.

Loading...

செவ்வாய், 24 மார்ச், 2009

ஏழையின் கனவில் கடவுள்!

ஏழையின் கனவில் கடவுள்!

தன் வாழ்வின் பெரும் பகுதியை கஷ்டத்தோடேயே அனுபவித்து வந்த ஏழை ஒருவனின் கனவில் கடவுள் தோன்றினார். அதிலே கடவுளும் அவனும் கடற்கரையோரமாக நடந்து செல்கின்றனர். அப்போது அவனின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வெரு நிகழ்வுகளும் அங்கே தெரிந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் ஏழைக்கு ஒரு சந்தேகம், கடவுள் தன்னுடன் வருகிறாரா? என்பதை உறுதி செய்திடும்படியாக பின் நோக்கி பார்கிறான். அப்போது அங்கே இரண்டுபேரின் கால் தடங்கள் பதிந்திருப்பதை பார்த்து மிகவும் சந்தோசப்படுகிறான். கடவுள் தன்னுடன் வருகிறார் என்பதை, இதன் மூலம் உறுதி செய்து கொள்கிறான்.

இப்படி அவனின் வாழ்கையில் நடந்த ஒவ்வெரு நிகழ்வுகளும் அங்கே தோன்றி கடைசியாக அவனின் அப்போதைய வாழ்க்கையின் நிகழ்வுகள் தெரிகின்றன. மீண்டும் கடவுள் தன்னுடன் வருகிறாரா? என்பதை உறிதிசெயும் படியாக பின்னோக்கி பார்க்கிறான். அங்கே சில இடங்களில் மட்டும் இரண்டுபேரின் கால்தடமும் நிறைய இடங்களில் ஒருவரின் கால்தடம் மட்டுமே பதிந்திருப்பதை பார்த்து கவலை கொள்கிறான்! அதிலும் குறிப்பாக எப்போதெல்லாம் இரண்டுபேருடைய கால்தடங்கள் பதிந்திருந்ததோ அப்போதெல்லாம் அவன் வாழ்வில் சந்தோசமாக இருந்த நாட்கள். எப்போதெல்லாம் ஒருவருடைய கால்தடம் பதிந்திருந்ததோ அப்போதெல்லாம் அவன் வாழ்வில் மிக கஷ்டங்களை அனுபவித்த காலம் என்பதை உணர்கிறான்.

ஆக, நான் துன்பத்தை அனுபவித்த நேரம் கடவுள் என்னைவிட்டு போய்விட்டார். எனவேதான் ஒரு கால்தடம் பதிந்துள்ளது. நான் சந்தோசமாக இருந்த நாட்களில் மட்டும் கடவுளும் என்னோடு இருந்திருக்கிறார், எனேவேதான் அங்கே இரண்டுபேரின் கால்தடம் பதிந்துள்ளது என்னும் முடிவிற்கு வருகிறான். இதை அவன் கடவுளிடம் கேட்கிறான். நான் துன்பப்படும்போது நீர் என்னைவிட்டு போய்விட்டீரே! உம்முடைய கால்தடத்தை காணவில்லையே! என முறையிடுகிறான்.

அப்போது கடவுள் சொல்கிறார்: இல்லை மகனே! நீ துன்பப்படும்போது உன்னை நான் என் கரங்களில் தாங்கியிருந்தேன். அதனால் உன் பாதம் தரையில் படவில்லை. என் கால்தடம்தான் பதிந்திருந்தது. எப்போதெல்லாம் நீ சந்தோசமாக இருந்தாயோ அப்போதுதான் உன் சொந்த காலிலே நீ நடந்தாய் என்று.

நீங்களும் வாழ்வின் பெரும்பகுதியை கஷ்டங்களோடு அனுபவிக்கிறீர்களா? அப்படியெனில் கடவுள் உங்களோடு இருக்கிறார்.

2 கருத்துகள் :

Unknown சொன்னது…

romba arumaiyaga irunthathu manathiruku aruthalaga irunthathu

Selvaraj சொன்னது…

உங்கள் கருத்திற்கு நன்றி.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!