.

Loading...

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

கடை திருட்டை தடுக்க கருவி!


கடை திருட்டை தடுக்க கருவி!

பொதுவாகவே கடைகளில் திருட்டு போவது சகஜம். இது அங்கு பெருட்கள் வாங்க வருபவர்களாலும் நடக்கலாம் அல்லது அங்குள்ள ஊழியர்களாலும் நடக்கலாம். இதை தடுக்க முன்பெல்லாம் நவீன காமெராக்களை கடைமுழுக்க பொருத்தி மோனிடோரில் கண்காணித்து கொண்டிருப்பார்கள். இன்றும் பெரும்பாலும் கடைகளில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. இதில் எல்லாமே பதிவாகி இருந்தாலும் சில வேளைகளில் சிறிய பொருட்களை அவர்களின் கண் இமைக்கும் நேரத்தில் திருடி விடுவார்கள்.
ஆனால் இப்போது இதையும் தாண்டி EAS என்ற கருவி திருட்டை தடுக்க பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது இக்கருவி பெரும்பாலும் இங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ளது. இவை வாசலில் இரண்டு பக்கமும் பொருத்தபட்டிருக்கும்.


நாம் பொதுவாக கடைகளில் வாங்கும் பொருட்களில் இவற்றிற்கான லேபிள்ஸ் இருக்கும். அவை நாம் பணம் கொடுக்கும் இடத்தில் ஸ்கேன் செய்யும் போது செயலிழக்க வைக்கப்படும். ஆனால் மறைத்து வைத்து திருட்டு தனமாக எடுத்து செல்லப்படும் பொருட்களில் உள்ள லேபிள்ஸ் செயல்பட்டுக்கொண்டிருப்பதால் நாம் வாசலை அடையும்போது இந்த கருவியால் உணரப்பட்டு அது சப்தத்தை உண்டு பண்ணும்.




ஆக பணம் கொடுக்காத பொருள் எடுத்து செல்லபடுவதை எல்லோருக்கும் சொல்லிவிடும். இதனால் திருடுபவர்கள் கேவலப்படுவது மட்டுமல்லாமல் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டிவரும். இது நிறைய வகைகளில் வித்தியாசம் வித்தியாசமாக விற்பனைக்கு வந்துள்ளது.

2 கருத்துகள் :

வடுவூர் குமார் சொன்னது…

இங்கு பெரும்பாலான கடைத்தொகுதியில் இதை நிறுவியுள்ளார்கள்.

Selvaraj சொன்னது…

வாங்க குமார்!

இது ஐரோப்பாவிலும் அரபு நாடுகளிலும்தான் இப்போது நிறுவபட்டுள்ளது என நினைக்கிறேன். இந்தியாவில் இக்கருவியை நிறுவி இருக்கிறார்களா? என தெரியவில்லை.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!