.

Loading...

புதன், 9 பிப்ரவரி, 2011

கணிணியாகும் தொலைக்காட்சி!

கணிணியாகும் தொலைக்காட்சி!

தொலைகாட்சியில் இன்று 3D மற்றும் இணைய தொலைகாட்சிகளே பிரபலமாக உள்ளன!
கணிணியில் டிவி tuner நிறுவி தொலைக்காட்சியாக பயன்படுத்திய நிலைமை மாறி இன்று தொலைக்காட்சியே கணிணியின் செயல் பாட்டினை செய்யும் காலமாக மாறிவிட்டது. கருப்பு வெள்ளையில் தொடங்கி இன்று முப்பரிணாம(3D) தொலைகட்சியாக வந்துவிட்டது. இந்த 3D தொலைகாட்சியை பார்க்க வேண்டுமென்றால் "குட்டிச்சாத்தான்" படம் பார்த்ததுபோல 3D கண்ணாடி அணிந்து கொண்டுதான் பார்க்க முடியும். எத்தனை 3D கண்ணாடி வாங்குவது? வீட்டில் நண்பர்கள் வந்தால் அவர்கள் எப்படி பார்ப்பது? விலையும் மிகவும் அதிகம். இப்படி நிறைய சிக்கல்கள் இதில் இருக்கிறது. எனவே இணைய தொலைகாட்சியை இப்போது பார்ப்போம்.




சென்ற வாரம்தான் இந்த இணைய தொலைக்காட்சி வாங்கினேன். இதில் நாம் இன்டர்நெட் ஹப் அல்லது ரூட்டர் வழியாக இணைப்பை கொடுத்துகொள்ளலாம். இல்லையெனில் அவர்களே கொடுத்திருக்கும் ஒயர்லெஸ் USB dongle வழி இணைத்து கொள்ளலாம். எனவே ஒயர்களின் தொந்தரவு இன்றி எந்த இடத்திலும் தொலைகாட்சியை வைத்துகொள்ளலாம். இதில் Youtube, flicker -ன் எல்லா வீடியோக்களையும் கண்டு களிக்கலாம். கூடவே facebook, twitter அப்டேட்ஸ் களையும் பார்த்து கொள்ளலாம்.இன்னும் கூடவே இணைய தொலைகாட்சிகளையும் காண முடிகிறது. வேகம் குறைந்த இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு இது buffering ஆக நிறைய வாய்ப்புள்ளது. அதே நேரம் பய்பெர் ஆப்டிக் இணைப்பெனில் மிக தெளிவாக இருக்கும்.



அதுமட்டுமல்லாமல் பி.பி.சி யின் iplayer இருப்பதால் ஒருவாரத்திற்கு முந்திய தொலைக்காட்சி நிகழ்சிகளையும் கூட பார்த்துக் கொள்ளலாம். அதோடு மட்டுமல்லாமல் விரும்பக்கூடிய நிகழ்சிகளை USB வழியே பதிவு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. 3D தொலைகாட்சியோடு ஒப்பிடும்போது விலை இதற்கு குறைவு. நிறைய வசதிகளுடன்.

இப்போது கணிணியின் சில செயல்பாடுகளே தொலைகாட்சியில் இருந்தாலும், இன்னும் சிறிது நாளில், மொத்த கணிணியின் செயல்பாடும், தொலைகாட்சியில் வந்துவிடும் என்பதுதான் உண்மை!

4 கருத்துகள் :

Unknown சொன்னது…

கணினி, தொலைகாட்சி, மற்றும் மொபைல் எல்லாம் இனைந்து வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

மேலும் டிஎப்டி திரையாக இல்லாமல் பாக்கெட் சைஸ் புரெஜக்டராக வரும்போது.. அனைவரின் வீட்டிலும் அத்தியாவசிய பொருளாகும்...

Selvaraj சொன்னது…

Vinoth said...
கணினி, தொலைகாட்சி, மற்றும் மொபைல் எல்லாம் இனைந்து வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

மேலும் டிஎப்டி திரையாக இல்லாமல் பாக்கெட் சைஸ் புரெஜக்டராக வரும்போது.. அனைவரின் வீட்டிலும் அத்தியாவசிய பொருளாகும்

//உங்கள் கருத்திற்கு நன்றி வினோத்!//

புரட்சிக்கவி சொன்னது…

where it is available in india and what is the rate ?

Selvaraj சொன்னது…

புரட்சிக்கவி said...

where it is available in india and what is the rate ?

//உங்கள் வருகைக்கு நன்றி ஐயா! இந்த இணைய வசதியுடைய தொலைக்காட்சிகள் இங்கு எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. விலை சாதாரண தொலைக்காட்சியைவிட கொஞ்சம் கூடுதல். Please see this link for details: http://www.sony.co.in/product/kdl-32ex520

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!