.

Loading...

Monday, 6 April 2009

பெண்களுக்கு எச்சரிக்கை!பெண்களுக்கு எச்சரிக்கை!

இன்றைய வாழ்வில் இணையம் மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. இதன் பயன்கள் சொல்லிலடங்கா. அதே நேரத்தில் இதனால் பாதிப்புகளும் சில உள்ளன. அதிலும் பெண்களை குறிப்பாக நம் சமுதாயத்தை பாதிக்கக்கூடிய சில வக்கிர வலை தளங்களை சொல்லாமல் இருக்கமுடியாது.

நவீன உலகில் எங்கும் கேமரா புழங்க ஆரம்பித்துவிட்டது. இதை மூலை முடுக்கெல்லாம் பொருத்தி தீய செயல்களுக்கு பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். ஆரம்ப காலத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட இந்த காமெராக்கள் இன்று வக்கிர புத்தியுள்ளவர்களிடம் சிக்கி தன் தனிதன்மையை இழந்துவிட்டது. அதிலும் குறிப்பாக கைபேசியில் உள்ள கேமராகளை சொல்லலாம்.

இனி இன்றைய தலைப்பிற்கு வருவோம்.

முன்பெல்லாம் வலைத்தளங்களில் நடிகைகளின் ஆபாச படங்கள் மட்டும்தான் வலம் வந்தன. இன்று கல்லூரி பெண்கள் குடும்ப பெண்கள். என்று பாகுபாடில்லாமல் எல்லோருடைய ஆபாச படங்களும் வெளியிடப்படுகின்றன.


இதில் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரியாமலே இவை அவர்களுக்கு தொடர்புடைய ஆண்களால் வெளியிடப்படுகின்றன. இதில் ஆண்கள் தங்களின் முகம் தெரியாதபடி தணிக்கை செய்து இணையத்தில் வெளியிடுகின்றனர். இப்படி வெளியிடப்படும் ஆபாச படங்களின் உரையாடலும் கூடவே இருப்பதால் அவர்கள் கணவன் மனைவி இல்லை என தெரியவருகிறது. இந்த ரகத்தில் பெரும்பாலும் சிக்கும் பெண்கள் கள்ளத்தொடர்புடையவர்கள் அல்லது காதலனால் ஏமாற்றப்படுபவர்கள்.

அடுத்தவகை, பெண்களின் குளியலை குறி வைத்து எடுக்கும் படங்கள். இவை சர்வ சாதாரணமாக காணப்படுகின்றன.


உங்கள் வீட்டில் குளிக்கும் போதுகூட கவனமாக குளியுங்கள். ஏதாவது இடத்தில் உங்களுக்கு தெரியாமலே கேமரா கைபேசி உங்களுக்கு தெரிந்தவர்களால் உங்களை குறிவைத்து வைக்கப்பட்டிருக்கலாம்.அடுத்து இணைய மையங்களுக்கு செல்லும் ஜோடிகள் அங்கு சென்றதுமே சல்லாபத்தில் இறங்கி விடுகின்றனர். இவை live ஆக கூட ஒளி பரப்பபடலாம். இப்படி இணைய மையங்களில் சல்லாபத்தில் ஈடுபட்டவர்கள் பலர் வலைத்தளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறீர்கள். எனவே இணைய மையங்களில்
சல்லாபத்தை தவிருங்கள். காமெராக்கள் இல்லாத மையங்களே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இனி கணவன் மனைவியாக எதாவது விடுதியில் தங்கினால் கூட உறவுகளை தவிர்க்கவும். அது சாதரண ஹோட்டல் ஆனாலும் சரி ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆனாலும் சரி. கல்கத்தாவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கிய ஒரு ஜோடியின் படம் இவ்வாறு வலைத்தளத்தில் வலம் வந்தது. இதை நிட்சயமாக செய்தது அங்குள்ள ஊழியர்களாகத்தான் இருக்கும்.

பெண்கள் மசாஜ் செய்வது கூட வெளியிடப்படுகிறது.

புது தம்பதிகள் தேன்நிலவு செல்வதை தவிர்க்கவும். உங்களை live ஆக காண்பித்தாலும் காண்பிப்பார்கள்.

திருத்தலங்களுக்கு செல்லும் போதுகூட அங்குள்ள விடுதிகளில் மிகவும் கவனமாக குளியுங்கள் அல்லது தவிருங்கள். நடிகை தி...இன் நிர்வாண குளியல் கதவின் பூட்டின் உள் பொருத்தப்பட்டு எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக உங்களின் கணவனை அல்லது காதலனை கூட ஆபாசமாக படம் எடுக்க விடாதீர்கள். எப்போதாவது பிரச்சனை என்று வரும்போது. உங்கள் படங்கள் இந்த வலைத்தளங்களில் வெளியிடப்படலாம். ஆனால் இப்படி திருட்டுத்தனமாக பெண்களை படம்பிடித்து வெளியிடும் கயவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். என்றாவது ஒருநாள் உங்களின் தாயோ, தாரமோ, தங்கையோ இதைபோல வலைத்தளத்தில் வலம்வருவார்கள்.

4 comments :

Anonymous said...

thanks for your social conscience

selvaraj said...

வணக்கம்,

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

செல்வராஜ்

Muhammad Ismail .H, PHD, said...

அன்பின் செல்வராஜ்,

பிகேபியின் இந்த தொழில் நுட்ப பதிவு அனைவருக்கும் ஒரு தீர்வாக இருக்கும்.

ஆயிரத்தோராவது பிரச்சனை

http://pkp.blogspot.com/2008/07/blog-post_03.html


with care and love,

Muhammad Ismail .H, PHD,

Selvaraj said...

தகவலுக்கு நன்றி நண்பரே!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!