.

Loading...

சனி, 21 மே, 2011

எதிர் வீட்டில் ஆப்ரிக்கன்!

எதிர் வீட்டில் ஆப்ரிக்கன்!

ஆப்ரிக்கர்கள் என்றாலே கடின உள்ளம் கொண்டவர்கள் என்றும், குற்ற செயல்களில் ஈடுபடுகிறவர்கள் என்றும், ஒரு பொதுவான கருத்து உண்டு. புள்ளி விவரங்களும் அதைதான் காட்டுகின்றன. இங்கு லண்டனில் இந்த ஆப்ரிக்க இன மக்கள் தாராளமாகவே இருக்கின்றனர். அதிலும் சில குறிப்பிட்ட இடங்களில், இவர்கள் பெரும்பான்மையாகவே வாழ்கின்றனர். ஆனால் நான் வசிக்கும் இடத்தில் இவர்கள் கிடையாது, எப்போதாவது சிலரை காணலாம்.

இப்படி இருக்கும்போது, என் எதிர் வீட்டில் ஒரு ஆப்ரிக்கன் குடியிருக்க வந்துவிட்டார். அதுவும் கடந்த கடுங்குளிரில். பொதுவாகவே இங்கு யாரும் வீட்டின் கதவை திறந்து வைத்து கொண்டிருக்க மாட்டார்கள். இந்த ஆப்ரிக்கன் வந்த நாளிலிருந்து, அண்ட குளிரிலும் கதவை திறந்து வைத்துக்கொண்டு, சாலையையே பார்த்துக்கொண்டிருப்பான். எப்போது பார்த்தாலும் போதையோடு இருப்பது போலவே தோன்றும்! என்னுடைய பார்வையில் இவன் போதை பொருட்களுக்கு அடிமையானவன் போலவே தோன்றினான்.

நாங்கள் எப்போது வெளியே போகிறோம், வருகிறோம் என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருப்பான். என் மனைவி சொல்லுவாள், "இவன் எப்பவுமே நம்மை பார்த்துகிட்டே இருக்கான் என". நான் சொல்லுவேன், "அவன், அவனின் வீட்டின் முன் இருக்கிறான். நமக்கென்ன என?" இருந்தாலும் என் மனதிலும் அதே எண்ணம்தான்.

ஒரு வாரம்தான் ஆகியிருக்கும், இரவு பன்னிரண்டு மணிக்கு நாய் குரைக்கும் சத்தம். யாருமே நாயை இரவில் வெளியே விடமாட்டார்கள். விட்டால், நாய் காலையில் குளிரில் செத்து கிடக்கும். எனவே இது எந்த நாய் என ஜன்னல் வழியே பார்த்தால், போலிஸ் நாய். பத்திற்கு மேற்பட்ட போலீசுடன். இந்த ஆப்ரிக்கனின் வீட்டை போலிஸ் முற்றுகை இட்டிருந்த்தது. இதன் பின்னர் CCTV காமெரா வழியாக பார்த்துகொண்டிருந்தேன். போதை பொருட்களோடு தொடர்புடைய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்தான்.

ஒருவழியாக எங்களுக்கு இருந்த "எதிர் வீட்டில் ஆப்ரிக்கன்!" கவலை தீர்த்தது.

4 கருத்துகள் :

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

crime story போல சொல்லிடீங்க அருமை

Selvaraj சொன்னது…

ஸ்ரீ.கிருஷ்ணா said...
crime story போல சொல்லிடீங்க அருமை

//கருத்திற்கு நன்றி கிருஷ்ணா!//

Angel சொன்னது…

அவர்களில் பலவிதம் சகோ . மிகவும் அன்பாக பழகுவார்கள் .
சிலர் முரட்டு குணமுடையவர்கள் .சிலர் நீங்கள் குறிபிட்டுள்ளபடி .

Selvaraj சொன்னது…

angelin said...
அவர்களில் பலவிதம் சகோ . மிகவும் அன்பாக பழகுவார்கள் .
சிலர் முரட்டு குணமுடையவர்கள் .சிலர் நீங்கள் குறிபிட்டுள்ளபடி .

//கருத்திற்கு நன்றி ஏஞ்சலின்! அவர்களில் எனக்கு நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள்//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!