.

Loading...

வியாழன், 23 ஏப்ரல், 2009

ஈழத் தமிழர்களின் அங்கீகாரம் பெற்ற ஒரே தமிழக விற்பனையாளர்!

ஈழத் தமிழர்களின் அங்கீகாரம் பெற்ற ஒரே தமிழக விற்பனையாளர்!

ஈழத் தமிழர்களின் பிரட்ச்சனை இன்று தமிழக அரசியல்வாதிகளுக்கும் சில தலைவர்களுக்கும் ஒரு பிழைப்பாகவே போய் விட்டது. இந்த ஈழத் தமிழர்களின் பிரச்சனையானது 1983 இல் தொடங்கியது. அப்போது எத்தனை பேர் குரல் கொடுத்தார்கள் இன்று எத்தனை பேர் குரல் கொடுக்கிறார்கள் என பார்த்தால் புரியும். அதிலும் தேர்தல் நேரத்தில் கொஞ்சம் கூடுதலாகவே தலைவர்கள் தோன்றி விடுவார்கள்.

இவர்கள் எல்லாம் உண்மையிலேயே ஈழத் தமிழர்களின் மேல் பாசம் கொண்டு செயல் படுகின்றார்களா? என பார்ப்போமெனில் நிட்சயமாக இருக்காது.




தமிழக முதல்வரை பொறுத்தவரை அவருக்கு பதவிதான் முக்கியம். அந்த பதவியை தக்க வைத்து கொள்வதற்கான் வழிமுறையின் படியே இவரின் பேச்சி இருக்கும். ஒரு நாள் ஆதரிப்பார்! மறுநாள் ஆதரிக்கமாட்டார்! இவரால் தர்ம சங்கடத்திற்கு ஆளாபவர்கள் உடன்பிறப்புக்களும், அரசு அதிகாரிகளும்தான். எப்போது எதை உளறுவார் என தெரியாது.

பாவம் உடன்பிறப்புக்கள்.

வை.கோபால்சாமி இந்திய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே கடவு சீட்டு இல்லாமல் இலங்கையினுள் கள்ளத்தனமாக நுழைந்தவர். இவர் அன்று முதல் இன்று வரை ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்.



.


இந்திரா காங்கிரஸ்காரர்களுக்கு எங்கே நம் தலைவரை கொன்ற புலிகளை எப்படி ஆதரிப்பதென ஒரே குழப்பம். இந்த விடுதலை புலிகளுக்கு இந்திரா காந்தி காலத்தில்தான் இந்தியாவில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்பதை இவர்கள் மறந்தது ஏனோ? இவர்களின் இன்றைய அறிக்கைகள் "வெந்த புண்ணில் வேல்ஐ பாய்ப்பதுபோல" உள்ளது

விடுதலை புலிகள் ராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்றால் அதற்கு ஈழ மக்களை பழி வாங்குவது என்ன நியாயம்?

திருமாவளவன், ராமதாஸ் இவர்களின் பேச்சும் கூட்டணி தர்மத்திற்கேற்ப அமையும்.

இதில் இப்போது திடீர் தலைவர் ஆகியுள்ள பாரதி ராஜா, சீமான் ஆகியோரையும் சொல்லவேண்டியுள்ளது. இந்த பாரதி ராஜா இத்தனை வருசமாக என்ன செய்தாராம்?
ஸ்ரீ தேவியை தவிர எத்தனை தமிழ் கதாநாயகிகளை நடிக்க வைத்துள்ளார் அல்லது அறிமுக படுத்தியுள்ளார்?


இந்த சிகர இயக்குனர் "தமிழச்சி" என பெயர்வைத்து படம் எடுப்பார், ஆனால் தமிழ் தெரியாத பெண்ணாக தேடி பிடித்து அறிமுகப்படுத்துவார். இவருக்கு இப்போதுதான் ஞானம் வந்திருக்கிறதுபோல. ஏன் நடிகை ராதிகா கூட சிங்கள பெண்ணாகவே தமிழகத்தில் நுழைந்தார். தமிழ் படத்தில் பாரதி ராஜாவால் அறிமுகப்படுத்தபட்டபோது அவருக்கு தமிழ் தெரியாது. இதை ராதிகாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

சீமானும் அப்படித்தான். தன் திரைப்படத்தில் எத்தனை தமிழ் பெண்களை கதாநாயகிகளாக அறிமுக படுத்தியுள்ளார்? இவர் அறிமுக படுத்திய பூஜா கூட சிங்கள பெண்தானே! இந்த பூஜா "என்கு குஞ்சு குஞ்சு தமில் தறியும்" என பேசுவதை பார்த்து பூரித்துப்போன சீமான் அறுபது மதிப்பெண்கள் கொடுத்தாராம் அவரின் தமிழிற்கு. நிஜமாக இது நான் படித்தது. இவர்களெல்லாம் தங்களை முதலில் சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

போகிற போக்கை பார்த்தால் தமிழக தலைவர்கள் இப்படி "ஈழத் தமிழர்களின் அங்கீகாரம் பெற்ற ஒரே தமிழக விற்பனையாளர்!"என்னும் அடைமொழியை இட்டு பேசினாலும் பேசுவார்கள். ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை வித்து பிழைப்பவர்கள்.

6 கருத்துகள் :

யூர்கன் க்ருகியர் சொன்னது…

பின்னீட்டிங்க!

Selvaraj சொன்னது…

வணக்கம் ஜுர்கேன் க்ருகேர்!

இதுதாங்க இன்றைய நிலைமை. ஈழ பிரட்ச்சினையை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் நம்மவர்கள்.

தங்க முகுந்தன் சொன்னது…

இதில் நீங்கள் கலைஞர் அவர்களை குறை சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். என்னுடைய இடுகைகளை முழுவதும் வாசித்தால் அவருடைய நிலைப்பாட்டை அறிய முடியும் ஒரு காலத்தில் அவர் எமது பிரச்சனையில் பாரதம் தன்னை ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் மட்டுமல்ல பல அரசியற் தலைவர்களும் வற்புறுத்தினார்கள். ஆயுதத்தை எடுத்த புலிகள் அடாத்துப் புரிந்த சம்பவங்களாலேயே இப்போது இந்த நிலை. இதை அனைவரும் உணர வேண்டும்.

Selvaraj சொன்னது…

தங்க முகுந்தன் said...

"ஒரு காலத்தில் அவர் எமது பிரச்சனையில் பாரதம் தன்னை ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் மட்டுமல்ல பல அரசியற் தலைவர்களும் வற்புறுத்தினார்கள். ஆயுதத்தை எடுத்த புலிகள் அடாத்துப் புரிந்த சம்பவங்களாலேயே இப்போது இந்த நிலை. இதை அனைவரும் உணர வேண்டும்".

இந்த உங்களின் வரிகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

Unknown சொன்னது…

Sari neengalavathu kalathula irangi eezhla prechanaiku oru mudivu sollunga papoom. Poora pookula ethai veendumaanalum sollivitu poovatha romba sulabam nanbaaa.

Selvaraj சொன்னது…

வாங்க மதுரைகாரரே!
தமிழ் ஈழ மாநிலம் அமைய இந்தியா, இலங்கை, ஐக்கிய நாட்டு சபை பேசி முடிவெடுக்க வேண்டும், அனைத்து போராளிகளுக்கும் பொது மன்னிப்பு கொடுத்து அவர்களை அரசியல் கட்சிகளாக்கி தேர்தலை வைத்து ஈழ மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் முதல் அமைச்சராக வரட்டும். இதற்கு ஐக்கிய நாட்டு படையை வைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!