.

Loading...

செவ்வாய், 13 ஜூலை, 2010

பெயர் பிரச்சனை பெரிய பிரச்சனை!

பெயர் பிரச்சனை பெரிய பிரச்சனை!

இந்தியாவை விட்டு வெளியே வரும் ஒவ்வருவரும் சந்திக்கக்கூடிய பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. நம்முடைய பாஸ்போர்ட்டில் பார்த்தீர்களானால் தந்தையின் பெயரை முதலிலும் அடுத்து நம்முடைய பெயரையுமாக போட்டிருப்பார்கள். surname என்பதில் சும்மா ஒரு வரை போட்டுவிடுவார்கள்.

இதனால் அரபு நாட்டில் இருப்பவர்களை, அரபிகள் தந்தையின் பெயரை சொல்லி கூப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன். இங்கு ஐரோப்பாவில் surname தான் முதலில் கேட்பார்கள். நம்ம ஆட்கள் உடனே சொல்வார்கள் எங்க ஊரில் surname எல்லாம் கிடையாதுன்னு. அதுக்காக சும்மா விட்டுருவாங்களா என்ன? சட்டப்படி ஒரு surname கொடுத்துதான் ஆகணும்.இதனால் நம்மாட்கள் தங்களின் கடைசி பெயரை surname ஆக கொடுத்து விடுவார்கள். நான்கூட அப்படித்தான் செய்திருக்கிறேன். நான் லண்டன் வந்த புதிதில் வங்கி கணக்கு தொடங்க சென்ற போது, என் பாஸ்போர்ட்டை பார்த்து விட்டு அதில் surname இல்லையென திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்புறமாக வேறு வங்கியில் சென்று கணக்கு தொடங்கினேன். இந்த வங்கியில் உள்ளவருக்கு இந்திய நடைமுறை தெரிந்ததால் பிரச்சினை இல்லாமல் போனது. நான் திருமணத்திற்கு முன்பே வெளிநாடு வந்துவிட்டதால் என் பிள்ளைகளுக்கு இந்த பிரச்சனை வராதபடி பார்த்துக்கொண்டேன்.

இப்போதுதான் நாம் உலக மயம் என்று சொல்லுகிறோம். எனவே நம் பெயரையும் உலகத்திற்கு ஏற்றதாக வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
நம் புதிய தலைமுறையினர், இனி தங்கள் குழைந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது நிச்சயமாக இதை கருத்தில் வைத்து பெயர் வைக்க வேண்டும். எதோ படிக்க ஆங்கில மீடியத்தில் விட்டால் மட்டும் போதாது. ஒன்றிற்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ளவர்கள் தங்களின் எல்லா பிள்ளைகளுக்கும் இரண்டாம் பெயர் பொதுவாக வரும்படி பாத்துக்கொள்ள வேண்டும். முதல் பெயர்தான் பிள்ளைகளுக்கு வித்தியாசமாக இருக்க வேண்டும். முடிந்த்தவரை தந்தைக்குள்ள இரண்டாம் பெயரையே பிள்ளைகளுக்கும் வைத்தல் நல்லது. அதுவே குடும்ப பெயராக நிலைக்கும்.
ஏனென்றால் இங்கு முதல் பெயர்தான் நம் பெயர் எனவும், இரண்டாம் பெயர் குடும்ப பெயர் எனவும்தான் நினைப்பார்கள். இது இனிவரும் தலைமுறைக்கு மிகவும் அவசியம். இன்று தமிழன் இல்லாத நாடே இல்லையென சொல்லலாம். இதை ஒவ்வருவருடைய வலை பக்கத்தின் பார்வையாளர்களின் பட்டியலில் காணலாம். நூற்றிற்கு மேற்பட்ட நாடுகளில்லிருந்து வாசகர்கள் வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவர்களெல்லாம் இப்படி ஒரு பிரச்சினையை சந்த்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே இந்தியாவில் இருப்பவர்கள் இதை கருத்தில் கொள்வது நல்லது. "நாமெல்லாம் இப்போது திரவியத்தை தேடுகிறோமோ இல்லையோ! திரைகடலை தாண்டுகிறோம்!"

2 கருத்துகள் :

நீச்சல்காரன் சொன்னது…

சரியச் சொன்னேங்கண்ணே ஆனால் நம்முடைய தனித்தன்மை பாதிக்குமோவென்றும் தோன்றுகிறது.

Selvaraj சொன்னது…

//சரியச் சொன்னேங்கண்ணே ஆனால் நம்முடைய தனித்தன்மை பாதிக்குமோவென்றும் தோன்றுகிறது//

அய்யா! நம் தமிழர்களில் எத்தனைபேர் இன்று வேட்டி கட்டுகிறோம்? அதைப்போலத்தான்!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!