.

Loading...

Friday, 3 July 2009

உஷார் வாலிபர்களே! ஆழம் தெரியாமல் காலை விடாதீர்!!

உஷார் வாலிபர்களே! ஆழம் தெரியாமல் காலை விடாதீர்!!திருமணம் ஆகாமலே பிரம்மச்சாரிகளாக இருக்கும் ஆண்களையும், பெண்களையும் நாம் பார்த்திருப்போம். ஒவ்வருவரும் ஏதாவது ஒரு காரணத்துடன்தான் அப்படி இருப்பார்கள். சிலர் மத நம்பிக்கையின்பேரில் இருப்பார்கள். சிலர் குடும்ப கஷ்டத்தால் இப்படி இருப்பார்கள், சிலர் தான் விரும்பிய வாழ்க்கை துணை கிடைக்காமல்போவதால் இப்படி திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பார்கள், சிலர் நோயின் காரணமாக திருமணத்தை தவிர்ப்பார்கள். சிலர் பெற்றோராலும் குடும்ப்ப உறுப்பினர்களாலும் கூட தடுக்கப்பட்டு பிரம்மச்சாரிகளாக இருப்பர். உதாரணத்திற்கு நடிகைகளை சொல்லலாம்.

ஆனால் ஆழம் தெரியாமல் காலை விட்டதால் மனமுடைந்து பிரம்மச்சாரியாக வாழ்பவரும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வு இது.

இவர் அப்போது திருமண வயதை எட்டியிருந்தார். தான் பணி நிமித்தமாக வெளி ஊரில் தங்கி இருந்த போது, தன வீட்டின் எதிரே உள்ள திருமணமான பெண்ணோடு பழகும் வாய்ப்பு கிட்டியது. திருமணத்திற்கு முன்பே "இந்த" விசயத்தில் கொஞ்சம் அனுபவம் இருக்கவேண்டும் என நண்பர்கள் சொல்லியது நினைவிற்கு வந்தது. அதை இங்கு நிறைவேற்றிக்கொள்ள எண்ணி, அப்பெண்ணின் மேல் மையல் கொண்டுள்ளார். நாளடைவில் அப்பெண்ணும் திருமணமாகாதவன், அதிலும் கன்னிப்பையன் என்பதால் இவனின் ஆசைக்கி இணங்கியுள்ளாள்.

சென்றவன் பயந்து பயந்துதான் போயுள்ளான். காரணம் அவள் மாற்றான் மனைவி, இவனும் இதற்கு புதிது. போனதறியாமலே சிறிது நேரத்திலே ......... வெளியேறுகிறான். பெரிய எதிர்பார்ப்போடு இருந்த அப்பெண், ஏமாற்றம் அடைந்ததால் அவனிடம், இதற்கு என் புருஷன் எவ்வளவோ மேல்! சீ... நீ இவ்வளவு தானா? என கேட்டுவிடுகிறாள்.

இதனால் மனமுடைந்துபோன அவர், தன ஆண்மை மீதே சந்தேகம் வந்து இன்றும் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார். அவர் உண்மையிலே பயத்தால் பாதிக்கப்பட்டு இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளவர். ஆண்மைகுறைவால் அல்ல! ஆக வாலிபர்களே, இந்தமாதிரி விஷ பரிட்ச்சையில் இறங்காதீர். இதனால் உங்கள் வாழ்கையே வீணாகி விடலாம்.

திருமணமாகா கன்னி பெண்களும் சரி பையன்களும் சரி, திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வதை தவிர்க்கவும். அதிலும் திருமணமானவர்களுடன் உறவு கொள்வது மிகவும் ஆபத்தானது. காரணம் அவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருப்பதுதான். அதுமட்டுமல்ல ஏற்கனவே "புலிகளை கையாண்டு கொண்டிருப்பவர்களிடம் நீங்கள் பூனையாக போகிறீர்கள்" என்பதை மறந்துவிடாதீர்கள்! எனவே உஷார் வாலிபர்களே! ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள்!!

8 comments :

ச.செந்தில்வேலன் said...

நல்ல கருத்து

Selvaraj said...

ச.செந்தில்வேலன் said...

நல்ல கருத்து


//உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி செந்தில்!//

மதுவதனன் மௌ. said...

எழுதிய விடயம், கருத்து எல்லாம் நல்லது..

ஒரு சில சொற்கள் உறுத்துகின்றன..

//போனதறியாமலே சிறிது நேரத்திலே ஆண்மையை இழந்து வெளியேறுகிறான்.//
இந்த வசனத்துக்கு என்ன அர்த்தம்?...இப்படி எழுதுவது சரி என்று நினைக்கிறீர்களா?

நிலாமதி said...

நல்ல ஒரு பதிவு..........அவரவர்க்கு வாழ்கை அவன் போட்ட பிச்சை. எல்லாம் கால நேரப்படி நடப்பது உண்டு. நானும் ஒரு கத்தோலிக்க மதத்தவள். மேலும் பலபதிவுகள் படைக்க வாழ்த்துக்கள். நிலா

Selvaraj said...

நிலாமதி said...

நல்ல ஒரு பதிவு..........அவரவர்க்கு வாழ்கை அவன் போட்ட பிச்சை. எல்லாம் கால நேரப்படி நடப்பது உண்டு. நானும் ஒரு கத்தோலிக்க மதத்தவள். மேலும் பலபதிவுகள் படைக்க வாழ்த்துக்கள். நிலா

//உங்கள் வாழ்த்துக்கு நன்றி நிலாமதி!//

Selvaraj said...

மதுவதனன் மௌ. said...

எழுதிய விடயம், கருத்து எல்லாம் நல்லது..

ஒரு சில சொற்கள் உறுத்துகின்றன..

//போனதறியாமலே சிறிது நேரத்திலே ஆண்மையை இழந்து வெளியேறுகிறான்.//
இந்த வசனத்துக்கு என்ன அர்த்தம்?...இப்படி எழுதுவது சரி என்று நினைக்கிறீர்களா?

//உறுத்தலான வார்த்தை என சுட்டிக்காட்டியதற்கு நன்றி. நான் அதை நீக்கி விட்டேன். நான் சொல்லப்பட்ட விசயத்திற்கு அவ்வார்த்தை தேவை என நினைத்தேன். அதுதான் மற்றபடி ஒன்றுமில்லை. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்//

தமிழ். சரவணன் said...

ஐயா வாய்பிருந்தால் இந்த வலைபூ பக்கத்திற்க்கு சென்றுபாருங்கள்... எங்வளவு இளைஞர்கள் மற்றும் அப்பாவிக்குடும்பங்கள் சீரழிகின்றது என்று புரியும்... பல கெடுமதிப்பெண்களால்....

http://tamil498a.blogspot.com

Selvaraj said...

தமிழ். சரவணன் said...

ஐயா வாய்பிருந்தால் இந்த வலைபூ பக்கத்திற்க்கு சென்றுபாருங்கள்... எங்வளவு இளைஞர்கள் மற்றும் அப்பாவிக்குடும்பங்கள் சீரழிகின்றது என்று புரியும்... பல கெடுமதிப்பெண்களால்....

http://tamil498a.blogspot.com//உங்களுக்கு நடந்த சோக சம்பவத்தையும் நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். இந்த பதிவையும் படித்து விட்டேன். உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை அவை ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும். நம்பிக்கையோடு இருங்கள்//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

ஆங்கிலத்தில் தட்டச்சி செய்து தமிழில் மாற்றிட...

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!