.

Loading...

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

வலைதளத்தில் நாணய மாற்றி நிறுவுதல்!

வலைதளத்தில் நாணயமாற்றி நிறுவுதல்!






இன்று தமிழர்கள் கடல்கடந்து வாழ்வதால் இந்த நாணய மாற்றியை அடிக்கடி நாடுவார்கள் என்பது என்னவோ உண்மைதான். இதற்கு நாம் பிற தளங்களில் செல்வதை விட நம் வலைத்தளத்திலோ அல்லது வலைப்பூவிலோ ஒன்றை நிறுவிவிடலாமே!

இதை நிறுவுவதும் மிக எளிதே! அதுமட்டுமல்ல, இப்படி ஒன்று இருந்தால் சில நேரங்களில் இந்த நாணய மாற்றியை பார்பதர்க்கென்றே நம் தளத்திற்கு வருபவர்களும் இருப்பார்கள்.



இனி இதை எப்படி நிறுவுவதென பார்ப்போம்!

நம் வலைப்பூவின் கணக்கில் சென்று layout ஐ சொடுக்கவும், இனி Add a Gadget ஐ சொடுக்கவும். இப்போது தனியாக திறந்திருக்கும் ஜன்னலில் உள்ள தேடு பொறியில் currency converter என டைப் செய்து தேடுங்கள். அது ஐம்பதிற்கும் மேற்பட்ட நாணய மாற்று பொறியை கொண்டுவரும். அதில் உங்களுக்கு பிடித்தமானதை add செய்து சேமியுங்கள். அவ்வளவுதான்.




இனி உங்கள் தளத்தை பாருங்கள். இந்த நாணய மாற்றியானது நிறுவப்பட்டிருக்கும்.

இந்த பதிவானது என் வலைப்பூவில் பின்னூட்டத்தின் வழியாக கேட்டிருந்த ஒரு சகோதரியின் வேண்டுகோளிற்கு இணங்க வெளியிடப்பட்டுள்ளது.

2 கருத்துகள் :

malar சொன்னது…

எனது கோரிக்கையை ஏற்று currency converter நிறுவ சொல்லி தந்தமைக்கு ரொம்ப நன்றி சார்.

Selvaraj சொன்னது…

வாங்க மலர்!

நீங்க இந்த இடுகையை படிக்க வில்லையோவன நினைத்தேன்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!