.

Loading...

சனி, 3 அக்டோபர், 2009

அலைபேசி! கைபேசி! செல்பேசி!

அலைபேசி, கைபேசி, செல்பேசி!



இந்த மொபைல் போன் ஐ தமிழர்களாகிய நாம், அலைபேசி, கைபேசி, செல்பேசி, மொபைல் போன், செல் போன், என ஆளாளுக்கு இப்படி தமிழில் சொல்லி வருகிறோம். உலகில் வேறு எந்த மொழிக்காரனுக்கும் இப்படி ஒரு பிரச்சினை இருக்காது. புதியதாக ஏதாவது ஒரு பொருள் அறிமுகமாகும் போது உடனே சம்மந்தபட்ட துறை அதற்கான வார்த்தையை அவர்களின் மொழியில் வெளியிடும். எல்லோரும் அதையே பேசி பழக்கத்திற்கு கொண்டு வருவார்கள். ஆனால் தமிழனுக்குதான் பெரிய பிரச்சினை. இதற்கு யாரு பொறுப்பு என தெரியவில்லை!

இந்த மொபைல் போன் அறிமுகமாகிய போது அரபு நாடுகளில் உடனே அதற்கு ஜவால் என பெயரிட்டு அழைக்க தொடங்கினர். ஒரு அரபியும் வேறு பெயர் பயன் படுத்தியதாக தெரியவில்லை. இந்திய தமிழர்கள் இப்போது தமிழ் பேசுவது கிடையாது. நிறைய ஆங்கில சொற்களை பயன்படுத்திதான் பேசுகிறார்கள். எனவே அவர்களுக்கு இதை பற்றிய கவலை இருக்காது. பிற மொழி கலக்காமல் பேசுவதற்கு ஒரு போட்டி வைத்தால், ஒரு இந்திய தமிழனும் அதில் வெற்றி பெறமாட்டான், என்னும் நிலைமையாகிவிட்டது. ஆனால் இலங்கை தமிழர்கள் இந்த விசயத்தில் நம்மை போல் அல்ல! அவர்கள் தான் மொபைல் போன் ஐ கைபேசி என முதலில் அழைக்ககேட்டேன். ஆனால் இன்று அந்த வார்த்தை மட்டும் நடைமுறையில் இல்லை.




இப்படி ஆளாளுக்கு குழப்புவதற்கு பதில், பேசாமல் அந்த பொருள் எந்த மூல மொழியில் வருகிறதோ, அதே சொல்லை நாமும் பயன்படுத்தலாம். இதற்கு உதாரணமாக ஆங்கிலத்தில் நிறைய பிற மொழி சொற்கள் இருப்பதை சொல்லலாம்.

நம் பல்கலைகழகங்களாவது இந்த பொறுப்பை எடுக்கலாம். ஆனால் அவர்களுக்கு திரைப்பட துறையை சேர்ந்தவர்களையும், அரசியல்வாதிகளையும் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது. கணிணி சம்பந்தமான வார்த்தைகளைக்கூட ஆளாளுக்கு தெரிந்த மாதிரி எழுதுகிறார்கள். இவற்றிற்கெல்லாம் யார் தீர்வு காண்பதோ?

அது சரி, அலைபேசி! கைபேசி! செல்பேசி! மொபைல் போன்! செல் போன்! இதில் எது சரி?

4 கருத்துகள் :

தமிழநம்பி சொன்னது…

மொபைல், செல் என்பவை ஆங்கில மொழிச் சொற்களின் ஒலிபெயர்ப்பே.

கைப்பேசி என்பதே மிகவும் பொருத்தமாகத் தெரிகிறது.

Selvaraj சொன்னது…

•தமிழநம்பி


மொபைல், செல் என்பவை ஆங்கில மொழிச் சொற்களின் ஒலிபெயர்ப்பே.

கைப்பேசி என்பதே மிகவும் பொருத்தமாகத் தெரிகிறது.


//உங்கள் கருத்திற்கு நன்றி!//

இரவி சங்கர் சொன்னது…

வேதனையான உண்மை. 'கிரிக்கெட்', 'சினிமா', 'டிவி' போன்ற மாயையிலிருந்து என்று மீள்கிறார்களோ அன்றுதான் விடிவு.

சென்னையில் உள்ள விளம்பரப் பலகையில் பெரும்பாலும் தமிங்கலம்தான் இருக்கிறது. இதை தமிழக அரசு நினைத்தால் மாற்றலாம். ஏதாவது ஒரு இலவசமோ அல்லது வரிச்சலுகையோ கொடுத்தால் 'டமிலர்கள்' மாறிக்கொள்வார்கள். அப்படித்தான் தமிழகத்தில் மக்களை பழக்கி வருகிறார்கள்.

நாம் தமிழில் பேச முயற்சித்தாலும் ஏளனமாய் பார்க்கும் டமிலர்களும் இருக்கிறார்கள்.

நம்மால் இயன்றவரை தமிழில் பேசுவோம். இனத்தை மீட்போம். நன்றி.

Selvaraj சொன்னது…

•இரவி சங்கர்


நம்மால் இயன்றவரை தமிழில் பேசுவோம். இனத்தை மீட்போம்.

//நம்மால் இவ்வளவுதாங்க செய்ய முடியும். இல்லேன்னா நீங்கள் சொன்ன மாதிரி தமிழில் பேசுபவர்களுக்கு "இலவச" பட்டா என சட்டம் கொண்டு வந்தால் ஒருவேளை தமிழில் பேசுவார்கள் என நினைக்கிறேன்//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!