.

Loading...

வெள்ளி, 11 ஜனவரி, 2013

நிஸ்ஸானின் மின்சாரக் கார்!


நிஸ்ஸானின் மின்சாரக் கார்! இது வரை சோதனை ஓட்டங்களிலேயே இருந்துவந்த மின்சாரக்கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் போனதால், புழக்கத்திற்கு வராமல் இருந்தது. இப்போது நிஸ்ஸான் இந்த தடையை தகர்த்து, தனது புதிய Leaf காரை விற்பனைக்கு கொண்டு வந்த்துள்ளது. பசுமை விரும்பிகளை கவரும் இந்த கார் புகை காக்காது. எனவே நகரை மாசுபடுத்தாது.
நம் வீட்டில் உள்ள பிளக்கிளிருந்தே மின்சாரத்தை சார்ஜ் செய்துகொள்ளலாம். ஆனால் இதற்கு எட்டு மணிநேரம் தேவைப்படும். ஆனால் பெட்ரோல் நிலையத்தில் உடனேயே சார்ஜ் செய்து கொள்ளலாம். வெறும் இரண்டு பவுண்டில் சுமார் நூறு மைல் ஓடக்கூடியது. அதாவது ஒருமுறை பாட்டரி சார்ஜ் ஆனால் 100 மைல்களுக்கு மேல் ஓடும். பெட்ரோல் மற்றும் டீசல் கார்களைப்போல மணிக்கு 90 மைல் வேகத்தில் செல்லும். இங்கு இங்கிலாந்த்தில் இதற்கு சாலை வரி கிடையாது, கூடவே லண்டன் மாநகரில் ஓட்டுவதற்கான congestion சார்ஜ்-ம் கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த காரை வாங்க அரசு 5000 பவுண்டு வழங்குகிறது.
தமிழகத்தில் இருந்துகொண்டு இந்த காரை ஓட்டுவது மாதிரி கனவு எல்லாம் காணாதீர்கள். அப்புறம் கரண்டிற்கு களவாணவா போவீர்கள்!

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!