.

Loading...

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

பழைய மொபைல் போண்களை வாங்காதீர்!

பழைய மொபைல் போண்களை வாங்காதீர்!

இன்று அதிகமாக திருடப்படும் பொருட்களில் ஒன்று இந்த மொபைல் போண்கள்தான். ஆயிரம் ரூபாய்கூட போகாத போணை திருட ஐயாயிரம் ருபாய் விலையுள்ள கார் கண்ணாடியை உடைப்பது என்னவோ இங்கு அடிக்கடி நடக்கக்கூடியது. காவல் துறைக்கு இது பெரிய தலைவலி. இப்படி திருடுபவர்களுக்கு தெரியும் அதை பயன்படுத்தினால் அகப்பட்டுக்கொள்வோம் என்று.(மொபைல் போண் பயன்படுத்தும் எல்லோருக்கும் இப்போது IMEI எண்பற்றி தெரிவதால் உடனே போலீசிற்கு தெரிவிப்பார்கள் என்று) எனவே கொஞ்சம் ஆறப்போட்டு ஏதாவதொரு ஆன்லைன் சந்தை வழியே வியாபாரம் செய்து விடுவார்கள்.




குறிப்பாக உலகின் மிகப்பெரிய இணைய சந்தையான ebay இல் இப்படி நிறைய விற்கப்படும். இதை தடுக்க லண்டன் போலீஸ் முதல் முறையாக இப்படி திருட்டுபோன போண்களை கண்டுபிடிக்கக்கூடிய, கையடக்க ஸ்கேன் கருவிகளை கொண்டு ரயில் நிலையங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இவர்களின் முதல் கட்ட சோதனையில் யாரும் அகப்படவில்லை. ஆனால் இந்த நவீன கருவியால் தெருக்களில் நடந்து போகின்றவர்களிடம்கூட திருட்டு மொபைல் இருந்தால் அது இக்கருவிக்கு காட்டிக்கொடுத்துவிடும். ஆகவே விலை குறைவு என நினைத்து பழைய மொபைல் போண்களை வாங்காதீர்!

இக்கருவியால் திருட்டுபோன Laptop, MP3 player போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும் என்பது இன்னும் சிறப்பம்சம். இது இப்போது இங்கிலாந்தில் அறிமுகமானாலும்கூட விரைவில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. எனவே வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பழைய மொபைல் போண் வாங்குவதை தவிருங்கள்!

2 கருத்துகள் :

தமிழ்மகன் சொன்னது…

gud information

Selvaraj சொன்னது…

தமிழ்மகன்

gud information

//வருகைக்கு நன்றி!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!