இந்திய அரசியலில் பெண்கள்.
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள் ஆனால் இந்த பெண்களை பார்த்தல் பேயும் நடுங்கும் என்றே சொல்லலாம். அவ்வளவு திறமை சாலிகள்?
இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்த பட்டியலில் பலபேர் உள்ளனர்.
இந்திரா காந்தி
இந்தியாவின் இரும்பு பெண் என அழைக்கப்பட்ட இந்திரா காந்தி காலத்தில்தான் இந்தியர்கள் கேள்வி பட்டிராத அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட ஸ்தாபன காங்கிரஸ் ஐ பிளந்து இந்திரா காங்கிரஸ் என்னும் கட்சியை உருவாக்கியவர். இப்போது இந்த இந்திரா காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பெரும்பாலானவர்களும் இதுதான் உண்மையான சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட கட்சி என சிறு பிள்ளைத்தனமாக பேசுவார்கள். ஒருவேளை அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். துரசிஸ்டவசமாக ஸ்தாபன காங்கிரஸ் அழிந்து போனது இன்றைய இந்திரா காங்கிரஸ் காரர்களுக்கு வசதியாக போய்விட்டது.
உள்நாட்டில் இந்திரா காந்தி மோசமாக செயல்பட்டாலும் வெளிநாட்டு விவகாரங்களில் அவர் சிறப்பாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல வெளிநாட்டு தலைவர்களால் மதிக்கப்பட்டார் என்றுகூட சொல்லலாம்
மம்தா பானர்ஜி
இவரை கேள்விப்படாமல் இருக்க மாட்டீர்கள். ஆனானப்பட்ட டாட்டாவையே விரட்டியவர். இந்திரா காங்கிரஸ் கட்சியில் இருந்து கருத்து வேறுபாட்டால் தனி கட்சி தொடங்கியவர். எப்போதுமே பத்திரிகையில் பெயர் அடிப்படும்படியாக எதையாவது கிளரிக்கொண்டிருப்பார். மேற்கு வங்க கம்யூனிஸ்ட்களின் பெரிய தலைவலி இவர்தான். இப்போதும் செல்வி தான்.
உமா பாரதி
இவர் பார்ப்பதற்கு சந்நியாசிபோல உடையணிவார். அனல்கனக்கும் பேச்சாளர்.மொட்டை அடித்து வேறுவேசத்தில் தீவிர போலீஸ் பாதுகாப்பையும் மீறி அயோத்தியினுள் நுழைந்தவர். இவரும் கருத்து வேறுபாடால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேறி தனி கட்சி நடத்துகிறார். இவருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் இன்னொரு பிரபல பெண்மணிக்கும் ஏழாம் பொருத்தம். இவருடைய ஜாதி இவரை பாரதிய ஜனதா கட்சியில் முன்னேற விடாமல் தடுக்கிறது. தமிழகத்தின் கொவிந்தாற்சாரியவுடன் கிசுகிசுக்கப்பட்டவர். இவரும் செல்விதான்.
மாயா வதி
இவர் ஒரு பள்ளி ஆசிரியையாக இருந்தவர். கன்சிராம் I.A.S அதிகாரியால் தலித் மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட கட்சியில் தன்னை இணைத்து அக்கட்சிக்கே தலைவராகி விட்டவர். இப்போது இவரது கனவெல்லாம் அடுத்த பிரதமர் தான்தான் என்பதுதான்.சிறுது காலத்திலேயே பல கோடிகளை சம்பாதித்து பல அரசியல் தலைவர்களையும் பின்னுக்கு தள்ளியவர். இந்த ஊழல் வாதி பிரதமர் ஆனாலும் ஆச்சரிய படமுடியாது.ஊழ்லை தடுக்க இருக்கின்ட துறை என்ன செய்கிறது என்றே தெரியவில்லை இப்போது அழகு நிலையம் சென்று அடிக்கடி தன்னை அலங்கரித்து கொள்கின்டாராம். போற போக்கை பார்த்தால் மைக்கல் ஜாக்சன் போல தன் உடல் நிறத்தையும் மாற்றி விடுவார் போலிருக்கிறது.
ஜெயலலிதா
என்ன புரட்சியை இவர் செய்து புரட்சிதலைவி பட்டம் பெற்றார் என தெரியவில்லை. திறமை உடையவர் ஆனால் திமிரும் உடையவர். எப்பேர்பட்ட மடாதிபதியையே உள்ளே தள்ளியவர். அதே சமயம் தோழியை வெளியே தள்ள முடியாதவர்.இவரும் பிரதமர் ஆக வாய்ப்புகள் உள்ளது, தேவ கௌடா ஒரு சுளுவில் ஆகியதை போல. இவர் மாயாவதிக்கு எவ்வளவோ பரவாயில்லை. இவரும் செல்விதான்.
ஷீலா தீட்சித்
இவர் மேல சொன்ன எந்த பெண்களுடனும் ஒப்பிடமுடியாதவர். இவரை விமர்சிக்க நான் விரும்பவில்லை.
இந்த பெண்களை பார்த்துதான், எப்படி 33 சதவிகிதம் இட ஒதுக்கீது கொடுப்பது என நாடாளுமண்டதில் பயப்படுகிறார்கள் போலிருக்கிறது.
0 கருத்துகள் :
கருத்துரையிடுக