.

Loading...

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

ஜெபமாலை வரலாறு!

ஜெபமாலை வரலாறு!


ஜெபமாலை என்பது ஐநூறு வருடங்களுக்கு மேலாக கத்தோலிக்க சபையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அதே சமயத்தில் கிறிஸ்துவை பற்றிய நல்ல ஞானத்தை உருவாக்குவதற்கு வழிவகுத்தது.

கிறிஸ்தவ பக்தி பாரம்பரியத்திலிருந்து வடித்தெடுக்கப்பட்ட சாறான ஜெபமாலையானது வாயாலும் மனதாலும் செய்யப்படும் ஜெபத்தின் மூலம் ஒரு மனிதனை பலமுள்ள தியானத்தில் ஒருங்கிணைக்க உதவுகிறது. இப்படியாக ஜெபமாலை நம்முடைய பிதாவால் தெரிந்த்தெடுக்கப்பட்ட, மாதாவின் மூலமாக மனித இனத்தை கடவுளிடம் இணைக்கிறது. பாலைவனத்தில் சேவை செய்து வந்த இறை பணியாளர்கள் தங்கள் தொடர் ஜெபத்தை எளிதாக்கிகொள்வதர்க்காக பயன்படுத்திய வழி முறையிலிருந்தே ஜெபமாலையின் வரலாற்று வளர்ச்சி தொடங்கியது.





கிறிஸ்துவிற்கு முன் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்துக்கள் தங்களின் தொடர் ஜெபங்களை எண்ணுவதற்காக ஒரு வழிமுறையை கண்டுபிடித்தார்கள் என்பது, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. இந்த ஜெபமாலையின் வளர்ச்சியில் பதினைந்தாம் நூற் றான்டிற்கு முக்கிய பங்குண்டு. இந்த கால கட்டத்தில்தான் ஜெபமாலையின் தாக்கம் டோம்னிக்கர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெபமாலையின் பயன்பாட்டிற்கு டோமினிக்கர்கள் காரணமில்லை என்றாலும், அதன் வளர்ச்சிக்காகவும் வரலாற்றில் இடம்பெற செய்ததற்கும் அவர்களின் பங்கு மிகவும் பெரியது என்பதை மறுக்க முடியாது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் ஜெபமாலையானது பதினைந்த்தாம் நூற்றான்டில்தான் வழக்கத்தில் வர ஆரம்பித்தது.

"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே" என்னும் ஜெபமானது புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டது. "அருள் நிறைந்த்த மரியே வாழ்க!" என்னும் ஜெபம் புனித லூக்காவின் நற்செய்தியில் கபரியேல் தூதனும் எலிசபெத்தும் மாதாவிடம் கூறிய வாழ்த்திலிருந்து எடுக்கப்பட்டது. "பிதா சுதன் பரிசுத்த ஆவி" என்பது ஆரம்ப காலங்களில் சங்கீதங்களை சொல்லி ஜெபிக்கும் போது சொல்லப்பட்டு வந்ததிருக்கிறது. ஜெபமாலையில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட மகிமை படுத்துதல் மாதாவை பற்றிய செய்திகளை தெரிவிக்கிறது. அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணம் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வந்ததுள்ளது.

ஜெபமாலையை பிரபலப் படுத்தியவர்களின் போதனைகள் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்துவருகிறது. ஜெபமாலை ஒவ்வெரு குடும்பத்திற்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை இவர்களின் கருத்துக்கள் வலியுறுத்துகின்றன. போப் ஆண்டவர் பனிரெண்டாம் பயஸ் குடும்ப ஜெபமாலையின் பயன்களைபற்றி சொல்லியிருக்கிறார். இவரின் கருத்து ஜெபமாலையின் மத குரு என்று அழைக்கப்பட்ட தந்தை பாட்ரிக் பெய்டேன் 1942-ல் வைத்த நடைமுறையோடு ஒத்து வந்தது.

தந்தை பாட்ரிக் பெய்டேனின் "ஒன்றாக ஜெபிக்கும் குடும்பம் ஒற்றுமையாக வாழும்" என்கிற மொழி பல விசுவாசிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது போப் ஆண்டவர் ஜான் மற்றும் நான்காம் பால் இருவரும் ஜெபமாலையை குறித்த இந்த போதனைகளை தொடர்ந்து கற்பித்ததோடு, பல புதிய போதனைகளையும் அறிமுகப்படுத்தினர். போப் ஆண்டவர் ஜான் ஜெபமாலையானது இரட்சிக்கபட்டவர்களுக்கான உலக பொது ஜெபம் என்றார். இந்த இரு போப் ஆண்டவர்களும் தங்களின் எழுத்துக்களின் மூலமாகவும் தந்தை பட்ரிக்கின் தீவிர பிரட்சாரத்திற்கு ஆதரவாக இருந்தும், ஜெபமாலையின் வளர்ச்சிக்கு பாடுபட்டனர். இந்த மத குருமார்களின் கருத்துக்களெல்லாம் ஜெபமாலை பிராத்தனையையும் அதனை பற்றிய போதனைகளையும் நமக்கு நம்முடைய இக்கால பிராத்தனை வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது என்பதனை வலியுறுத்துகின்றன.

4 கருத்துகள் :

rajkumar சொன்னது…

ப‌யனுள்ள பதிவு பதித்தமைக்கு நன்றி...

Selvaraj சொன்னது…

கிறிஸ்துவின் மகன்


ப‌யனுள்ள பதிவு பதித்தமைக்கு நன்றி...

//உங்கள் கருத்திற்கு நன்றி!//

Unknown சொன்னது…

"இப்படியாக ஜெபமாலை நம்முடைய பிதாவால் தெரிந்த்தெடுக்கப்பட்ட, மாதாவின் மூலமாக மனித இனத்தை கடவுளிடம் இணைக்கிறது"

மனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தர் கிறிஸ்து மட்டுமே. கிறிஸ்துவின் மூலமாகவே பிதாவிடம் ஒப்புரவாக முடியும் என்பதே வேதம் சொல்லுவது. மாதாவின் மூலமாக ஜெபமாலை மனிதனை கடவுளிடத்தில் சேர்த்தால் கிறிஸ்துவுக்கு என்ன வேலை?

Selvaraj சொன்னது…

//மனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தர் கிறிஸ்து மட்டுமே. கிறிஸ்துவின் மூலமாகவே பிதாவிடம் ஒப்புரவாக முடியும் என்பதே வேதம் சொல்லுவது. மாதாவின் மூலமாக ஜெபமாலை மனிதனை கடவுளிடத்தில் சேர்த்தால் கிறிஸ்துவுக்கு என்ன வேலை?//

ஒருவரின் கேள்விக்கு Fr.வின்சென்ட் அவர்கள் அளித்த பதில்.
Re: Why is so much attention devoted to Mary?
Hi,

Well, first of all we honor Mary as we do because God does. It was the Father who chose Mary to cooperate with Him in being the channel through which His Son would become man. She held God in her womb and nursed God at her breasts. No one, not any of the apostles or the saints who followed them, were ever called to be the tabernacle where the Word was made flesh! No one has had a more significant role in the history of salvation! No one! The more sensitive we are to just who Jesus is, the more we are taken by the one who was closest to Him. He, after all is God make flesh, and she is His mother.

Fr. Vincent

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!