.

Loading...

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

நரியின் கண்ணில் விழித்தால்!!!!

நரியின் கண்ணில் விழித்தால்!!!!




நம்ம ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். நரியை காட்சை கண்டால் எல்லாம் நல்லபடியா நடக்குமென! இது நான் சின்ன பையனாக இருக்கும்போதே கேள்விப்பட்டது. ஆனால் இந்தியாவில் வைத்து என்னமோ அப்படி நரியின் கண்ணில் விழிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இங்கிலாந்து வந்தபின்னர் நிறையமுறை அந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு மட்டுமல்ல! இங்கிலாந்திலுள்ள எல்லோருக்குமே இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். அதற்காக காட்டான் குறிச்சியில் இருக்கிறேன் என நினைத்துவிடாதீர்கள். லண்டன் மாநகரில்தான்.

இங்கு நரிகள் குறுக்க மறுக்க போவது மிகவும் சகஜம். காரணம் நிறைய பூங்காக்களும் அடர்ந்த மரங்களும் நிறைய உள்ளதுதான். லண்டன் விக்டோரியா ரயில் நிலையத்தில்கூட ஒருமுறை நரியை பார்த்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
என்னோட ஒரே கேள்வி, யார் இப்படி ஒரு தப்பான பழமொழியை பரவவிட்டதென்பதுதான்? சத்தியமாக ஒரு வித்தியாசமும் கிடையாது.

நரியை போய் எவன் பார்க்கபோறான் என்னும் தைரியத்தில் யாரோ பரப்பிவிட்ட பொய்தான் இந்த பழமொழி.



இங்கு வீட்டு தோட்டத்திலும் தெருக்களிலும் இரவு நேரங்களில் சர்வசாதாரணமாக நரிகளை பார்க்கலாம். நம்மைக்கண்டால் உடனே ஓடிவிடும். இவைகளால் பெரிய பாதிப்புகள் எதுவும் உள்ளமாதிரி தெரியவில்லை. ஆனால் சில நேரங்களில், எப்போதாவது இவை கடித்ததாக செய்திகள் வரும். ஆனால் அரசு நரி வேட்டைக்கு தடை விதித்துள்ளது.

என்னமோ நம்ம ஒரு பழமொழி தப்புன்னு தோனுது.

"எல்லாம் நல்லபடியா நடக்கும், நரியின் கண்ணில் விழித்தால்!!!"

இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் வருகைதரும்படி கேட்டுக்கொள்ளும் செல்வராஜ்!!

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!