.

Loading...

Saturday, 18 April 2009

வலைத்தளமும்! வங்கி கணக்கும்!!வலைத்தளமும்! வங்கி கணக்கும்!!

இன்று வலைத்தளத்தின் வழியே எல்லா காரியங்களையும் செய்யும் வசதி வந்து விட்டதால் வாழக்கை என்னவோ எளிதாகி விட்டது. முன்பு போல நீண்ட வரிசையில் நின்று தேவையானதை பெற்றுக்கொள்ளவோ அல்லது கொடுத்திடவோ வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கும் பணம் கொடுக்க வேண்டுமா? அல்லது யாரிடம் இருந்தாவது பணம் பெறவேண்டுமா? எல்லாமே வலைத்தளத்தின் வழியே செய்திடலாம். இப்படி உலகத்தின் எந்த பகுதியில் இருந்தும் பொருட்களை வாங்கிட அல்லது விற்க முடியும். பிரச்சனைகள் என்று வராத பட்சத்தில் வங்கியின் பக்கம் வருட கணக்காக போகவேண்டிய தேவை இருக்காது. மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், எரிபொருள் கட்டணம், வீட்டு வரி, குழந்தைகளின் பள்ளிக்கான கட்டணங்கள் இப்படி எல்லாவற்றையுமே இன்று வலைத்தளங்களின் வழியே செலுத்திடலாம். ஏன் பயண கட்டணங்கள்கூட.

இவ்வளவு வசதிகள் இருந்தும் கூட சில சிக்கல்களும் உண்டு. எல்லா நிறுவனத்திடமும் நம் வங்கி விவரத்தையோ நம் விவரத்தையோ கொடுத்திட முடியாது. ஏனெனில் விசமிகள் நிறைய இருப்பதால்.வலைத்தளத்தில் வங்கி கணக்கை பராமரிக்க சில எளிய வழிகளை நாம் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். இல்லையெனில் விசமிகள் உள்ளே புகுந்து திருடவோ அல்லது குறளுபடிகளை செய்தோ நம்மை கலங்க வைத்து விடுவார்கள். இனி பாதுகாப்பு வழிகளை பார்போம்.எக்காரணம் கொண்டும் நம் கணிணியை தவிர பிற கணினியில் நம் வங்கி கணக்கை பார்க்கலாகாது. நம் கணிணியில் Anti-Virus நிறுவப்பட்டிருக்க வேண்டும். அது upto date ஆக இருக்கவேண்டும்.


தேவையில்லாத cookies ஐ கணிணியில் அனுமதிக்காதீர்கள் இந்த cookiesகளால் தான் பெரும்பாலும் பிரட்ச்சனைகள் வரும். விண்டோஸ் ஆடோமடிக் updates on ஆக இருக்கவேண்டும். நமது கடவுசொல் பிறர் எளிதில் யூகிக்க கூடியதாக இருக்ககூடாது.
நமக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் கூட கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வங்கியில் இருந்து அழைக்கிறோம் என திருடுபவர்கூட அழைக்கலாம். எனவே நமது விவரத்தை இவர்களிடம் ஒருபோதும் கொடுக்காதீர். வரும் அழைப்பு landline எண்ணா என பாருங்கள். பெரும்பாலும் இச்செயல்களில் ஈடு படுபவர்கள் எண்ணை with held செய்தோ அல்லது VOIP மூலமோதான் அழைப்பார்கள். இப்படி அழைபவர்களிடம் அவர்களின் எண்ணை கேட்கலாம். அதோடில்லாமல் நம் பழைய கணிணியை யாருக்கும் கொடுக்கவும் கூடாது. hard disk ஐ எடுத்துவிட்டு கொடுக்கலாம் அல்லது சரியான முறையில் நாம் விவரங்களை அழித்துவிட்டு கொடுக்கலாம். இல்லாவிட்டால் விசமிகளிடம் சிக்கி நாம் மோசம் போகலாம்.

.


சமிபத்தில் இங்கிலாந்தில் நிறையபேரின் வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டு இருந்தது. அவை எல்லாமே ஆப்பிரிக்காவில் நடத்தபட்டிருந்தது. பின்னர்தான் தெரிந்தது அவர்கள் எல்லோருமே தங்கள் பழைய கணிணிகளை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்ததும், அவை ஆபிரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பபட்டதும். துரசிச்டவசமாக அவை விசமிகளிடம் சிக்கியுள்ளதுஎல்லாவற்றிற்கும் மேலாக தினமும் கணக்கு சரியாக உள்ளதா எனபார்த்தல் அவசியம்.
இதனால் நமக்கு தெரியாமல் எதாவது பண பரிமாற்றம் செய்யபட்டிருந்தால் உடனே வங்கிக்கு தெரிய படுத்தி அதை முடக்கி விடலாம். சில நாட்கள் ஆகிவிட்டால் சில நேரங்களில் உண்மையான திருடன் தப்பிவிடுவான்.


இப்படி திருடுபவர்கள் ஏற்கனவே "வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்" என விளம்பரபடுத்தி, எனக்கு வியாபாரத்தில் வரும் பணம் உங்கள் கணக்கில் போடப்படும் நீங்கள் பத்து சதமானம் எடுத்துவிட்டு மீதியை என்கணக்கில் செலுத்தவேண்டும் என சொல்லி, பணத்திற்கு ஆசைப்படும் அப்பாவிகளின் வங்கி கணக்கை பெற்று அதில் இப்படி திருடும் பணத்தை போட்டுவிடுவார்கள்.இந்த அப்பாவிகளுக்கு இந்த நவீன உலகில் எங்கிருந்தும் பணம் பட்டுவாடா செய்யமுடியும் என தெரியாதது ஏனோ? கடைசியாக போலீசிடம் இந்த அப்பாவிகள் மாட்டி சில நேரங்களில் சொத்துக்களை வித்து பணம் கொடுக்க வேண்டிவரும்.

இந்த திருட்டை தடுக்க இப்போது வங்கிகள் சில வழிகளை கையாள்கின்றன அதில் ஒன்று பணபரிமாற்றம் செய்யும் கணினியின் I.P address ஐ பதிவு செய்து வைத்துகொள்ளும். அடுத்தது நாம் ஏற்கனவே அங்கிகரித்திருப்பவர்களை தவிர புதிதாக யாருக்காவது நம் கணக்கில் இருந்து பண பரிமாற்றம் செய்யும் போது உடனே நம் வங்கியில் இருந்து நாம் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணில் நம்மை அழைப்பார்கள் இது தானியங்கி முறையில் செயல்படுவது. இந்த அழைப்பிற்கு நாம் சரியாக பதில் சொன்னால் மட்டுமே பணத்தை வலைத்தளத்தின் வழியாக மாற்றமுடியும் இல்லையெனில் அது திருட்டு பணபரிமாற்றம் என உறுதி செய்யப்பட்டு உடனே போலீஸிற்கு தெரிவிக்கப்படும். இப்படி சில கிடுக்கி பிடிகள் சில வங்கிகளில் மட்டுமே உள்ளது. மொத்தத்தில் நாம் உசாராக இருக்க வேண்டும். ஏனெனில் இதை செய்பவர்கள் மெத்த படித்தவர்களே!

2 comments :

Anonymous said...

உங்கள் இந்த பதிவு youthful.vikatan.com-ல் வந்துள்ளது.

Selvaraj said...

shirdi.saidasan@gmail.com said...
உங்கள் இந்த பதிவு youthful.vikatan.com-ல் வந்துள்ளது.


நன்றி shirdi,
என்னுடைய, வாசித்தபின் வாக்களியுங்கள்! என்ற பதிவும் விகடனில் வெளிவந்தது.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!