.

Loading...

சனி, 7 நவம்பர், 2009

ஒற்றை விபச்சாரம்!

ஒற்றை விபச்சாரம்!

சமீபத்தில் போலீஸ் நடிகை புவனேஸ்வரியை விபச்சார வழக்கில் கைது செய்து தன் கடமையை செய்ததை நாம் அறிவோம். ஆனால் விபச்சாரம் என்று வரும்போது ஒரு பெண்ணோடு ஒரு ஆணும் ஈடுபட்டிருக்க வேண்டுமே? அந்த ஆண்களை ஏன் போலீஸ் கைது செய்யவில்லை? ஒருவேளை புவனேஷ்வரி தனக்குதானே விபச்சாரம் செய்தாரா? இல்லை என்றால் விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களை அரசு ஆண்களாக நினைக்கவில்லையா? இப்படி நிறைய கேள்விகள் எழுகிறது. இந்த கைது கூட ஏதாவது ஒரு பெரும்புள்ளியை திருப்தி படுத்துவதர்க்காகத்தான் இருக்குமே ஒழிய நிச்சயமாக கடமையாக இருக்காது. பத்திரிக்கைகளும் மிகவும் கடமையுணர்வுடன் செயல்படுவது போல செய்தியை வெளியிட்டுக்கொள்ளும். அவர்களுக்கு தெரியாதா என்ன?

பக்கத்திற்கு பக்கம் நடிகைகளின் படத்தை வெளியிடுபர்வர்களுக்கு, அந்த நடிகையுடன் தொடர்புள்ள ஆண் விபச்சாரிகளின் படத்தையும் வெளியிடவேண்டியதுதானே? அதை செய்ய மாட்டார்கள். நடிகைகளிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து போகக்கூடியவன் பாமரனாக இருக்கமாட்டான். வி.ஐ.பி என்று சொல்லக்கூடிய அரசியல்வாதியோ அல்லது தொழில் அதிபராகவோத்தான் இருப்பார்கள்.




சமீபத்தில் கூட நடிகை பத்மாவை இதை போலவே போலீஸ் கைது செய்து தன் கடமையை செய்தது. பத்திரிக்கைகளும் பக்கம் பக்கமாக அந்த நடிகையின் படத்தை வெளியிட்டு தங்களின் கடமையை செய்தது. வழக்கம் போலவே அந்த பெண்ணோடு விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆந்திர தொழில் அதிபரை விட்டு விட்டார்கள். எந்த பத்திரிக்கையிலாவது அவரின் படம் வெளியானதா? இல்லையே! அந்த தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி கொண்டு அவரின் படம் வெளிவராதபடி பார்த்துக்கொண்டார்கள். இப்படி விபச்சாரத்தை ஒற்றை விபச்சாரமாக காண்பித்தார்கள்.



ஆனால் நடுத்தர மக்கள் என்றால், இந்த போலீஸும், பத்திரிக்கைகளும் தங்களின் கடமையை சரியாக செய்யும். உதாரணமாக, எப்போதாவது அல்ப ஆசையுள்ள சிலர் சாதாரண விடுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபட்டால், போலீஸும் கைது செய்து எல்லா பத்திரிகைகளுக்கும் தகவல் கொடுத்து, தங்கள் கடமையை நிறைவேற்றி விடுவார்கள். பத்திரிக்கைகாரர்களும், அந்த அப்பாவி ஆணும் பெண்ணும் தங்களின் முகத்தை கைகளாலோ அல்லது கைகுட்டையாலோ மறைத்தாலும்கூட பல விதங்களில் படம் எடுத்து அதை "விடுதியில் விபச்சாரம் செய்தவர்கள் கைது" என முன்பக்கம் செய்தியாக வெளியிட்டு விடும். இதை பார்க்கும் போது சில வேளைகளில் சம்பந்தபட்டவர்கள் கேவலப்பட்டு தற்கொலைகூட செய்து கொள்வார்கள்.

என்ன இருந்தாலும் பத்திரிகைகள் பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும் என மதுரையில் உயிரோடு எரித்து பாடம் புகட்டியுள்ளார்களே! அதில் சம்பந்த பட்டவர்களுக்கு உயர் பதவிகளை கொடுத்து அரசு கௌரவிக்கும் போது போலீஸிற்கு எப்படி நடந்தது கொள்ள வேண்டுமென தெரியாதா என்ன? ஆக, ஒற்றை விபச்சாரமாக செய்திவருவது விஷயத்தோடுதான்.

6 கருத்துகள் :

மாடல மறையோன் சொன்னது…

முதல்வரியில், போலீஸ் நடிகை புவனேசுவரியை...என்பது புவனேசுவரியே போலீசா? என்பது போலிருக்கிறது.

நடிகை புவனேசுவரியைப் போலீசு என்றிருந்தால் குழப்பமில்லை.

மற்ற கருத்துகள்:

விபச்சார வழக்குகளில் - ஈடுபட்ட பெண்களையும், மாமாக்களையும் (pimps and prostitutues) - இருவரை மட்டும்தான் போலிஸ் பிடித்து வழக்கு போடவேண்டும் என்கிறது சட்டம். பெண்களை நாடிச்செல்லும் வாடிக்கையாள்ர்களை (customers or clients) களையல்ல.

உங்கள் ஆதங்கம் என்ன்வென்றால், வாடிக்கையாளர்களையும் பிடிக்கவேண்டும். அதற்கு முதலில் நீங்கள் சட்டத்தை திருத்த வேண்டும்.

இதில் ஒரு சிக்கல். ஒரு பெண், ஒரு ஆண் - இருவரும் காமத்தில் ஈடுபடுகிறார்கள். அப்பெண்ணுக்கு அவன் இறுதியில் பணம் கொடுக்கிறான்.

இது தண்டிக்கப்படவேண்டிய குற்றமா..செல்வராஜ்? அப்பெண்ணை அவன் கட்டாயப்படுத்தி கட்டாய உறவு (பாலியல் ப்லாத்காரம்) ப்ண்ணினானா? இல்லை, அவளுக்குத்தான் சிறு வ்யதா?

How can a mutually consensual sex between two adults be a crime, Mr Selvaraaj?

அவனும் அவளும் இதையே கோர்ட்டாரிடம் சொன்னால், கேஸ் அவுட். கோர்ர்ட்டு சொல்லும்: ”போலிஸே மக்கள் பணத்தில் உங்களுக்கு பணம் கொடுத்து வேலை கொடுத்திருக்க, அதை கேசே இல்லாத்தையெல்லாம் கோர்ட்டுக்கு கொண்டுவந்து, எல்லார் நேரத்தையும் வீணடிக்கவேண்டுமா?” போலிசு ஙே...! செல்வராஜ் சொன்னார் என்று எல்லாரையும் பிடிக்க நம்ம வேளைக்கே வேட்டுவருதே...!

இவ்வளவு படித்துவிட்டீர்களா? இனி பத்மாவுக்கு வருவோம்.

ஒரு பணக்காரன் ஒரு பெண்ணை வைப்பாட்டியாக வைப்பது சட்டபபடியும் சமூகப்படியும் குற்றமல்ல. அது அவன் தாலி கட்டிய பொண்டாட்டிக்குத்தான் ப்ரச்னை.

ஆந்திர பணக்காரன் பத்மாவை ‘வைத்திருந்தார்’. எல்லாம் சரியாகத்தான் போயுக்கொண்டிருக்க, திடீரென பதமா பணத்தொந்தரவு அளவுக்கு அதிகமாக கேட்க, அவர் போலீசு உதவியை நாடினார். பின்னரே நமக்குத் தெரிந்தது. இது பதமா போட்ட கேசல்ல. அவர் போட்டது. மற்றும் இது விபச்சாரக்கேசும் அல்ல. தனிநபர் பணத்தகராறு.

எப்படி அவரை நீங்கள் குற்றவாளி ஆக்குகிறீர்கள். வைப்பாட்டி வைப்பது நல்ல் குணமல்ல என்று சொல்லிவிட்டுப்போங்களேன்! ஒருவேளை எவனாவது உங்கள் பேச்சைக்கேட்டு திருந்தினாலும் திருந்துவான்.

மற்றவன் சொல்லுவான்: ‘செல்வராஜுக்கு எத்தனையோ! யார் கண்டார்?’

Dhina1982 சொன்னது…

This article Is exactly Said the Truth

Not even in Prostitutes in all the way police peoples are using their rights in wrong way

ex: If any middle class people missed / theft their Bi-cycle / Car the police peoples are Careless if vip people means they will catch the theft person arrest them its happen to me
thanks for the true article
this is ashame to be indian

Selvaraj சொன்னது…

Dhina1982

This article Is exactly Said the Truth

//உங்களின் கருத்திற்கு நன்றி!//

Selvaraj சொன்னது…

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ

ஆந்திர பணக்காரன் பத்மாவை ‘வைத்திருந்தார்’. எல்லாம் சரியாகத்தான் போயுக்கொண்டிருக்க, திடீரென பதமா பணத்தொந்தரவு அளவுக்கு அதிகமாக கேட்க, அவர் போலீசு உதவியை நாடினார்.

//ஐந்து நட்சத்திர விடுதியில் ஆந்திர தொழில் அதிபர் விபச்சாரம்தானே செய்தார். அது தவறில்லையா? அது தவறில்லை என்றால், ஏன் சாதாரண விடுதிகளில் போலீஸ் புகுந்து விபச்சாரம் செய்கிறவர்களை கைது செய்கிறது? நட்சத்திர வித்தியாசமா என்ன?//

‘செல்வராஜுக்கு எத்தனையோ! யார் கண்டார்?’

//தன்னைப்போலவே மற்றவர்களும் இருப்பார்கள், என நீங்கள் நினைப்பதில் தவறில்லை//

Chittoor Murugesan சொன்னது…

அப்படி போடு அரிவாளை

Selvaraj சொன்னது…

சித்தூர்.எஸ்.முருகேசன்

அப்படி போடு அரிவாளை


//வருகைக்கு நன்றி பத்திரிக்கையாளரே!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!