.

Loading...

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?

ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?

நாம் எல்லோருமே எப்போதாவது ஜோசியர்களை சந்தித்திருப்போம். நம் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகுது என தெரிந்து கொள்ள. இப்படி மற்றவர்களின் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என புட்டு புட்டு வைக்கும் இவர்களின் எதிர்காலத்தில், என்ன நடக்கும் என, இவர்களுக்கு தெரியுமா? என்னும் சந்தேகம் நீண்ட நாட்களாகவே எனக்கு இருக்கிறது. அதற்கு காரணம் எனக்கு தெரிந்த ஒரு ஜோசியருக்கு நடந்த சம்பவம்தான்.

இப்போ நம்ம ஜோஷிய திலகங்கள் சதீஷ் குமார், சித்தூர் முருகேசன் இன்னும் சிலர் பிரபல பதிவர்களாக இருப்பதால் இதை கேட்டு விட்டால் போச்சு என தோன்றியது. அதுதான் இந்த பதிவு.

இவர் சட்டை போட்டு நான் பார்த்ததில்லை! ஆனால் சந்தணத்தைதான் சட்டையாக அணிந்திருப்பார்! பட்டை நெற்றியில் மட்டுமல்ல, கைகளிலும் போட்டிருப்பார்! பெரிய பெரிய உத்ராட்ச மாலை அணிந்திருப்பார். காலையிலேயே வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஒரு சாய்வாரத்தின் கீழ் உட்கார்த்து விடுவார். இவரிடம் உள்ளூர் வாசிகள் யாரும் அவ்வளவாக செல்வதில்லை. ஆனால் வெளியூரிலிருந்து காரில் அவ்வப்போது ஆட்கள் ஜோசியம் கேட்க வருவதுண்டு.

இவரை ஆசான் என்றும் கூட அழைப்பார்கள். மனிதருக்கு ஐந்து பெண்பிள்ளைகள். எனவே தன் சொந்ததிலிருந்து ஒருவரை வளர்ப்பு மகனாக வைத்திருந்தார். அவனைத்தான் தன் ஜோசிய வாரிசாக வைத்திருந்தார். இவருடைய பெண்பிள்ளைகளில் நான்கு பேருக்கு திருமணமாகியிருந்தது . இளையவளுக்கு மாத்திரம் திருமணமாகவில்லை. அவள் கல்லூரியில் படித்துகொண்டிருந்தாள். இந்த ஜோசியரின் இரண்டு மகள்களை உள்ளூரேலேயே திருமணம் செய்து கொடுத்திருந்தார்.

ஒருநாள் இந்த இளைய மகள் கல்லூரியிலிருந்து வரவும் வீடு பூட்டியிருந்தது. ஜோசியர் வெளியூர்வாசிகளுக்கு நடக்கப்போவதை சொல்லிக்கொண்டிருந்தார். எனவே அவர்களை தொந்தரவு செய்யாமல், கதவை தட்டிக்கொண்டேயிருந்தாள். தாய்க்கு என்ன ஆனதோ என பதறிப்போய் பக்கத்திலே வசித்துவந்த சகோதரியையும் அவள் கணவரையும் அழைத்து வந்தாள். அவர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது அங்கே அவர்கள் கண்டகாட்சி.... பாவம், ஜோசியரின் வளர்ப்பு மகனும் ஜோசிய வாரீசுமானவனும், ஜோசியரின் மனைவியுடன் சல்லாபத்தில்...

அவ்வளவுதான், குடும்பத்தில் நடந்த குழப்பத்தினால் ஜோசியரின் மனைவி சிலமாதங்கள் தன் சகோதரியின் வீட்டில் அடைக்கலமானார். மீண்டும் சமாதனம் ஏற்பட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். வளர்ப்பு மகன் இந்த சம்பவத்திற்குப்பின் தனியாக ஜோதிட தொழிலில் இறங்கி விட்டான். பாவம்! நாகர்கோவில் வாசிகள். காரணம், இவன் இப்போது நாகர்கோவிலில் ஜோசியராக இருக்கிறான். இதிலிருந்து வந்த சந்தேகம்தான் இந்த பதிவு. இந்த ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?

17 கருத்துகள் :

Jayadev Das சொன்னது…

//ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?// ஏன் சார் இந்த ஒரு கேள்வியோட நிறுத்திட்டீங்க? ஜோசியர்களுக்கு பசிக்குமா, காய்ச்சல் வருமா, அவங்களும் கிழடு தட்டுவாங்களா, நம்மை போல ஒரு நாள் செத்துப் போவாங்களா....... இப்படி கேட்டுகிட்டு போகலாமே! After all அவங்களும் மனிதர்கள்தானே சார். நீங்க கிறிஸ்தவரா இருப்பதனால், இன்னொரு நம்பிக்கையினரைப் பார்த்து நக்கலடிக்கிறீர்கள், அந்த மதத்திலிருந்து, தப்பி அதை விட சிறந்த பாதை என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு வழியை பின்பற்றுவதால் தங்களை உயர்ந்தவர், அதிர்ஷ்டசாலி என்று நினைத்துவிட்டீர்கள். நீங்கள் இப்படிக் கேட்டால், தினகரன் குடும்பம் ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் தேவனிடம் பிரார்த்தித்து கஷ்டங்களைப் போக்கும் வேலையைச் செய்து கொண்டுள்ளார்கள், ஆனால் அவர்கள் குடும்பத்திலேயே உயிரிழப்பு இன்ன பிற கொடுமையான இன்னல்கள் நேர்ந்தனவே. அப்படியானால் அவர்கள் சொந்த கஷ்டத்தையே போக்க முடியாத நிலையில் எப்படி ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் இறைவனிடம் எடுத்துரைத்து கஷ்டத்தைப் போக்கும் புரோக்கர் வேலையை செய்ய முடியும்? குறை கண்டுபிடிக்க வேண்டுமானால் எங்கு வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம்.

Jayadev Das சொன்னது…

இப்போ விஷயத்துக்கு வருவோம். ஜோதிடம் நிஜமா பொய்யா? பதில், ஜோதிடம் உண்மைதான். ஆனால், சரியாக ஜாதகத்தை கணித்துச் சொல்வதென்பது ஒரு கலை, அதில் எல்லோரும் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்ல முடியாது. ஜோதிடத்தின் அடிப்படை என்ன? மனிதர்கள் பிறக்கிறோம், இந்த பிறப்புக்கு முன்னும் இருந்தோம், இறந்த பின்பும் இருப்போம், ஆன்மாவுக்கு அழிவில்லை. முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணிய கணக்கோடு இந்தப் பிறவிக்கு வந்துள்ளோம், இப்போது செய்யப்படும் வேலைகளைப் பொறுத்து அடுத்து எங்கு எந்த உடலில் பிறப்போம் என்று முடிவு செய்யப்படும். மனிதர்களில் பிறக்கும் குடும்பச் சிறப்பு, அறிவு, அழகு, கல்வி, செல்வம் இவை அத்தைனையிலும் ஏற்றத் தாழ்வு உள்ளது. இறைவன் எல்லோருக்கும் சமமானவன் ஆகையால் இந்த ஏற்றத் தாழ்வு இருந்தே இருக்கக் கூடாது. ஆனாலும் என் இவை இருக்கின்றன, அதற்க்குக் காரணம் யார்? நாமேதான் என்று இந்து மதம் கூறுகிறது. நம்முடைய செயல்களே இவற்றுக்குக் காரணம் என்கிறது. [தொடரும்..]

Jayadev Das சொன்னது…

இதற்க்கு மாற்றாக ஒரு வாதம் வைக்கப் படுகிறது. "முற்பிறவி எல்லாம் ஒன்றுமில்லை, நீ இந்தப் பிறப்பில் தான் தோன்றினாய். நீ இப்போது செய்த செய்த செயல்களின் பலனாகவே இன்ப துன்பங்களை அனுபவிக்கிறாய்". அப்படியானால், குழந்தைகள் பிறக்கும் போதே நோய்களுடனும், அங்க குறைபாடுகளோடும், சாப்பாட்டுக்கே வழியில்லாத இடங்களிலும் பிறக்கின்றனவே, அதெப்படி? குழந்தை இப்போதுதானே பிறந்திருக்கிறது, அது என்ன பாவம் செய்தது? அதே சமயம், பணக்காரன் வீட்டில் ஆரோக்கியத்துடன், எல்லா நலத்துடனும் ஒரு குழந்தை பிறக்கிறதே, அது எப்படி. இவை இரண்டுக்கும் என்ன காரணம். யார் எங்கே பிறக்க வேண்டுமென்று யார் முடிவு செய்தது?

Jayadev Das சொன்னது…

ஆக, நாம் முன்பு செய்த பாவ புண்ணியங்களின் பலன்களை இப்போது அறுவடை செய்கிறோம், அதை குத்து மதிப்பாக அறிந்து கொள்ள பல வழிகள் உண்டு, அதில் ஒரு வழி தான் ஜோதிடம். ஜோதிடம் பார்ப்பவன், ஒன்றும் கடவுள் இல்லை, மற்றவர்கள் போல சாதாரண மனிதன்தான். அவனுடைய முற்பிறவி செயல்பாடுகள் மூலமாக அந்த திறமையைப் பெற்றிருக்கிறான். மற்றபடி அவனுக்கும் பாவ புண்ணிய கணக்கு உண்டு, அதன் படிதான் அவன் வாழ்க்கையும் அமையும். பரிகாரம் செய்தால் ஓரளவு காட்டத்தைக் குறைக்கலாம், மற்றபடி அவனும் அதிலிருந்து தப்ப முடியாது. நீங்கள் சொல்லியுள்ள கதை ஒரு நம்பிக்கையினரை நையாண்டி பன்னி உங்கள் நம்பிக்கையை உயர்வாக நினைக்க உங்களுக்கு உதவலாம். மனிதனைப் பிறந்த எல்லோருக்கும் இன்ப துன்பங்கள் இருக்கும், மரணம் இருக்கும், நோய் இருக்கும், முதுமை இருக்கும். மதபோதக்னாக இருப்பதாலோ, ஜோதிடனாய் இருப்பதாலோ இதிலிருந்து விலக்கு கொடுக்கப் பட மாட்டாது. இறைவன் செய்த சட்ட திட்டப் படி அவரவர் செயல்களுக்கு சம்பளம் அளிக்கப் படும், இந்தப் பிறவியிலோ, அடுத்த பிறவியிலோ.

Unknown சொன்னது…

http://anubavajothidam.blogspot.com/2011/02/blog-post_456.html

Selvaraj சொன்னது…

Jayadev Das said...
நீங்க கிறிஸ்தவரா இருப்பதனால், இன்னொரு நம்பிக்கையினரைப் பார்த்து நக்கலடிக்கிறீர்கள், அந்த மதத்திலிருந்து, தப்பி அதை விட சிறந்த பாதை என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு வழியை பின்பற்றுவதால் தங்களை உயர்ந்தவர், அதிர்ஷ்டசாலி என்று நினைத்துவிட்டீர்கள்.

//அப்படியல்ல! இது இந்து மதத்தை கிண்டலடிக்கும் செயலல்ல. ஜோசியம் சொல்லுபவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். நான் கிறிஸ்தவம் உயர்ந்த்ததென சொல்லவில்லை. தினகரனின் கிறிஸ்தவ ஊழியத்தில் எனக்கு உடன்பாடில்லை!//

Selvaraj சொன்னது…

Jayadev Das said...
இப்போ விஷயத்துக்கு வருவோம். ஜோதிடம் நிஜமா பொய்யா? பதில், ஜோதிடம் உண்மைதான். ஆனால், சரியாக ஜாதகத்தை கணித்துச் சொல்வதென்பது ஒரு கலை, அதில் எல்லோரும் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்ல முடியாது. ஜோதிடத்தின் அடிப்படை என்ன? மனிதர்கள் பிறக்கிறோம், இந்த பிறப்புக்கு முன்னும் இருந்தோம், இறந்த பின்பும் இருப்போம், ஆன்மாவுக்கு அழிவில்லை. முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணிய கணக்கோடு இந்தப் பிறவிக்கு வந்துள்ளோம், இப்போது செய்யப்படும் வேலைகளைப் பொறுத்து அடுத்து எங்கு எந்த உடலில் பிறப்போம் என்று முடிவு செய்யப்படும். மனிதர்களில் பிறக்கும் குடும்பச் சிறப்பு, அறிவு, அழகு, கல்வி, செல்வம் இவை அத்தைனையிலும் ஏற்றத் தாழ்வு உள்ளது. இறைவன் எல்லோருக்கும் சமமானவன் ஆகையால் இந்த ஏற்றத் தாழ்வு இருந்தே இருக்கக் கூடாது. ஆனாலும் என் இவை இருக்கின்றன, அதற்க்குக் காரணம் யார்? நாமேதான் என்று இந்து மதம் கூறுகிறது. நம்முடைய செயல்களே இவற்றுக்குக் காரணம் என்கிறது.

//தகவலுக்கு நன்றி அய்யா!//

Selvaraj சொன்னது…

Jayadev Das said...
நீங்கள் சொல்லியுள்ள கதை ஒரு நம்பிக்கையினரை நையாண்டி பன்னி உங்கள் நம்பிக்கையை உயர்வாக நினைக்க உங்களுக்கு உதவலாம்.

//தவறாக நினைக்கிறீர்கள்! எனக்கு அந்த எண்ணம் கிடையாது//

Selvaraj சொன்னது…

Vinoth said...
http://anubavajothidam.blogspot.com/2011/02/blog-post_456.html

//தகவலுக்கு நன்றி வினோத்!//

பெயரில்லா சொன்னது…

கருத்து சொல்ல உங்களுக்கும் உரிமை உண்டு...ஜாதகம் என்பது கணிதம்..அண்ணாமலை பல்கழைகழகம் இதை அங்கீகரித்து பாடமாக நடத்தி வருகிறது...அதை கற்க முயற்சித்தால் மட்டுமே ஜோதிடக்கலை பற்றிய சந்தேகங்கள் அகலும்...கரையிலிருந்து பார்த்தால் ஆற்றின் ஆழம் தெரியாது...ஒரு ஜோதிடரை வைத்து ஜோதிடக்கலை இப்படித்தான் இருக்கும் என்பதை வரையறுத்து விட முடியாது...ஜாதகம் பார்க்க வருபவர்களுக்கு ஜோதிடர் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால்தானே பணம் தரப்போகிறார்?

பெயரில்லா சொன்னது…

எனக்கு தெரிந்து பெரும்பாலான ஜோதிடர்கள் தங்கள் வாழ்க்கை பற்றியோ எதிர்காலம் பற்றியோ ஆராய்ச்சி செய்துகொள்வதில்லை..தங்கள் குடும்பத்திற்கும் பார்த்துக்கொள்வதில்லை..காரணம்...சே.குமார் எழுதிய ஒரு ஜோதிட சிறுகதை பதிவை படித்தால் புரியும்..

பெயரில்லா சொன்னது…

தாங்கள் ஜோதிடம் கற்ற குருவிடம் மாத்திரமே தங்கள் குடும்பம்,தங்களை பற்றிய விவரங்களை அறிந்து கொள்வார்கள் அதுதான் சரி

Selvaraj சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் said...
தாங்கள் ஜோதிடம் கற்ற குருவிடம் மாத்திரமே தங்கள் குடும்பம்,தங்களை பற்றிய விவரங்களை அறிந்து கொள்வார்கள் அதுதான் சரி

//உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றி சதீஷ் குமார்!//

MANI சொன்னது…

ஜோதிடம் குறித்தோ அல்லது ஜோதிடர்கள் குறித்தோ நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் கவலைப்பட வேண்டியவர்கள் அவர்களிடம் ஜோதிடம் பார்ப்பவர்கள் அல்லவா. எங்கோ ஒரு இடத்தில் நடந்த தகாத உறவுக்காக அனைவரையும் ஒரே தராசில் வைத்து எடைபோட வேண்டாம். ஜோதிடத்தையும், இந்து மத நம்பிக்கைகளையும் உடைக்க நினைக்கும் கிறிஸ்துவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றுதான் உங்கள் மதத்தில் நடப்பவை எல்லாம் சரியாக நடக்கிறதா என்று முதலில் பாருங்கள் மூடநம்பிக்கைகள் எல்லா மதங்களிலும் உண்டு சுகமளிக்கும் கூட்டங்கள், பரிசுத்த ஆவி, பிதா என்றெல்லாம் பம்மும் உங்கள் மதத்தில் உள்ள நம்பிக்கைகள் போன்றதே இந்துக்களின் நம்பிக்கைகளும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எங்களைப்பற்றி என்ன பேசினாலும் எழுதினாலும் சகிப்புத்தன்மையுடன் இருப்பவர்கள் நாங்கள் அதனால்தான் சிறுபான்மையினரான நீங்கள் எங்கள் நாட்டில் எங்களை விமர்ச்சிக்கும் சுதந்திரத்தையும், சலுகைகளையும் நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால் நீங்கள் பெரும்பான்மையாக உள்ள உங்கள் கிறிஸ்துவ நாடுகளில் நீங்கள் இவ்வாறு நடந்து கொள்கிறீர்களா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அவரவர் மதம் அவர்களுக்கு உயர்ந்தது. உங்கள் கேலி கிண்டல் பிரச்சாரத்தை போய் முஸ்லீம்களிடம் செய்து பாருங்கள் நிறைய கைநிறைய கொடுப்பார்கள் புரிகிறதா.

Selvaraj சொன்னது…

MANI said..
ஜோதிடத்தையும், இந்து மத நம்பிக்கைகளையும் உடைக்க நினைக்கும் கிறிஸ்துவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றுதான் உங்கள் மதத்தில் நடப்பவை எல்லாம் சரியாக நடக்கிறதா என்று முதலில் பாருங்கள் மூடநம்பிக்கைகள் எல்லா மதங்களிலும் உண்டு சுகமளிக்கும் கூட்டங்கள், பரிசுத்த ஆவி, பிதா என்றெல்லாம் பம்மும் உங்கள் மதத்தில் உள்ள நம்பிக்கைகள் போன்றதே இந்துக்களின் நம்பிக்கைகளும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

//உங்கள் கருத்திற்கு நன்றி மணி! ஆனால் நான் என் பதிவில் இந்துமதத்தை குறையாக சொல்லவில்லையே! ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா என கேட்டிருந்தேன்.சதீஷ்குமார் அவரின் பின்னூட்டத்தில் அதற்கான பதிலை சொல்லியுள்ளார்//

MANJULA சொன்னது…

திரு மணி அவர்கட்க்கு ,
ஜோதிடத்திருக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் ..............
திரு.செல்வராஜ் தன்னுடைய பதிவில் அப்படி எதுவும் குறிப்பிடவில்லையே ......

Selvaraj சொன்னது…

MANJULA said...

திரு மணி அவர்கட்க்கு ,
ஜோதிடத்திருக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் ..............
திரு.செல்வராஜ் தன்னுடைய பதிவில் அப்படி எதுவும் குறிப்பிடவில்லையே ....

//உங்கள் கருத்திற்கு நன்றி மஞ்சுளா!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!