.

Loading...

புதன், 19 ஆகஸ்ட், 2009

பதிவு திருடர்கள் கவனிக்க!

பதிவு திருடர்கள் கவனிக்க!

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு பெண்மணியின் வலைத்தளத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது என் கண்ணில்பட்டது. அவரது வலைத்தளத்தின் வலதுபுறம் இப்படி ஒன்று மின்னிக்கொண்டிருந்தது. வேறு ஒன்றுமில்லை, தலைப்பு இதுதான்: "பதிவு திருடர்கள்". அதன் கீழ், ஒரு நாலுபேரின் பெயரும் அந்த பெண்மணியிடமிருந்து திருடிய பதிவுகளுக்கான இணைப்பும் போடப்பட்டிருந்தது.

எனக்கு இது வித்தியாசமானதாக தோன்றியது. காரணம் பொதுவாக நாம் வலைத்தளங்களில் விருதுகளையோ அல்லது விளம்பரங்களையோத்தான் இப்படி பார்ப்போம். இது எனக்கு காவல் நிலையத்தில் குற்றவாளிகளை படத்துடன் போட்டு அவர்களைப்பற்றிய தகவல்களையும் போட்டிருப்பதைபோல தோன்றியது. பதிவை திருடுவதும் குற்றம்தானே!

இது இன்று பதிவுலகில் மிக சாதாரண விசயமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, திருட்டு பதிவுகளை மிக எழுதில் கண்டுபிடித்துவிடலாம். இப்படி இருந்தும், ஏன் பதிவுகளை திருடுகிறார்கள்? என தெரியவில்லை. எனவே பதிவு திருடர்கள், பதிவுகளை திருடுவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இதை மாதிரி எல்லோரும் தங்களின் வலைத்தளத்தில் தங்களின் பதிவுகளை திருடியவரை இப்படி போட்டு கேவலப்படுத்தி விடுவார்கள். உங்களுக்கும் வாசகர்கள் இருப்பார்கள். அவர்கள் இதை பார்க்க நேரிட்டால் உங்களை தப்பாக நினைக்கமாட்டார்களா? எனவே பதிவு திருட்டை தவிருங்கள்! சுயமாக எழுத கற்றுக்கொள்ளுங்கள்!!

இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் வருகைதரும்படி கேட்டுக்கொள்ளும் செல்வராஜ்!!

8 கருத்துகள் :

சென்ஷி சொன்னது…

உங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன்.

Selvaraj சொன்னது…

சென்ஷி


உங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன்.

//உங்கள் கருத்திற்கு நன்றி சென்ஷி//

துளசி கோபால் சொன்னது…

நீங்க சொன்னது ரொம்பச் சரி.

ஆனால்..... அந்தப் பெண்மணியின் வலைப்பதிவின் சுட்டியைக் கொடுத்துருக்கலாமுல்லே?

சுட்டி கொடு(ங்க) சுட்டி கொடு(ங்க) என் தோழா....

Btc Guider சொன்னது…

பதிவு திருட்டு என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று.அதே சமயம் ஒரே விஷயத்தை இரு நபர்கள் வெளியிடும் போது அதில் உள்ள வாசகங்கள் கருத்துக்கள் போன்றவைகளை கவனிக்கவேண்டும்.இது திருட்டு தானா என்று கவனிக்க வேண்டும்.ஏனெனில் சமீபத்தில் நான் ஒரு பதிவு (முக்கிய பதிவுகளை Drop Down Menu வில் தோன்ற) வெளியிட்டேன்.அதற்க்கு தாங்களும் என் பதிவிற்கு பின்னூட்டம் எழுதியிருந்தீர்கள்.நானும் பதில் எழுதியிருந்தேன்.நீங்கள் படித்தீர்களா என்பது எனக்கு தெரியாது.link கீழே கொடுத்துள்ளேன்.
http://tamilbazaar.blogspot.com/2009/08/drop-down-menu_6454.html
நானும் சம்மீபத்தில் ஒரு பதிவு (http://panguvanigamtips.blogspot.com/2009/07/teamviewer.html) எழுதியிருந்தேன். அதே டூப்ளிகேட் பதிவு (http://www.tamilcatholican.com/2009/08/blog-post_19.html) நானும் நண்பருக்கு பின்னூட்டம் இட்டுள்ளேன்.அதற்காக நான் அவரை குறை கூற முடியாது.காரணம் அவருக்கு இந்த செய்தி என் பதிவல்லாத வேறு வழியில் கிடைத்திருக்கலாம்.எனவே பதிவு எழுதுபவர்களின் வாசக நடையிலேயே தெரிந்துவிடும் பதிவு திருட்டா இல்லையா என்று,நன்றாக பயனுள்ளதாக இருந்தால் கண்டிப்பாக நாம் ஊக்கமளிக்க வேண்டும்,(தங்களைப் போல)

Btc Guider சொன்னது…

உங்கள் வலைப் பக்கத்திற்காக ஒரு பதிவு,
http://tamilbazaar.blogspot.com/2009/08/blog-post_676.html

Selvaraj சொன்னது…

துளசி கோபால்


நீங்க சொன்னது ரொம்பச் சரி.

ஆனால்..... அந்தப் பெண்மணியின் வலைப்பதிவின் சுட்டியைக் கொடுத்துருக்கலாமுல்லே?

சுட்டி கொடு(ங்க) சுட்டி கொடு(ங்க) என் தோழா....

//அவர் அப்படி செய்யாமல் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. எனவே அவரின் இணைப்பை கொடுக்க விரும்பவில்லை. வலையில் வலம்வரும்போது என்றாவது நீங்களும் பார்ப்பீர்கள்//

Selvaraj சொன்னது…

ரஹ்மான்

பதிவு திருட்டு என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று.அதே சமயம் ஒரே விஷயத்தை இரு நபர்கள் வெளியிடும் போது அதில் உள்ள வாசகங்கள் கருத்துக்கள் போன்றவைகளை கவனிக்கவேண்டும்.இது திருட்டு தானா என்று கவனிக்க வேண்டும்.

//கருத்துக்கு நன்றி நண்பரே! copy and paste-ஐ தான் நான் திருட்டு என நினைக்கிறேன். ஒரு கருத்தை பலரும் பல விதத்தில் எழுதுவதையல்ல//

Selvaraj சொன்னது…

ரஹ்மான்

உங்கள் வலைப் பக்கத்திற்காக ஒரு பதிவு,
http://tamilbazaar.blogspot.com/2009/08/blog-

//நான் நிறைய பின்னூட்டங்கள் வரவேண்டு மென்றோ தமிழ் திரட்டிகளில் நிறைய வாக்குகள் வாங்க வேண்டுமென்றோ நினைப்பவன் கிடையாது. சொல்ல நினைப்பதை எழுதுகிறேன். அவ்வளவுதான்//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!