இன்று வாகனமே இல்லாத வீடுகளே இல்லை என்னும் அளவிற்கு நாம் வளர்ச்சி அடைந்து விட்டோம். இதனால் என்னவென்றால் நாம் இப்போது நடப்பதே இல்லை. இருசக்கர வாகனம் மூலை முடுக்கெல்லாம் செல்வதால் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் வாகனங்களிலேயே செல்கிறோம் இதன் விளைவாக நேரத்தை நாம் மிட்சபடுத்தலாம் ஆனால் நம் ஆரோக்கியத்தை மேன்மை படுத்த முடியாது என்பதுதான் உண்மை.
பழைய காலத்தில் நம் முன்னோர்கள் எங்குமே நடந்து சென்று ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். இன்றோ நாம் வாகனத்தில் சென்று கேள்விப்படாத புது புது நோய்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதற்கு அடிப்படை காரணம் நாம் நடக்காததுதான், ஏனெனில் நம் உடம்பில் உள்ள உறுப்புக்கள் அனைத்தையும் இணைக்கின்ற் நரம்புகள் நம் பாதத்தில் தான் முடிவடைகின்ற்ன. நாம் நடக்கும் போது இவை அழுத்தப்படுவதால் அவை நம் உடலை ஆரோக்கியமாக வைக்கின்ற்ன.
இந்த படத்தை பாருங்கள் நம் உடலின் ஒவ்வெரு உறுப்பும் இந்த பாதத்தில் எங்கு காணப்படுகிறதென
இனி நடப்பதற்கு தடை ஏன்? இலவசம் தானே!
நலமுடன் வாழ நாம் நடந்திடுவோமே!!
0 கருத்துகள் :
கருத்துரையிடுக