வாரிசு முறை ஒழிக!
வாரிசு முறை ஒழிக! உலகின் பல நாடுகளிலும் மன்னர் ஆட்சி அல்லது வாரிசுகளின் ஆட்சி ஒழிக்கப்பட்டாலும் நடை முறையில் இன்றும் வாரிசு முறை வேறுவிதத்தில் தொத்துநோய் போல இருந்து கொண்டிருக்கிறது. இது பெரும்பாலும் அரசியலிலும் திரைபடதுறையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் வல்லரசு போல தன்னை காட்டிகொள்ளும் அமெரிக்காவிலிருந்து பெரும்பாலும் எல்லா ஏழைநாடுகள் வரை இந்த வியாதி பரவியுள்ளது. இந்த வாரிசுகளில் சிலர் திறமை உடையவர்களாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இவர்களை சம்பந்தப்பட்டவர்கள் களம் இறக்காமல் விடமாட்டார்கள்.
அமெரிக்காவில் அப்பனும் மகனும்
என் இரண்டு புஷ்கள் ஆட்சி செய்து விட்டார்கள். கிளிண்டன் என்ன குறைந்தவரா? அவரும் மனைவியை இறக்கி விட்டுள்ளார்.
இந்தியாவில் சொல்லவே வேண்டாம். நேரு,
இந்திரா,
ராஜீவ்,
ராகுல் இப்படி போய்க்கொண்டே இருக்கும் போலிருக்கிறது.சிலநேரங்களில் வாரிசுகளை அறிமுகப்படுத்தும் முன்பே தலைவர்கள் மண்டையை போட்டுவிட்டால் தொண்டர்கள் என்ன சும்மா விடுவார்களா? இரண்டாம் இடம் மூன்றாம் இடம் என்று எதாவது தலைவர்கள் இருந்தாலும் பிள்ளைகளை பிடித்து தலைவர் ஆக்கிவிடுவார்கள். திரு வாசன்
அவர்கள் அப்படி வந்தவர்தான். அவரை அதற்கு முன்பு அரசியலில் யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள்.
சில நேரங்களில் வாரிசுகள் பதவி ஏற்பதில் சில சட்ட சிக்கல்கள் வரலாம். அப்படிபட்ட நேரத்தில் விசுவாசிகள் சட்டத்தையே மாற்றி வாரிசுகளை பதவியில் அமர்த்தியதும் உண்டு. இதற்கு உதரணமாக சிரியா அதிபரை சொல்லலாம்.
இவரின் தந்தை அதிபராக இருக்கும்போது இறந்துவிட்டார். சிரியா நாட்டின் சட்டப்படி அன்று அதிபராக வரவேண்டுமெனில் 35 வயதாகி இருக்கவேண்டும். அதிபரின் மகனுக்கோ 32 வயதே ஆகி யிருந்தது. விசுவாசிகள் பார்த்தார்கள், சட்டம் என்னடா சட்டம். நீக்கு அதை என சொல்லி, அந்த சட்டத்தையே நீக்கி 32 வயது மகனை அதிபராக்கி விட்டார்கள். இப்படி வாரிசுகள் வர காரணம் அவர்களின் பெற்றோர் மட்டும் காரணம் அல்ல. இரண்டாம், மூன்றாம், நான்காம் தலைவர்கள் கூட காரணம். இரண்டாம் தலைவர் வராதபடி செய்வதற்காகவே வாரிசை புகுத்திவிடுவார்கள்.
இவளவும் சொல்லிட்டு நம்ம முதல்வரை
சொல்லாம விட்டா எப்படியிங்க? பாவம் பேராசிரியர். எப்பவுமே இரண்டாம் இடம். கல்லூரியிலே இருந்திருந்தாலாவது அக்கல்லூரிக்காவது முதல்வர் ஆகியிருக்கலாம். ஆனா பாருங்க! இருட்டு அமைச்சர் ,அவர்தான் இரண்டாம் இடம்போல காட்டி கொள்கிறார். எதோ போங்க, நம்ம முதல்வரும் மெல்ல மெல்ல வாரிசை இறக்கி உறுதி செய்து விட்டார்.
திரைப்பட துறையை சொல்லவே வேண்டாம். ஒரே வாரிசு தொல்லை. இது இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் உண்டு. திரைப்பட துறையை நீங்கள் என்னை விடவும் நன்கு தெரிந்து வைத்திருப்பீர்கள் என்பதால் அதைபத்தி நான் எழுதவில்லை.
0 கருத்துகள் :
கருத்துரையிடுக