.

Loading...

செவ்வாய், 28 ஜூலை, 2009

நூதன வழிப்பறி ரியாத்தில்!!

நூதன வழிப்பறி ரியாத்தில்!!


நான் வேலைபார்த்த நிறுவனத்தின் லிப்ட் மற்றும் எஸ்கலட்டர்களை பராமரித்து வந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நபர் எனக்கு ஒரு நல்ல நண்பர். ஒருமுறை பராமரிப்பு வேலைக்காக வந்தபோது மிகவும் சோகமாக காணப்பட்டான். விசாரித்தபோது இரண்டு அரபி பையன்கள் இவனை சரியாக ஏமாற்றி இவனிடமிருந்த பணத்தை பிடுங்கிவிட்டனர்.

இவன் வரும் வழியில் சிறிது பணம் கிடந்திருக்கிறது. இவனும் அடிச்சதுடா யோகமென எடுத்திருக்கிறான். ஆனால் தூரத்தில் ஒரு அரபி பையன் தெரியாததுபோல நின்று கொண்டிருக்கிறான். சிறுது நேரத்தில் மறைந்திருந்த ஒரு அரபி பையன் வந்து எனக்கு கொஞ்சம் பணம் தொலைந்து போனது. நீ கண்டாயா? என கேட்கவே, அடுத்த அரபி வந்து ஆமா, நான் கண்டேன் இவன் எடுத்ததை என கூறியுள்ளான். இவனும் அவ்வளவு பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டான். அவர்களோ இல்லை இன்னுமுண்டு என சொல்லி இவனின் துணிகளை உரியாத குறையாக இவனிடமிருந்த பணத்தையும் சேர்த்து அடித்து விட்டார்கள். இது நடந்தது ரியாத்தின் தலைமை தபால் அலுவலகத்தின் அருகில் வைத்து. ஆனால் இதை நான் வேறு நண்பர்களிடம் அப்போது சொல்லவில்லை.

இது நடந்து சரியாக ஒருவாரம்தான் ஆகியிருக்கும் அடுத்தது இதேமாதிரி பால்ராஜ் என்ற என் தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு நண்பரும் இப்படி இரண்டு அரபி பையன்களால் ஏமாற்டப்பட்டு இவரிடமிருந்த இவரின் பணத்தையும் சேர்த்து அபகரித்து விட்டார்கள். இது நடந்ததும் அந்த சுற்று வட்டாரத்தில்தான். நிறைய ஆள் நடமாட்டமுள்ள இடத்திலேயே இப்படி பகல் கொள்ளை. எனக்கு தெரிந்தே இரண்டுபேர் ஏமாந்தனர். இன்னும் எத்தனை பேர் இப்படி இந்த நூதன வழிப்பறி ஆசாமிகளிடம் ஏமாந்தார்களோ?

எதுக்கும் கொஞ்சம் உஷாராக இருக்கணும்! இல்லேன்னா உரிவிடுவானுக!!

இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் நீங்கள் வரவேண்டுமென விரும்பும் செல்வராஜ்

0 கருத்துகள் :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!