.

Loading...

Saturday, 17 July 2010

கத்தோலிக்கர்கள் சிலைகளை வழிபடுகிறார்களா?

கத்தோலிக்கர்கள் சிலைகளை வழிபடுகிறார்களா?


"மேலே விண்வெளியில் , கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்கவேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்கு பணிவிடை புரியவோ வேண்டாம்".(விடுதலைப் பயணம் 20:4-5)


"ஐயோ, இம்மக்கள் தங்களுக்காக பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்" (விடுதலைப் பயணம் 32:31 )

மேலே சொல்லப்பட்டிருக்கும் இந்த வசனங்களை மேற்கோள்காட்டி கத்தோலிக்கர்கள் கடவுளின் கட்டளைகளை மீறி சிலைகளை வணங்குகிறார்கள் என பிற கிறிஸ்தவர்கள் சொல்வதை கேட்கலாம். இதற்கு காரணம் கத்தோலிக்க தேவாலயங்களில் காணப்படும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து, மாதா மற்றும் புனிதர்களின் சொருபங்களே!இனி திருவிவிலியத்தில் சிலைகள் விசயமாக கடவுள் சொல்லும் சில வசனங்களைப் பார்ப்போம்.

(விடுதலைப் பயணம் 25:18-20) இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய். ஒரு புறத்தில் ஒரு கெருபும், மறு புறத்தில் மற்றொரு கெருபுமாக அமைக்க வேண்டும். இரக்கத்தின் இருக்கையோடு இணைந்த்ததாக அதன் இரண்டு ஓரங்களிலும் கெருபுகளை செய்துவை, அக்கெருபுகள் தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும் , இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும் இருக்கட்டும். கெருபுகளின் முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையை பார்த்தவாறும் விளங்கட்டும்.


(1 குறிப்பேடு 28:18-19) தூப பீடத்திற்கான புடமிடப்பட்ட பொன்னின் நிறையையும் கொடுத்தார். இறக்கைகளை விரித்து ஆண்டவரின் உடன்படிக்கை பேழையை மூடும் பொற்கெருபுகளை கொண்ட பொன் தேரின் மாதிரி வடிவத்தையும் கொடுத்தார், தாவீது,"இந்த மாதிரிகள் அனைத்தையும் ஆண்டவரே தம் கையால் வரைந்த்தளித்து அவை அனைத்தையும் செய்யும்படி எனக்கு உணர்த்தினார்" என்றார்.

(எசேக்கியேல் 41:17-18) வாயிலிலிருந்து உள்கூடம் வரையிலும் வெளியேயும் சுற்றிலுமிருந்த சுவர்களில் உள்ளேயும், வெளியேயும் கெருபுகள், பேரீச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன. ஒவ்வரு கெருபையும் அடுத்து ஒரு பேரீச்ச மர வடிவம் அமைந்த்திருந்தது. ஒவ்வரு கெருபுக்கும் இரு முகங்கள் இருந்தன.


ஆண்டவரே செய்ய சொல்லும் வெண்கலப் பாம்பு:

(எண்ணிக்கை 21:8-9) அப்போது ஆண்டவர் மோசேயிடம் , "கொள்ளிவாய் பாம்ப்பொன்றை செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதை பார்க்கிற ஒவ்வெருவனும் பிழைப்பான்" என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பை செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார். பாம்ப்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்ப்பை பார்த்து உயிர் பிழைப்பான்.


இங்கே ஆண்டவரே இப்படி சொல்லியிருக்கும் போது இயேசு கிறிஸ்த்துவின் சிலைகளை வைப்பதில் என்ன தவறு என தெரியவில்லை. அன்றியும் நாம் நம் முன்னோர்களை அவர்களின் படங்களின் வழியாகவே அடையாளங்காண முடிகிறது. ஆக நம் வீடுகளில் இருக்கும் முன்னோர்களின் படங்களை நாம் வழிபடுகிறோம் என ஆகிவிடுமா? ஆண்டவர் இதுமாதிரி உருவங்களை கடவுளாக வழிபடுவதை பார்த்துதான் கோபப்பட்டுள்ளார். உதாரணமாக யூத அரசர் எசேக்கியா, ஆண்டவர் மோசேயிடம் செய்ய சொல்லிய அதே பாம்பின் சிலையை உடைத்தெறிந்தார். காரணம் யூத மக்கள் அதற்கு தூபம் காட்டி வந்தனர். (2 அரசர்கள் 18 - 4 )

இனி கடவுள் ஆவியானவராகவே இருக்கிறார். பின் எதற்கு கடவுளை உருவமுடையவராக காண்பிக்க வேண்டுமென கேட்கலாம்.
தானியேல்: 7 -9 நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்த்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவருடைய தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன.
இதன்படி தந்தை தன் உருவத்தை வெளிபடுத்தியுள்ளார்.


மத்தேயு 3 -16 , மாற்கு 1 -10 ,லூக்கா 3 -22 , யோவான் 1 -32
பரிசுத்த ஆவியானவர் இங்கே புறாவின் வடிவில் தோன்றுகிறார். இன்னும்
திருத்தூதர் பணிகள் 2 : 1 -4 படித்துப்பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் வடிவில் தன்னை வெளிப்படுத்துகிறார். ஆக புதிய ஏற்பாட்டிலே பரிசுத்த ஆவியானவர் இரண்டு இடங்களிலே தன்னை உருவத்தின் வழியாகவே வெளிப்படுத்துகிறார்.

இன்னும் சிலர் சிலைகளின் முன்பு முழந்தாள் படியிட்டு வணங்குகிறார்கள் என சொல்லுவர். கத்தோலிக்கர்கள், எந்த சிலைகளின் முன்பு முழந்தாள் படியிடுகிறார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள். நாம் ஜெபம் செய்யும் போது திருவிவிலியத்தை, முன்பு வைத்து, முழந்தாள் படியிட்டு ஜெபம் செய்கிறோமே! அதுவும் இதைப்போலத்தானே!

நம் தமிழ் பண்பாட்டின்படி, நாம், நம் முதியோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறோமே! அதற்கு நாம் அவர்களை கடவுளாக வணங்குகிறோம் என அர்த்தமாகுமா? ஜப்பானியர்கூட ஒருவர் இன்னொருவரை தலை தாழ்த்திதான் வணங்குகிறார்கள். எனக்கு தெரிந்த சீனாவை சேர்ந்த ஒரு அருட்சகோதரி இங்கு இருக்கிறார். அவர் எப்போது பார்த்தாலும் தலை தாழ்த்தித்தான் வணங்குவார். இவையெல்லாம் ஒரு மரியாதை நிமித்தமாக செய்பவையே! கடவுளாக நினைத்து அல்ல!

மத்தேயு 2 - 11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளை திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாக கொடுத்தார்கள்.


எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் புதிய உடன்படிக்கையின் படி தன்னை இயேசு கிறிஸ்த்துவின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே அவரின் சொருபங்களை அவரின் ஞாபகமாக வைப்பது தவறா? நிச்சயமாக தவறில்லை.

24 comments :

Dayasingam said...

உருவமாக இருந்து உயிர் பிரிந்தால் அந்த உயிருக்கு ஏது பெயர்? உருவத்திற்கு வைக்கின்ற பெயரை ஆவியான பிறகும் அழைக்கின்றார்கள் என்றால்.... மறைமுகமாக உருவத்தை ஏற்றுக்கொள்ளுகின்றார்கள் என்றுதானே அர்த்தம். ஜீசஸ் என்றோ.... ஆண்டவரே என்றோ... அவர்கள் அழைக்கும் போது அவர்களின் மனதில் ஏதோ ஒரு உருவம் மனக்கண்ணில் தோன்றாமல் போகுமா? எந்த மதத்தவராக இருந்தாலும் ஜேசுவின் உருவத்தை அறிந்த்திராதவர் உலகில் யாருமில்லை என்று சொல்லலாம்.... ஆவியாக இருக்கின்ற ஜேசுவே...என்று ஜெபித்தால் கூட அவர்கள் மனதில் ஒரு உருவமாக நிலைத்து நின்று மனக்கண்ணில் தெரியும் உருவம் ஜேசுவின் உருவமாகத்தான் இருக்கும்..... தங்களை தாங்களே ஏமாற்றுவதை விட..... ஜீசசை உருவமாக வணங்குவது சிறந்தது என நான் நினைக்கின்றன்.

பா.டயஸ்

நன்றி

Selvaraj said...

//Dayasingam said...

உருவமாக இருந்து உயிர் பிரிந்தால் அந்த உயிருக்கு ஏது பெயர்? உருவத்திற்கு வைக்கின்ற பெயரை ஆவியான பிறகும் அழைக்கின்றார்கள் என்றால்.... மறைமுகமாக உருவத்தை ஏற்றுக்கொள்ளுகின்றார்கள் என்றுதானே அர்த்தம். ஜீசஸ் என்றோ.... ஆண்டவரே என்றோ... அவர்கள் அழைக்கும் போது அவர்களின் மனதில் ஏதோ ஒரு உருவம் மனக்கண்ணில் தோன்றாமல் போகுமா? எந்த மதத்தவராக இருந்தாலும் ஜேசுவின் உருவத்தை அறிந்த்திராதவர் உலகில் யாருமில்லை என்று சொல்லலாம்.... ஆவியாக இருக்கின்ற ஜேசுவே...என்று ஜெபித்தால் கூட அவர்கள் மனதில் ஒரு உருவமாக நிலைத்து நின்று மனக்கண்ணில் தெரியும் உருவம் ஜேசுவின் உருவமாகத்தான் இருக்கும்..... தங்களை தாங்களே ஏமாற்றுவதை விட..... ஜீசசை உருவமாக வணங்குவது சிறந்தது என நான் நினைக்கின்றன்.//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
மிகவும் தெளிவாக விளக்கி சொல்லியுள்ளீர்கள்.

chillsam said...

// இயேசு கிறிஸ்த்துவின் சிலைகளை வைப்பதில் என்ன தவறு..?
நாம் நம் முன்னோர்களை அவர்களின் படங்களின் வழியாகவே அடையாளங்காண முடிகிறது. ஆக நம் வீடுகளில் இருக்கும் முன்னோர்களின் படங்களை நாம் வழிபடுகிறோம் என ஆகிவிடுமா? //

நண்பரே மிக சாமர்த்தியமாக வாதிப்பதாக நினைத்துக் கொண்டு இறையியலையே கூறுபோட்டுவிட்டீர்கள்;

நாம் உருவ வழிபாட்டிலிருந்து மெய்த் தேவனைத் தொழும் முறைக்கு வந்துள்ளோம்; எமது பாரம்பரிய நம்பிக்கையின் படி நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்;பிறகு ஏன் எங்களை மதம் மாறச் சொல்லுகிறீர்கள்?

Selvaraj said...

நாம் உருவ வழிபாட்டிலிருந்து மெய்த் தேவனைத் தொழும் முறைக்கு வந்துள்ளோம்; எமது பாரம்பரிய நம்பிக்கையின் படி நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்;பிறகு ஏன் எங்களை மதம் மாறச் சொல்லுகிறீர்கள்?

//நண்பரே, நான் இங்கு யாரையும் மதம்மாற சொல்லவில்லை. பொதுவாக எங்கள் முன் வைக்கப்படும் கேள்விக்கான பதிலை திருவிவிலிய வசனத்தினை மேற்கோள் காட்டியே சொல்லியுள்ளேன். அது உங்களின் கருத்துப்படி கூறு போடுதலாக இருந்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்//

chillsam said...

நண்பரே நான் என்ன செய்யமுடியும் என்பது பொறுப்பான பதிலா என்பது எனக்குத் தெரியவில்லை; தங்கள் கட்டுரையில் நீங்கள் பெரியதாக பதித்திருக்கும்...

நீங்கள் மதம் மாறச் சொல்லவில்லை என்பது சரியே; ஆனாலும் உருவ வழிபாடு சரியெனில் அது மேரியாக இருந்தால் என்ன,மாரியாக இருந்தால் என்ன‌..? முருகனாக இருந்தால் என்ன இயேசுவாக இருந்தால் என்ன‌..?

ஐரோப்பிய பகுதியைச் சேர்ந்த ஓவியர் அவரது கற்பனையில் வரைந்த ஒரு ஒவியத்தை ஆசியர் எப்படி தன் உள்ளத்தில் பதிக்கமுடியும்;இதனாலே வெளிநாட்டு சாமி என்கிறார்கள்;

நாம் இந்திய பாரம்பரியத்தில் இயேசுவை வரைந்தால் அந்த இயேசு முருகனைப் போல இருக்கமாட்டாரா..?

நம்முடைய இந்திய மேரியின் உருவம் புடவை கட்டி நிறைய நகைகளைப் பூட்டி மொத்தத்தில் மாரியம்மாவைப் போலிருக்கும்;

தடையென்ன‌...யோசியுங்கள்...

Pls follow the link:
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37584834

ebi said...

the Lord did not want us to know him by his figure or appearance. instead he wants us to know him by our heart and spirit. he wants us to know him through his word and from what the Bible says, nothing more or less and not from any other means. Infact in one of the commandments he has told not to worship any idols. so why do u need an idol in the worship place?
Why do you have Mary in the place of worship for the Lord? what's the need to pray or sing songs in her name? Does the Bible say so? she was an instrument for the God. She was his mother on earth. The Lord we worship is not blood n flesh.

ebi said...

(விடுதலைப் பயணம் 25:18-20) இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய். ஒரு புறத்தில் ஒரு கெருபும், மறு புறத்தில் மற்றொரு கெருபுமாக அமைக்க வேண்டும். இரக்கத்தின் இருக்கையோடு இணைந்த்ததாக அதன் இரண்டு ஓரங்களிலும் கெருபுகளை செய்துவை, அக்கெருபுகள் தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும் , இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும் இருக்கட்டும். கெருபுகளின் முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையை பார்த்தவாறும் விளங்கட்டும்.


(1 குறிப்பேடு 28:18-19) தூப பீடத்திற்கான புடமிடப்பட்ட பொன்னின் நிறையையும் கொடுத்தார். இறக்கைகளை விரித்து ஆண்டவரின் உடன்படிக்கை பேழையை மூடும் பொற்கெருபுகளை கொண்ட பொன் தேரின் மாதிரி வடிவத்தையும் கொடுத்தார், தாவீது,"இந்த மாதிரிகள் அனைத்தையும் ஆண்டவரே தம் கையால் வரைந்த்தளித்து அவை அனைத்தையும் செய்யும்படி எனக்கு உணர்த்தினார்" என்றார்.

(எசேக்கியேல் 41:17-18) வாயிலிலிருந்து உள்கூடம் வரையிலும் வெளியேயும் சுற்றிலுமிருந்த சுவர்களில் உள்ளேயும், வெளியேயும் கெருபுகள், பேரீச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன. ஒவ்வரு கெருபையும் அடுத்து ஒரு பேரீச்ச மர வடிவம் அமைந்த்திருந்தது. ஒவ்வரு கெருபுக்கும் இரு முகங்கள் இருந்தன."
இவ்வளவு சொன்ன தேவன் தன் உருவசிலை இப்படி இருக்கும் என்றும் அதனை இப்படி அமைக்க வேண்டும் என்று சொல்லவில்லையே. இவ்வளவு சொன்னவர் அதை ஏன் சொல்லவில்லை. அவர் சொல்லாத ஒன்றை செய்து ஏன் நியாயப்படுத்த வேண்டும்? நாம் வேதத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர நமக்கு ஏற்றபடி வேதத்தையோ அதன் கருத்துக்களையோ மாற்றக்கூடாது.

Selvaraj said...

chillsam said...
//ஐரோப்பிய பகுதியைச் சேர்ந்த ஓவியர் அவரது கற்பனையில் வரைந்த ஒரு ஒவியத்தை ஆசியர் எப்படி தன் உள்ளத்தில் பதிக்கமுடியும்;இதனாலே வெளிநாட்டு சாமி என்கிறார்கள்//

இயேசு சிலுவையை சுமந்து போகும் போது அவரது ரத்த வேர்வையை வெரோனிக்கா தன் கைகுட்டையால் துடைக்க, அதில் இயேசுவின் முகச்சாயல் பதிந்த்துள்ளது. இது இப்போதும் வத்திகானிலுள்ள நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இது திருவிவிலியத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் திருவிவிலியம் தொடர்புடைய நிறைய நூல்கள் அதன் பின் சேகரிக்கப்பட்டு அவை வத்திக்கான் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆக இயேசு கிறிஸ்த்துவின் ஓவியம் ஒன்றும் கற்பனையல்ல!

Selvaraj said...

ebi said...
//the Lord did not want us to know him by his figure or appearance//

தன்னை உருவங்கள் அல்லது அடையாளங்களின் வழியே வெளிப்படுத்தியுள்ளார். இதைத்தான் பதிவில் சொல்லியுள்ளேன்.

Selvaraj said...

ebi said...

//Why do you have Mary in the place of worship for the Lord? what's the need to pray or sing songs in her name? Does the Bible say so? she was an instrument for the God. She was his mother on earth. The Lord we worship is not blood n flesh//

Well, first of all we honor Mary as we do because God does. It was the Father who chose Mary to cooperate with Him in being the channel through which His Son would become man. She held God in her womb and nursed God at her breasts.

Robin said...

//இன்னும் சிலர் சிலைகளின் முன்பு முழந்தாள் படியிட்டு வணங்குகிறார்கள் என சொல்லுவர். கத்தோலிக்கர்கள், எந்த சிலைகளின் முன்பு முழந்தாள் படியிடுகிறார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள். நாம் ஜெபம் செய்யும் போது திருவிவிலியத்தை, முன்பு வைத்து, முழந்தாள் படியிட்டு ஜெபம் செய்கிறோமே! அதுவும் இதைப்போலத்தானே!//
தவறான ஒப்பீடு. சிலைகளின் முன்பு முழந்தாள் பணியிடும்போது நீங்கள் சிலைகளை வணங்குகிறீர்கள். கத்தோலிக்க தேவாலயங்களில் சிலைகளை தொட்டு வணங்குவதை நானே பார்த்திருக்கிறேன். மற்ற மதத்தினர்கூட இந்த சிலைகளை வணங்குகிறார்கள். ஆக தேவனுக்கு பிடிக்காத உருவ வழிபாட்டை நீங்கள் செய்வதும் அன்றி மற்றவர்கள் செய்யவும் காரணமாய் இருக்கிறீர்கள்.

நீங்கள் குறிப்பிட்ட உதாரணங்கள் எதிலும் சிலைகளை வணங்கினர் என்று சொல்லப்படவில்லை. வேதத்திற்கு விரோதமான செயல்பாடுகளுக்கெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி நியாயப்படுத்தாமல் அவைகளை விட்டு விடுவதுதான் நல்லது.

Selvaraj said...

Robin said...
//சிலைகளின் முன்பு முழந்தாள் பணியிடும்போது நீங்கள் சிலைகளை வணங்குகிறீர்கள். கத்தோலிக்க தேவாலயங்களில் சிலைகளை தொட்டு வணங்குவதை நானே பார்த்திருக்கிறேன். மற்ற மதத்தினர்கூட இந்த சிலைகளை வணங்குகிறார்கள். ஆக தேவனுக்கு பிடிக்காத உருவ வழிபாட்டை நீங்கள் செய்வதும் அன்றி மற்றவர்கள் செய்யவும் காரணமாய் இருக்கிறீர்கள்//

முழந்தாள் படியிடுவது எங்கிருந்தோ வரவில்லை. இதோ திருவிவிலியத்திலிருந்த்துதான்.

(தொடக்க நூல் 19:1) மாலை வேளையில் ஆண்டவரின் தூதர் இருவர் சோதோமுக்கு வந்தனர். அப்பொழுது நகரின் நுழை வாயிலில் லோத்து உட்கார்த்திருந்தார். அவர் அவர்களைக் கண்டவுடன் எழுந்து சந்திக்க சென்று தரை மட்டும் தாழ்ந்து அவர்களை வணங்கினார்.

(தொடக்க நூல் 42:6) அப்பொழுது, யோசேப்பு நாட்டுக்கு ஆளுநராய் இருந்து மக்கள் அனைவருக்கும் தானியம் விற்கும் அதிகாரம் பெற்றி ருந்தார். எனவே அவருடைய சகோதரர்கள் வந்து தரை மட்டும் தாழ்ந்து யோசேப்பை வணங்கினார்கள்.

(யோசுவா 5:14) அவரோ, "இல்லை, நான் ஆண்டவரின் படைத்தலைவன் என்ற முறையில் இப்பொழுது வந்த்துள்ளேன்" என்றார். யோசுவா முகம் தரையில்பட வீழ்ந்து வணங்கி அவரிடம், "என் ஆண்டவர் தம் அடியானுக்கு என்ன கூறியுள்ளார்?" என்று கேட்டார்.

(1 சாமுவேல் 28:14) அவர் அவளிடம்,"அதன் தோற்றம் என்ன?" என்று கேட்க, அதற்கு அவள், "முதியவர் ஒருவர் எழுந்து வருகிறார்; அவர் ஒரு போர்வை அணிந்த்திருக்கிறார்", என்றாள். அவர் சாமுவேல்தான் என்று சவுல் அறிந்து முகம் குப்புற தரையில் வீழ்ந்து வணங்கினார்.

இப்படி திருவிவிலியத்தில் இன்னும் நிறைய வசனங்கள் உள்ளன.

Robin said...

நண்பரே,

நீங்கள் சொன்ன எந்த வசனத்திலும் விக்கிரகங்களை வணங்கியதாக சொல்லப்படவில்லை.
மறுபடியும் சொல்கிறேன் விக்கிரக வழிபாடு வேதத்திற்கு விரோதமானது.

Robin said...

உங்கள் பார்வைக்காக சில வசனங்கள்.

யாத்திராகமம் 20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

லேவியராகமம் 19:4 விக்கிரகங்களை நாடாமலும் வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

லேவியராகமம் 26:1 நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

II இராஜாக்கள் 17:12 இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், நரகலான விக்கிரகங்களைச் சேவித்துவந்தார்கள்.


சங்கீதம் 97:7 சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

சங்கீதம் 106:38 அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தை சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.

எசேக்கியேல் 14:6 ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

I கொரிந்தியர் 10:14 ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.

I யோவான் 5:21 பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.

வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

வெளி 22:15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

Robin said...

சிலை வழிபாட்டிற்கு ஆதரவாக உங்களால் ஒரு வசனத்தைக்கூட காட்ட முடியவில்லை. ஆனால் விக்கிரக ஆராதனையை தேவன் எப்படி வெறுக்கிறார் என்பதை மேற்கண்ட வசனங்களை படித்தாலே தெரியும்.

chillsam said...

Selvaraj said...

ebi said...

//Why do you have Mary in the place of worship for the Lord? what's the need to pray or sing songs in her name? Does the Bible say so? she was an instrument for the God. She was his mother on earth. The Lord we worship is not blood n flesh//

Well, first of all we honor Mary as we do because God does. It was the Father who chose Mary to cooperate with Him in being the channel through which His Son would become man. She held God in her womb and nursed God at her breasts.
14 August 2010 03:00
Selvaraj said...

chillsam said...
//ஐரோப்பிய பகுதியைச் சேர்ந்த ஓவியர் அவரது கற்பனையில் வரைந்த ஒரு ஒவியத்தை ஆசியர் எப்படி தன் உள்ளத்தில் பதிக்கமுடியும்;இதனாலே வெளிநாட்டு சாமி என்கிறார்கள்//

இயேசு சிலுவையை சுமந்து போகும் போது அவரது ரத்த வேர்வையை வெரோனிக்கா தன் கைகுட்டையால் துடைக்க, அதில் இயேசுவின் முகச்சாயல் பதிந்த்துள்ளது. இது இப்போதும் வத்திகானிலுள்ள நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இது திருவிவிலியத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் திருவிவிலியம் தொடர்புடைய நிறைய நூல்கள் அதன் பின் சேகரிக்கப்பட்டு அவை வத்திக்கான் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆக இயேசு கிறிஸ்த்துவின் ஓவியம் ஒன்றும் கற்பனையல்ல!
12 August 2010 15:58நண்பரே, இயேசுவானவர் மரியின் மைந்தனாகவும் பிதாவின் குமாரனாகவும் இருவித பாத்திரத்தை ஏற்கமுடியாது;மாறாக அன்னை மரியே- கவனிக்க கன்னிமரியல்ல,தன்னை ஆண்டவருக்கு அடிமை என்றாள்; அவளும் ஒரு பாவத்தன்மையுள்ள பெற்றோருக்கு பிறந்தவள் தான்;

எந்த ஒரு தாயும் பிள்ளைக்கு அடிமையாதல் கூடாத காரியமாகும்;மரியாளை மையப்படுத்தி எழுதிப் பாடப்படும் எந்த ஒரு பாடலும் துதியும் தேவ தூஷணமாகும்;அனைத்துக்கு குழப்பத்துக்கும் காரணம் மரியாள் இயேசுவைப் போலவே பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படும் பொய்யே ஆகும்;மற்றபடி மரித்தவர்களை வணங்குவதும் பூஜிப்பதும் ஆதிவாசி பழக்கமான "பேகனிஸ‌ம்" வகையைச் சேர்ந்ததாகும்;

இரத்தம் தோய்ந்த துணியில் இயேசுவின் உருவம் பதிந்திருந்ததாகச் சொல்லப்படுவது செவிவழி செய்தியாகும்; அப்படியிருந்தால் அதனை தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தப்படவேண்டும்;

இன்னும் கனவில் தோன்றிய உருவங்களுக்கு வடிவம் கொடுப்பதும் சிறந்த பக்தி முயற்சியல்ல; இதையே அனைத்து "பேகனிக்" வழிபாட்டாளரும் செய்வதுடன் இந்த பொய்யின் அடிப்படையிலேயே பொது இடங்களை ஆக்கிரமித்து (இந்தியாவில்...) கோவில் கட்டி கொள்ளையடிக்கின்றனர்;

இதைக் குறித்து இன்னும் விவரமாக என்னால் எழுதமுடியும்.

Selvaraj said...

//Robin said...
நண்பரே,

நீங்கள் சொன்ன எந்த வசனத்திலும் விக்கிரகங்களை வணங்கியதாக சொல்லப்படவில்லை.
மறுபடியும் சொல்கிறேன் விக்கிரக வழிபாடு வேதத்திற்கு விரோதமானது//

என் பதிவிலே எங்கும் நான் விக்கிரகங்களை வணங்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஒவ்வருவரும் தாங்கள் ஜெபம் செய்யும் போது தங்கள் விருப்பத்தின் படியே செய்வர். சிலர் முழம்தாள்படியிட்டு ஜெபம் செய்வர். சிலர் நின்று கொண்டே செய்வர். சிலர் தலை தாழ்த்தி ஜெபிப்பர். இன்னும் நாங்கள் மாதாவை கடவுளாக நினைத்து வணங்குவதில்லை. ஆனால் லூக்கா 1:28- ஐ படித்துப் பாருங்கள். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

Selvaraj said...

//chillsam said...
நண்பரே, இயேசுவானவர் மரியின் மைந்தனாகவும் பிதாவின் குமாரனாகவும் இருவித பாத்திரத்தை ஏற்கமுடியாது//

இயேசு மரியின் மைந்தனாக மண்ணுலகில் அவதாரம் எடுத்தது கடவுளின் செயல். அதை தவறு என்று சொல்கிறீர்களா?

//மரியாளை மையப்படுத்தி எழுதிப் பாடப்படும் எந்த ஒரு பாடலும் துதியும் தேவ தூஷணமாகும்//

நீங்கள் லூக்கா 1:28-ஐ படியுங்கள்.

//அனைத்துக்கு குழப்பத்துக்கும் காரணம் மரியாள் இயேசுவைப் போலவே பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படும் பொய்யே ஆகும்//

இதற்கு நீங்கள் இந்த இணைப்பை படியுங்கள்.

Robin said...

//என் பதிவிலே எங்கும் நான் விக்கிரகங்களை வணங்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஒவ்வருவரும் தாங்கள் ஜெபம் செய்யும் போது தங்கள் விருப்பத்தின் படியே செய்வர். சிலர் முழம்தாள்படியிட்டு ஜெபம் செய்வர். // சிலைகளின் முன்பு முழந்தாள்படியிட்டு ஜெபம் செய்வதற்கும் சிலைகளை வணங்குவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? நீங்கள் சொல்லும் நொண்டிச் சாக்கைதானே இந்துக்களும் சொல்கிறார்கள். உங்களுக்கும் இந்துக்களுக்கும் வழிபாட்டு முறையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? நீங்கள் சொல்வது நான் சாப்பிடவில்லை, சாப்பாட்டை வாயில் நுழைத்தேன் என்று சொல்வதுபோல இருக்கிறது.
//இன்னும் நாங்கள் மாதாவை கடவுளாக நினைத்து வணங்குவதில்லை. // மாதாவை கடவுளாகதான் பெரும்பாலான கத்தோலிக்கர்கள் வழிபடுகிறார்கள்.

//லூக்கா 1:28- ஐ படித்துப் பாருங்கள். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்//
லூக்கா ௧.28. அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
இதில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. புரியவில்லை. விளக்கமாகச் சொல்லுங்கள்.

யோவான் 14.6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

மரியாளின் வழியாக இரட்சிப்பு என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா?

உங்களுக்கு பாரம்பரியமாக செய்துவரும் பழக்கத்தை விடமுடியவில்லை. ஏதோ ஒரு காரணம் கூறி உங்களை நீங்களே சமானப்படுத்திக் கொள்கிறீர்கள்.

Selvaraj said...

கத்தோலிக்க சபை 34 AD இல் உருவானது. பிற சபைகள் அதற்கு 1500 வருடங்களுக்கு பின்னர் உருவானவை. இன்று நானூறுக்கு மேற்பட்ட சபைகள் இயேசு கிறிஸ்த்துவை தங்கள் ரட்சகராக கொண்டுள்ளன. இந்த சபைகளுக்குள் நீ பெரியவன், நான் பெரியவன் என விவாதிப்பதை நான் விரும்பவில்லை. இப்படி ஒரு விவாதத்தின் போது அன்பு என்ற சகோதரர் சொன்ன வரிகளை கீழே கொடுத்துள்ளேன்.
When asked who is Christian , Jesus clearly replied "தன்னைப் போல் பிறரை நேசிப்பவர்கள்"
In another instance he clearly says, "ஒருவன் என்னிலும் என் வார்த்தை அவனிலும் இருந்தால் போதும்".
Love is greater than ten commandments.
Corinthian chapter 13 says , love is everything.
We simply ignore these things and take other things what we wanted to do.

Anonymous said...

அருமையான வார்த்தைகள் நண்பரே...நேற்று தான் எமது வேத தியானக்குழுவில் இந்த பொருளில் விவாதித்தோம்...நாங்கள் எட்டமுடியாத தீர்வை இங்கே பதித்திருக்கிறீர்கள்;

ஆனாலும் எனது பின்னூட்டங்கள் தள்ளப்படும் காரணம் தெரியவில்லை;உங்களுக்கு விவாதிக்க விருப்பமில்லாவிட்டால் நான் நிறுத்திக்கொள்ளுகிறேன்.

Selvaraj said...

//chillsam said...

ஆனாலும் எனது பின்னூட்டங்கள் தள்ளப்படும் காரணம் தெரியவில்லை;உங்களுக்கு விவாதிக்க விருப்பமில்லாவிட்டால் நான் நிறுத்திக்கொள்ளுகிறேன்//

சகோதரரே, உங்களின் பின்னூட்டம் மட்டுமல்ல, இப்பதிவின் எல்லா பின்னூட்டங்களையும் இப்போது நான் பிரசுரிக்கவில்லை. தொடர்ந்து இதை நான் விவாதிக்க விரும்பவில்லை. அதைதான் மேலே சொல்லியுள்ளேன்.

stany said...

ரொம்ப குழப்பிக்காதீங்க நண்பர்களே....!!!
நாங்கள் கத்தோலிகர்கள் சிலைகளை ஏதோ ஒரு பெயர் தெரியா கடவுளாக வணங்கவில்லை...
நாங்கள் வணக்கம் செலுத்துவது உண்மையான ஒரே இறைவன் இயேசு மட்டும் தான்... நாங்கள் கடவுளாக சொல்லவதும் அந்த மூவொரு இறைவனை மட்டும் தான்... நான் உங்களிக்கு சொல்கிறேன் நீங்கள் நம்பிக்கையோடு ஒரு நாற்காலி முன்பு மண்டியிட்டு என் ஏசுவே .... என்று உருக்கமாக மன்றாடினால் அங்கும் இயேசுவின் பிரசனம் வெளிப்படும்...!!!
நீங்கள் கிறிஸ்தவனாக இருந்தால் கட்டாயம் திருவிவிலியத்திர்க்கு மரியாதை செலுத்துவீர்கள்... யன் உங்களுக்கு சந்தேகம் வரவில்லை அது வெறும் பேப்பர் தானே என்று......!!! சிலை வழிபாட்டை போல தானே பேப்பர்க்கு வணங்குவதும்...!!!
அதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது... திருவிவிலியத்தில் இறை பிரசனம் இருப்பதை நீங்கள் உணர்கிறீர்கள் கடவுளின் வார்த்தை அதில் இருக்கிறது அது புனிதமானது என்று உங்களுக்கு தெரிகிறது.... அதே போன்ற இறை பிரசனம் இயேசுவின் சிலைகளிலும் கிடைக்கும் .... உணர்ந்து பாருங்கள்... உளறாதீர்கள்....!!!

Jesuraj Mech said...

கத்தோலிக்கர்கள் ஒவொருவரும் மிகவும் விழிப்பாயிருக்கணும் இல்லையின்றால் பிரிவினையிரிடம் [சாத்தானிடம் ]மாயவலையில் விளநேரிடும இப்படிக்கு ,அ.மரிய செல்வம்..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!