக்கு வாசிக்க, எழுத, கணக்கு பார்க்க தெரியாதுன்னா பார்த்துக்கிங்க! இதில் இன்னொரு சுவாராஸ்யம் என்னவென்றால் ஐரோப்பாவிலே இங்கிலாந்து நாட்டில் தான் அதிகம் பேர் இப்படி இருக்கிறார்கள். பாருங்களேன், ஏழு மில்லியன் பேர் இந்த பட்டியலில் இருக்கிறார்கள் என்றால்.



இதை இப்படியே விட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என உணர்ந்த அரசு நம் நாட்டில் தொடங்கப்பட்ட "முதியோர் கல்வி" திட்டத்தை இங்கு இப்போது அறிமுக படுத்தியுள்ளது. இதற்காக இருபது மில்லியன் பவுண்ட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நூலகங்கள், ஆலயங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த உள்ளது. இப்படி ஏழாயிரம் மையங்கள் ஒதுக்கப்படலாம் என நம்பப்படுகிறது. ஏற்கனவே இங்கு முதியோர் கல்வி திட்டம் சில வருடங்களுக்கு முன்னாலேயே தொடங்க பட்டிருந்தாலும் இப்போது கொஞ்சம தீவிரமாக செயல்படுகிறார்கள்.




இத்தனைக்கும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லையனில் பெற்றோருக்கு சிறை என்னும் சட்டமும் நடைமுறையில் உள்ளது. அப்படி இருந்தும் இந்த நிலைமை.

4 கருத்துகள் :

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அட.....! பதிவு சுவாரஸ்யமாகவுள்ளது.

Selvaraj சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குணசீலன்,

எனக்கும் இப்படித்தான் இருந்ததுங்க!

? சொன்னது…

As per Wikipedia and US dept of state

In United Kingdom of Great Britain and Northern Ireland


Education: Years compulsory--12.
Attendance--nearly 100%.
Literacy--99%.

Selvaraj சொன்னது…

வணக்கம் நந்தவனத்தான்,

இப்போதைய இளசுகளின் விகிதம் வேண்டுமென்றால் அப்படி இருக்கலாம். ஆனால் முதியவர் நிலைமை நான் சொல்லியுள்ள படிதான். நான் தொலைகாட்சி நிகழ்ச்சியை பார்த்தபின்னர்தான் இந்த பதிவை வெளியிட்டேன். அது மட்டுமல்ல இங்கு பள்ளிக்கூடங்களுக்கு 185 நாட்கள் மட்டுமே படிப்புண்டு.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!