.

Loading...

வெள்ளி, 2 அக்டோபர், 2009

லண்டன்: போலீஸ் வலையில் போலீஸ்!

லண்டன்: போலீஸ் வலையில் போலீஸ்!

லண்டனில் எப்போது பார்த்தாலும் போலீஸ் வாகனங்களும் ஆம்புலன்ஸ்களும் சைரென் அடித்துக்கொண்டு செல்வதை சர்வசாதாரணமாக காணலாம். ஏனடா! அவ்வளவு குற்றங்களா! இங்க நடந்துகிட்டிருக்கு என நினைக்கதோணும். ஆனா, அப்படி ஒன்றும் இல்லை, நம்ம ஊரைப்போல சொந்த விசயங்களுக்கு இந்த போலீஸ்காரர்களும் வாகனத்தை இப்படி ஒலி எழுப்பிக்கொண்டு போவதுமுண்டு.

சரி, விசயத்திற்கு வருவோம். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இருபத்தி மூன்றாம் தியதி என் வீட்டிற்கு பக்கத்து தெருவிலுள்ள அறுபத்தி ஒன்று வயதுடைய சன்ட்ரா சிம்சன் என்னும் பெண் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இடித்தவன் தப்பித்து விட்டான். போலீஸ், சாலை முழுக்க அறிவிப்பு பலகைகளைவைத்து பொது மக்களின் உதவியை நாடியது. யாருமே பிடிபடவில்லை.



பின்னர் நீண்ட விசாரணைக்குப்பின் ஒரு போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த இளம் போலீஸ் அதிகாரி தன் சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டையை கொடுப்பதற்காக, தான் பணியில் இருக்கும் போதே, நூறு மைல் வேகத்தில் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். கூடவே அவசர காலத்தில் பயன்படுத்தக்கூடிய ஒலியையும் எழுப்பி. விபத்து நடந்த சாலை முப்பது மைல் வேகத்தில் செல்லக்கூடியது. அந்த பெண்ணை இடிக்கும்போது, வாகனம் ஐம்பது மைல் வேகத்தில் சென்றிருக்கிறது.

இவர் எப்படி, இப்படி வகையாக மாட்டிக்கொண்டார்?
இந்த போலீஸ் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் மற்றும் incident data recorder என்னும் கருவியால்தான். இது வாகனம் செல்லுமிடங்களையும் அதன் நேரத்தையும் வேகத்தையும் கனகச்சிதமாக பதிவு செய்து வைத்துக்கொள்ளும். இப்படி அப்பெண் மரணித்தபோது இந்த வாகனம் அவ்விடத்தில் இருந்தது கண்டுபிடிக்கபட்டு இப்போது பதினைந்து வருடங்கள் சிறை தண்டனை வழங்கபடவுள்ளது. இப்படி போலீஸ் வலையில் போலீஸ் மாட்டிக்கொண்டார். ஆனால் நம்மூரில், போலீஸ் வலையில் போலீஸ் மாட்டாது.

4 கருத்துகள் :

நாமக்கல் சிபி சொன்னது…

நம்மூர்ல போலீஸ் வலைல திருடனே மாட்டுறதில்லை! நீங்க என்னடான்னா? ஹெ ஹேஹே!

Selvaraj சொன்னது…

நாமக்கல் சிபி

நம்மூர்ல போலீஸ் வலைல திருடனே மாட்டுறதில்லை! நீங்க என்னடான்னா? ஹெ ஹேஹே!


//ஆனா, ஓட்டை இல்லாத வலை என்றால், சில நேரங்களில் திருடன் மாட்டுவான்//

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

அங்கிருக்கும் நவீன கருவிகள் இல்லாமலே நம்ம ஊர் காவல்துறை கண்டுபிடிக்கிறது , அத்தகைய வசதிகள் இருந்தால் நம்ம ஊர் போலீஸ் ஆபீஸ் ல இருந்தே கண்டுபுடிசிடுவாங்க அண்ணா ..

Selvaraj சொன்னது…

krishna


அங்கிருக்கும் நவீன கருவிகள் இல்லாமலே நம்ம ஊர் காவல்துறை கண்டுபிடிக்கிறது , அத்தகைய வசதிகள் இருந்தால் நம்ம ஊர் போலீஸ் ஆபீஸ் ல இருந்தே கண்டுபுடிசிடுவாங்க அண்ணா ..

//கண்டுபிடிப்பாங்க தம்பி, ஆனா கண்டுபிடிச்சது VIP-ன்னா வெளியத்தான் சொல்ல மாட்டாங்க//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!