பெரும்பாலான வலைத்தளங்களும் அல்லது வலைப்பூக்களும் இன்று நிறைய பதிவுகளை உடையவைகளாகவே உள்ளன. சில தளங்கள் சிந்துபாத்தின் கதைபோல நீண்டுகொண்டே போகும். இதனால் வாசகர்களுக்கு அலுப்பு ஏற்பட்டு மீண்டும் முகப்பிற்கு செல்ல விரும்பினால் இப்படி ஒரு பட்டன் இருந்தால் உடனே அதை பயன்படுத்தி முகப்பிற்கு சென்றுவிடுவார்கள். .
இப்படி ஒரு வசதி இல்லையெனில் சில நேரங்களில் நம் வாசகர்கள் பிறதளங்களுக்கு தாவிவிட வாய்புள்ளது. எனவே நம் வாசகர்கள் தொடர்ந்து நம் தளத்திலே அதிக நேரத்தை செலவிட இந்த "மேலே செல்ல" என்னும் பட்டன் பயன்படும்
இனி இதை எப்படி நிறுவுவது என பார்போம்.
நம் வலைத்தளத்தின் அல்லது வலைப்பூவின் கணக்கில் சென்று layout ஐ சொடுக்கவும் பின்னர் add gadget ஐ சொடுக்கவும் இனி add HTML/Javascript ஐ சொடுக்கவும் இனி கீழே கொடுக்கப்பட்டுள்ள html code ஐ அதில் copy செய்யவும். இனி சேமியுங்கள் அவ்வளவுதான். இப்போது உங்கள் தளத்தில் "மேலே செல்ல" பட்டன் நிறுவப்பட்டுள்ளது.
<a style="display:scroll;position:fixed;bottom:5px;right:5px;" href="#" title="Back to Top"><img src="http://www.gigaimage.com/images/d5tx90tc89ss7fgan359.gif"/></a>
மேல்நோக்கியுள்ள அம்புக்குறி படமானது நீங்கள் விரும்பியபடியான படமாக மாற்றி அமைக்கலாம். அதற்கு நீங்கள் மேலேயுள்ள html code இல் கொடுக்கப்பட்டுள்ள இந்த பகுதியை http://www.gigaimage.com/images/d5tx90tc89ss7fgan359.gif மட்டும் மாற்றி உங்களின் படத்திற்கான code ஐ அதில் சேர்த்துவிடுங்கள்.
உதாரணத்திற்கு சில அம்புக்குறிகள் கீழே கொடுத்துள்ளேன்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaVbTebrGIBNfY8Dwf0rUGdUAaNCZnSjL5SnGqy1v88_m91553Oc_Vz6UbNrk5L4hLIYATZd98eZNtM56EfQO7fkLevWbREIw_xxm4JhsIAv69Xm_Pq4ZrDHjCdDC1vRayVEKHKpLM1I4s/s320/BlurMetalDc3.gif
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja0jKyU4uFne7rHVBpAnTdvze87WdKtYiI2eB3LZSWY7kaZ2ih2GpKgwmar44XifZQOEgalNqgPf4ToYJJg6hyphenhyphenp30N7bzouFbpZti8IZKZ8HFvQXRo-CayimpqsMp3TZV2hYRlged2-NTJ/s320/BlurMetalLc6.gif
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJaGb2Q6bmQz38GMxwSwEYOsyu-edMc-6bEXJSevU1e4dcp6M_s7pAAoB8Jizhbvi2AVZh0KR-6PZKyG1eB4vcI14vzQh4al0si1aEN6i_JT0lXG0FFkxFulTnPRtgoYooK6kfb1Wb6YpD/s320/BlurMetalLc0.gif
20 கருத்துகள் :
its very useful..thanks
super! thanks for sharing.
காப்பி செய்ய வேண்டிய ஹச்டிஎம் எல் முழுசா தெரியலயே.."?
உங்க டெம்ப்ளேட் வித்தியாசமா இருக்கு. கண்டிப்பா உங்களுக்கே இந்த மேலே செல்ல பட்டன் வேண்டும் அய்யா.
ரொம்ப நன்றி சார்!
வணக்கம்!
வருகை தந்து கருத்துக்கள் சொன்ன
ராஜேஸ்வரி, ஜூர்கேன், முத்துலக்ஷ்மி, தமிழ் நெஞ்சம், ரவிஷங்கர் ஆகியோருக்கு நன்றிகள்.
முத்து லெக்ஷ்மி html code சரியாக தெரிகிறது. இதை நிறுவுவதில் உங்களுக்கு இன்னும் பிரச்சினை எனில் contact மூலம் என்னை தொடர்புகொள்ளுங்கள்.
தமிழ் நெஞ்சம், நீங்கள் உண்மையை சொல்லியுள்ளீர்கள்.
தற்போது என் வலைதளத்தில் இணைத்துள்ளேன்..பயனுள்ளதாக இருக்கும்.
மிக்க நன்றி
உதவிக்கு மிக்க நன்றி..
எனது பதிவில் நான் பதிவிட்டுவிட்டேன். எனக்கும், எனது பதிவிற்கு வரும் நண்பர்களுக்கும் மிக மிக உதவியாக இருக்கும்..
என்னைவிட என்னை வாசிக்கும் பதிவர்களே உங்களை நன்றியுடன் நினைப்பார்கள்.))))))))))))))))))))
Very Nice and it works too!!!
anbudan aruna
Great, thanks Saar!
நன்றி சரியாக வந்துவிட்டது..
உபயோகமான தகவல். பகிர்வுக்கு நன்றி
வணக்கம்,
கிரி, உண்மை தமிழன், அருணா, இயற்கை நேசி, எட்வின்
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
Currency Converter cherpathaium cholungkalan plz.nanri
பயனுள்ள தொழில்நுட்ப தகவல். பாராட்டுகள் !
வாங்க மலர்!
நிச்சயமாக பதிவிடுகிறேன்.
வணக்கம் கண்ணன்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் வலைப்பூ - நெருப்பு நரியில் வேறுமாதிரியாகக் காட்சியளிக்கிறது. பாதி கோடிங் காணவில்லை.
இப்போது எருமைமாடு என்று கூடுதுறையால் திட்டப்படுகின்ற IEல் திறந்தேன். அங்கே சரியாகக் காட்சியளிக்கிறது. எல்லாம் இந்த browser incompatibility issues.
நன்றிங்க
இருங்க நானும் apply பண்ணி பார்க்கிறேன்
இந்த நெருப்பு நரியில் உங்க ப்ளாக்கைப் பார்த்து பயந்துட்டேன்.
நல்ல வேளை - IEல பார்த்துட்டேன். இல்லாட்டி இந்த கோடிங்க என் ப்ளாக்ல இணைச்சுருக்கவே முடியாது.
நேத்து FF ல பார்த்து கோடிங்ல பிரச்சினைன்னு நினைத்து போகிட்டேன்.
இன்னைக்கு பின்னூட்டியவர்களின் response பார்த்து IE ல open பண்ணி பார்த்தேன். பிறகு தெரிந்தது - browser compatibility issues.
ரொம்ப நன்றி சார்
தம்பி தமிழ்நெஞ்சம்,
நீங்க எதோ தமாஸ் பண்ணியிருக்கிறீர்கள் என நினைத்தேன். எனக்கு நெருப்பு நரி சில தமிழ் எழுத்துருக்களை சரியாக காண்பிக்காததால் நான் IE ஐயே பயன்படுத்துகிறேன்.
கருத்துரையிடுக