.

Loading...

சனி, 11 ஜூலை, 2009

விஷம் விதைக்கும் சீமான்!

விஷம் விதைக்கும் சீமான்!




அகதிகள் முகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது உருப்படியாக இவர் போன்றவர்கள் செய்கிறார்களா? என்றால் இல்லை என்று சொல்லலாம். இன்றைய சூழலில் அகதிகள் முகாமில் அடைபட்டு அல்லல் படும் தமிழர்களை பாதுகாப்பதே அத்தியாவசிய தேவையே தவிர இந்தியாவில் இருந்துகொண்டு வீரவசனம் பேசுவதல்ல! இலங்கையை விடுங்கள், இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்களின் முகாம்கள்கூட சரிவர பராமரிக்கப்படவில்லை எனவும் அதே நேரத்தில் திபத்திய அகதிகள் முகாம்கள் நல்லமுறையில் பராமரிக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதை ஒரு பதிவர் படத்தோடு கூடிய ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார். (அந்த வலைப்பூவின் பெயரை மறந்துவிட்டேன்) அப்படி இருப்பின் அது மன்னிக்கமுடியாத குற்றம். அதை முதலில் தட்டிக்கேளுங்கள். அதை விட்டுவிட்டு இன்று அரசியல் தலைவர்போல மேடை தோறும் முழங்கி பிரிவினை என்னும் விசத்தை விதைத்து வருகிறீர்கள்.

பிரிவினைவாதம் ஒன்றும் தமிழகத்திற்கு புதிதல்ல! கழகங்களின் காலத்தில் "அடைந்தால் திராவிட நாடு அல்லையேல் சுடுகாடு" என்று முழங்கியவர்களெல்லாம் பதவி கிடைத்ததும் கொள்கையை சுடுகாட்டில் போட்டு விட்டார்கள்!

அன்று அவர்களின் அடுக்கு மொழி வசனத்திற்கு அடிமையான தமிழனால் ஆனானப்பட்ட காமராஜரின் ஆட்ச்சியே தூக்கி எறியமுடிந்தது. அதன் பின்னர் சில உதிரி கட்சிகள் பிரிவினையை பேசினாலும் எடுபடவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் சீமான் தனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து தலைகால் புரியாமல் உள்ளதுபோல உள்ளது. "தமிழகத்தில் ஒரு திரைப்படத்தில் ஒரு தவளை நடித்திருந்தால் அத்தவளைக்கும் கூட்டம் கூடும்".

ஒருமுறை முதல்வர் கருணாநிதி சென்று கொண்டிருந்தபோது சாலையை மறித்து ஒரு பெரும் கூட்டம் நடந்தது கொண்டிருந்ததாம் பாதுகாவலர்கள் சென்று விசாரித்தபோது, குள்ள நடிகர் தவக்களை பேசிக்கொண்டிருந்தாராம். ஆக கூட்டம்கூட தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தால் போதும் அது "தவக்களையாக இருந்தாலும்சரி, தவளையாக இருந்தாலும்சரி"
ஏனெனில் தமிழனுக்கு திரைப்படம்தான் எல்லாம்.

ஒருமுறை "பெப்சி உங்கள் சாய்ஸ்" நிகழச்சியை பார்த்துகொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியை நடத்திய உமா என்ற பெண்மணியுடன் பேசக்கிடைத்த வாய்ப்பிற்கு ஒரு தமிழன் ஒரு உதாரணம் சொன்னான் பாருங்க! என் உடம்ப்பெல்லாம் புல்லரித்து போனது. அதாவது விண்வெளியில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி, அங்கு புதிதாக ஒன்றை கண்டுபிடித்தால் எவ்வளவு சந்தோசப்படுவானோ! அதைவிட மேலாக உள்ளது!! என்றான் பாருங்கள். ஆனானப்பட்ட விஞ்ஞானிகளான அப்துல்கலாம், அண்ணாத்துரைகூட இவ்வளவு சந்தோசப்பட்டிருப்பார்களாவென தெரியாது. அதுமட்டுமல்ல, எதோ ஒரு பத்திரிக்கை நடிகை ரம்பாவின் "தொடை" படத்தை வெளியிட்டு, இது யாருக்கும் சொந்தமானது என ஒரு புரட்சியை வெளியிட்டிருந்ததாம். விசேசம் என்னவென்றால் பதில் அனுப்பிய எல்லா தமிழனுமே சரியாக எழுதியிருந்தானாம். அதிலும் ஒரு அதிபுத்திசாலி தமிழன், அத்தொடை எனக்கு சொந்தமானது என எழுதியிருந்தானாம். இதிலிருந்தே தெரியும், தமிழனுக்கும் திரைப்படத்திற்கும் எவ்வளவு உறவு என்று.

எனவே உங்களுக்கு கூடும் கூட்டத்தினருக்கு பிரிவினையை புகட்டுவதை நிறுத்திவிட்டு அகதிகள் முகாமில் அடைபட்டிருக்கும் அப்பாவிகளுக்கு, ஏதாவது உதவிகள் செய்யமுடியுமா? என பாருங்கள். அதை விட்டுவிட்டு இன்று, இலங்கையில் எதாவது சிங்கள தீவிரவாத இயக்கங்கள் குண்டு வைத்தாலும் அது விடுதலை புலிகள் வைத்ததென சொல்லி, அங்கிருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழனையும் அடிவாங்க வைக்காதீர்கள்.

6 கருத்துகள் :

மு.இரா சொன்னது…

அய்யா, வணக்கம் நீங்கள் எழுதிய கட்டுரையை படித்தேன். உங்கள் வார்த்தைகளில் இருந்து நான் முரண்படுகிறேன்.
சீமான் எங்களூக்கு முக்கியமானவர். அவர் மேடையில் பேசும் உரைகளை கேட்டுதான், நாங்கள் (என்னை போண்ற சில இளைஞர்கள்) வெளிநாடு போகும் எண்ணத்தை விட்டுட்டு, கொஞ்சமாவது எம் தமிழ்மக்கள் படும் துயரத்தை காண்கிறோம். அவருடைய பேச்சாலே எழுச்சி கொள்கிறோம். இது உங்களுக்கு பிடிக்கவில்லையா? இல்லையென்றால், நாங்களும் படிச்சு முடிச்சிட்டு வெளிநாட்ல போய் பிச்சை எடுக்க சொல்றீர்களா?
சீமான் மீது உங்களுக்கு, என்ன கோவம்? அவருடைய பேச்சை ஒரு தடவை கேட்டவர்கள் இப்படி அவரை பற்றி அவதூறு பேச மாட்டார்கள்...
நீங்கள் சொன்ன மாதிரி சீமானை பார்க்க வரும் கூட்டம் கிடையாது நாங்கள், அவர் பேச்சை கேக்கவே... சமீபத்தில் கோயபத்தூரில் ஒரு மாநாடு நடந்தது சீமான், கொளத்தூர்மணி வந்திருந்தார்கள், ஒரு ஆயிரம் பேர் உட்காரகூடிய அளவுகொண்ட மண்டபம்தான்.. வழங்கபட்டது. (போலிஸால்) பேச்சுரிமைக்குகூட இந்த நாடு தமிழனுக்கு உரிமை தரவில்லை...
பார்க்க: www.tamizhpadai.blogspot.com
சீமான் ஒருவராலே, என்னை போண்ற இளைஞர்களை தூக்கத்திலிருந்து எழுப்ப முடியும். தயவு செய்து அவரை குறை கூறாதீர்... நன்றி.

PRINCENRSAMA சொன்னது…

சீமான் பேசுவதெல்லாம் இருக்கட்டும். மனித படுகொலைகளுக்கு துணை நிற்கும் இந்தக் கேடு கெட்ட இந்திய நாடு இருப்பதைவிட இந்த மனிதத் தன்மையற்ற பார்ப்பன சதிக்கும்பல் பதவிகளில் அமர மட்டுமே பயன்படும் இந்தியா சுக்கு நூறாகச் சிதறுவது எவ்வளவோ மேல். அந்தக் காலமும் வெகு தொலைவில் இல்லை. தமிழன் அதைக் கேட்க வேண்டிய அவசியம் கூட இல்லை. "இதோ, தயவு செய்து பிடித்துக் கொள்ளுங்கள் உங்கள் தமிழ் நாட்டை" என்று கெஞ்சிக் கூத்தாடி எங்கள் கைகளில் தரப்போகும் நாளும் நம் வாழ்நாளுக்குள் தான் வரப்போகிறது.. அப்போது தமிழகம் மட்டுமல்ல... இந்தியா என்ற "பல்வேறு இனங்களின் சிறைச்சாலை"யே இல்லாமல் விடுதலை பெற்று அனைத்து இனங்களும் வாழும்.... அதையும் நாம் வாழும்போதே பார்ப்போம்.....

Selvaraj சொன்னது…

PRINCENRSAMA said...

அப்போது தமிழகம் மட்டுமல்ல... இந்தியா என்ற "பல்வேறு இனங்களின் சிறைச்சாலை"யே இல்லாமல் விடுதலை பெற்று அனைத்து இனங்களும் வாழும்.... அதையும் நாம் வாழும்போதே பார்ப்போம்.....

//முன்னாள் ஐக்கிய சோவியத் குடியரசுகளை நினைவு படுத்துகிறீர்கள் வேறு ஒன்றுமில்லை//

Selvaraj சொன்னது…

மு.இரா said...
அய்யா, வணக்கம் நீங்கள் எழுதிய கட்டுரையை படித்தேன். உங்கள் வார்த்தைகளில் இருந்து நான் முரண்படுகிறேன்.
சீமான் எங்களூக்கு முக்கியமானவர். அவர் மேடையில் பேசும் உரைகளை கேட்டுதான், நாங்கள் (என்னை போண்ற சில இளைஞர்கள்) வெளிநாடு போகும் எண்ணத்தை விட்டுட்டு, கொஞ்சமாவது எம் தமிழ்மக்கள் படும் துயரத்தை காண்கிறோம். அவருடைய பேச்சாலே எழுச்சி கொள்கிறோம்.


//எழுச்சி என்றால், தமிழ்படை, தமிழ்ராணுவம், தமிழ்தேசியம் என அமைப்புகளை உருவாக்குவதா என்ன?//

இல்லையென்றால், நாங்களும் படிச்சு முடிச்சிட்டு வெளிநாட்ல போய் பிச்சை எடுக்க சொல்றீர்களா?

//இது வெளிநாட்டிலே பிச்சை எடுக்க வாய்ப்பு கிடைக்காதவன் பேசுகிற வீரவசனம்//

Velmurugan K சொன்னது…

//இது வெளிநாட்டிலே பிச்சை எடுக்க வாய்ப்பு கிடைக்காதவன் பேசுகிற வீரவசனம்//

superb you are absolutely right... one of the best comment i ever come across...

Selvaraj சொன்னது…

Velmurugan K


//இது வெளிநாட்டிலே பிச்சை எடுக்க வாய்ப்பு கிடைக்காதவன் பேசுகிற வீரவசனம்//

superb you are absolutely right... one of the best comment i ever come across...

//அமெரிக்காவிற்கு போக ஒரு விசா உள்ளது என்றால், இவரைமாதிரி ஆள்தான் முதலில் போய் நிற்பார்கள்//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!