.

Loading...

சனி, 26 டிசம்பர், 2009

போலீஸின் அடிக்கு நாட்டு மருந்து!

போலீஸின் அடிக்கு நாட்டு மருந்து!

இந்த பதிவின் தலைப்பை அலோபதி மருத்துவருக்கு நாட்டு மருந்து என்றுதான் வைக்க வேண்டுமென்று நினைத்தேன். காரணம் இங்கே போலீசின் அடிக்கு நாட்டு மருந்து குடித்தவர் அலோபதி மருத்துவராயிற்றே! ஏன் என்று அறிய மேற்கொண்டு படியுங்கள்!

இதை இப்போது எழுத காரணம், சமீபத்திலே மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்தி பணியாளர்களை உயிரோடு கொன்றவர்களை சாட்சிகள் சரியில்லை என விடுதலை செய்த கேவலமான நீதிபதியை போல, முன்பு குமரி மாவட்டத்திலும் ஒரு கேவலமான நீதிபதி தீர்ப்பளித்தார். அதை தான் இப்போது படிக்க போகிறீர்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸிற்கு ஒரு நப்பாசை. தன்னை அவசரநிலை பிரகடனத்தின் போது உள்ளே தள்ளிய அன்னை இந்திரா காந்தியை, தான் அமைச்சராகியதும் அதே சிறை கம்பிகளுக்கு பின்தள்ளி சந்தோசபட்டுக்கொண்டார். இதை பார்த்து கொதித்து போன இந்திரா காந்தியின் தொண்டர்கள், இந்தியா முழுவதும் கலவரத்தில் இறங்கினர். குமரி மாவட்டத்திலும் இதன் எதிரொலி இருந்தது.

தக்கலையின் பக்கத்திலுள்ள வெள்ளியோடு என்னும் இடத்தில், கடைசி இரவு பேருந்தை பயணிகளோடு வைத்து எரித்து விட்டனர். போலீஸ் மிகவும் சாதுர்த்தியமாக செயல்பட்டு சம்பந்தபட்டவர்களை கைது செய்தது. பேருந்தை தீ கொடுத்தவர்கள் வாடகை சைக்கிள் எடுத்துகொண்டு போயிருந்தனர். பேருந்தின் அருகிலேயே வாடகை சைக்கிள் கிடந்ததை போலீஸ் கண்டெடுத்தது. விசாரணையில் இந்திரா காங்கிரஸ்-ஐ சேர்ந்த டாக்டர் ஒருவர் அகப்பட்டார். எப்படியும் இவர் குருட்டு நீதிபதியால் வெளியில்விடப்படுவார் என்பது தெரிந்த போலீசார் இந்த டாக்டரை நைய புடைத்து விட்டார்கள். எல்லோருக்கும் தெரிந்த மாதிரியே நாகர்கோயில் நீதி மன்றத்தில் சாட்சிகள் சரியில்லை என இவர் அரசியல் வியாதிகளுக்கு அடி பணிகின்ற குருட்டு நீதிபதியால் விடுவிக்கபட்டார்! என்ன இருந்தாலும்,போலீஸின் அடி சரியாக கிடைத்ததால் இவர் கருங்கல்லிற்கு பக்கத்திலுள்ள செல்லம்கோணம் என்னும் ஊரிலுள்ள பிரபல நாட்டு வைத்தியரிடம்(என் நண்பனின் தந்தை)சென்று மருந்து குடித்தார். அலோபதி மருத்துவரானாலும் அடிக்கு நாட்டு மருந்துதான் சிறந்த்தது என தெரிந்து வைத்திருக்கிறார். பரவாயில்லை.

மதுரையிலும் போலீஸ் இதை மாதிரி அட்டாக் பாண்டி போன்றவர்களின் இடுப்பை ஒடித்திருந்தால், மதுரையின் இளவரசர் அல்ல! சென்னையின் ராஜா!! சொன்னால்கூட மேற்கொண்டு தப்பு செய்ய ஒரு முறைக்கு இரு முறை ஆலோசிப்பான்.
அரசியல் வியாதிகளுக்கு அடி பணிகின்ற பெரும்பாலான நீதிபதிகளுக்கு கண் கெட்டுப்போனதால் சாட்சிகள் சரியாக தெரிவதில்லை. குறைந்த பட்சம் நேர்மையான போலீஸ் களால் நூறு சதவிகிதம் குற்றவாளியென உறுதி செய்யப்பட்டவர்கள் இப்படி தண்டிக்கபட்டால்கூட தப்பில்லைதான். நம் பழமொழியும் அதைதானே கூறுகிறது.
அடி செய்யும் உதவி அண்ணன் தம்பி செய்யமாட்டான்

4 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

please dont get into problems over defamation of court.

Selvaraj சொன்னது…

shirdi.saidasan@gmail.com

please dont get into problems over defamation of court.

//உங்கள் வருகைக்கும் அறிவுரைக்கும் நன்றி!//

vsankar சொன்னது…

What about Naukkarasu murder case at Annamalai University few years back?

Selvaraj சொன்னது…

vsankar said...
What about Naukkarasu murder case at Annamalai University few years back?

//கருத்திற்கு நன்றி அய்யா!
காலம் கடந்தாலும் சரியான தீர்ப்பு!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!