கட்டாய ஓய்வு அரசியல்வாதிகளுக்கு. அறுபது வயசை அடைந்தால் அரசு ஊழியர்களே வேலைக்கு லாயக்கு இல்லாதவர்கள் என வெளிய தள்ளப்படும் போது. இந்த நாட்டையே ஆளுபவர்களை அறுபது வயசானதும் ஏன் வெளியே தள்ளக்கூடாதென நான் அடிக்கடி நினைப்பேன். இன்று மரண படுக்கையில் இருந்துகொண்டே ஆட்சி செய்யும் அவலம் பல நாடுகளிலும் உண்டு. நான் சவுதி அரேபியாவில் இருந்தபோது முன்னாள் ராஜா பாகத் அவர்கள சில காலம் இப்படி மரண படுக்கையில் இருந்துதான் ஆட்சி செய்தார். அது அம்மக்களின் தலைவிதி. காரணம் அங்கு மன்னராட்சி. எம்.ஜி.ஆர்.
கூட மரண படுக்கையில் இருந்துதான் சிலகாலம் தமிழகத்தை ஆண்டார். மக்களாட்சி நடக்கும் நாடுகளில் ஏன் இந்த அவலம் என்றுதான் தெரியவில்லை. எல்லாம் நம் தலைவிதிதான் போலிருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெரிய தடைக்கல்லாக இருப்பவர்கள் அறுபதை தாண்டிய அரசியல்வாதிகள் தான் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் ராஜீவ் காந்தியை தவிர எல்லா பிரதமரும் அறுபதை தாண்டியவர்களாகவே இருந்துள்ளனர்
அல்லது இருக்கின்றனர். பிரதமராக துடித்துகொண்டிருக்கும் அத்வானிக்கு என்ன வயசிருக்கும் என நினைத்துபாருங்கள்.
இதில் வயதாகி விட்டதென பதவியை துறந்த ஒரே தலைவர் என்றால் அது திரு ஜோதிபாஸ்
அவர்கள் மட்டும்தான். ஆனால் அவருக்கு மாற்றாக வந்த்தவர்கூட அறுபதை தாண்டியவர்தான். இதற்கு காரணம் என்ன? பதவி, பணம் இரண்டும்தான். நம்ம முதல்வரை சொல்லவே வேண்டாம் தனக்கே நடக்க முடியவில்லை
இதில் இந்த தள்ளாடும் வயதிலும் நாட்டை நடத்த துடித்துகொண்டிருக்கிறார். அவரை விட்டால் தமிழகத்தை வழிநடத்த ஆளில்லை என நினைக்கிறாரோ என்னவோ? யாரு கண்டது. இதற்கு எதாவது விடிவு உண்டா என்று பார்தோம் எனில் இல்லை என்றுதான் தோன்றும். காரணம் இந்த தாதாக்கள் மன்னிக்கவும் தாத்தாக்கள் தான் சட்டத்தை திருத்தவோ, நீக்கவோ, நிறைவேற்றவோ கூடியவர்கள். இதை மீறி ஏதாவது போராட்டம் இளைஞர்களால் நடத்தப்பட்டால் ஒருவேளை சீனாவில் மாணவர்கள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியதை போல நடந்தாலும் நடக்கலாம். சீனாவில் இதை நடத்திகாட்டியவர்கள் தாத்தாக்களே!
0 கருத்துகள் :
கருத்துரையிடுக