.

Loading...

Thursday, 25 June 2009

அது உன் ரத்தமில்லையா?

உண்மை கலந்த பொய்! அல்லது பொய் கலந்த உண்மை!!

இலக்கிய செல்வன் அப்போதுதான் பணி மாறுதலாகி தன கிளை அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலகத்தில் மேலாளராக சேர்ந்தான். அடுத்த நாளே குறிப்பிட்ட ஒரு பணியை இயக்குனருடன் பார்வையிட சென்றபோது, அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களில் ஒருவன்மட்டும் அவன் கண்ணில் படாதபடி மறைந்து செல்வதை கண்டான். அவனை பட்டென இலக்கிய செல்வனுக்கு ஞாபகாம் வந்தது. ஆனால் அதை அவன் காட்டிக்கொள்ளவில்லை.

அவனின் கிளை அலுவலகமும் தலைமை அலுவலகமும் வேறு வேறு நாடுகளில் இருந்ததால் அவனது இயக்குனரை தவிர பிற ஊழியர்களுக்கு அவனை தெரியாது. தன புதிய பணிக்காக விடுமுறை முடிந்து விமான பயணத்தை மேற்கொண்டபோது ......

இலக்கிய செல்வனோ மிகவும் எளிமையான தோற்றமுடைய ஒரு நேர்மையான அப்பாவி. விமான பயணத்தின்போது கூடவே, குழந்தை குட்டிகளும் வந்ததால் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும் நிறையமுறை விமானப்பயணம் செய்தவனாகையால் அது ஒரு பேருந்து பயணம்போலதான் இருக்கும்.

குழந்தை குட்டிகளோடு பயணம் செய்வதே பெரிது! அதில் மாற்று திறனுள்ள பிள்ளை என்றால் சொல்லவாவேண்டும்? இந்த பிள்ளையின் தொல்லை, பொறுக்கமுடியாமல்கூட இருக்கும். இருந்தாலும் இலக்கிய செல்வனுக்கு இது பழகிப்போன ஒன்று. ஆனால் பக்கத்து பயணிக்கு எரிச்சல் தாங்கமுடியவில்லை. ஒருகட்டத்தில் இலக்கிய செல்வனிடம், அவன் கேட்டான், என்னய்யா! இப்படி கழுத்தருக்கிரா, மெண்டல் கேச டாப்லெட்(tablet) கொடுத்து தூங்க வச்சி கொண்டுவரவேண்டியதுதானே? நிம்மதியா என்னை பயணம் செய்ய விடுயா, என பொரிந்து தள்ளிவிட்டார். இலக்கிய செல்வன் பெருந்தன்மையாக, அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இருந்தாலும் அவர் முறைத்துகொண்டுதான் இருந்தார். அதன் பின்னர் பயணம் முடியும்வரை அவனிடம் பேசவே இல்லை. இதை இலக்கிய செல்வன் அப்போதே மறந்து விட்டான். காரணம் இது அவனுக்கு புதிதல்ல.

மாலையில் சில ஊழியர்கள், குறிப்பாக தமிழர்கள் அவனை பணிமுடிந்தபின் வந்து சந்தித்தனர். நிறுவனத்தின் புதிய மேலாளர் தமிழர் என்று் அவர்களுக்கு சந்தோசம். அவர்கள் சென்று சிறுது நேரம் ஆகியிருக்கும், மீண்டும் யாரோ அழைப்புமணியடிக்க கதவை திறந்த இலக்கிய செல்வன்முன், இவனைபார்த்து ஒழித்த, அந்த விமானத்தில் அவனோடு பயணித்து திட்டி தீர்த்த நபர் நின்றுகொன்டிருந்தார். உள்ளே அழைத்தவரிடம் மன்னிச்சிடுங்கையா! நீங்கன்னு தெரியாம பேசிட்டேன் என்றான். அதை நான் அப்பவே மறந்திட்டேன். உங்கள் மேல் தப்பில்லையே. நான் தப்பா நினைக்கல்லே, நீங்க போங்கள் என, இலக்கிய செல்வன் சொல்லியும் அவர் போகவில்லை. அதான் மன்னிச்சிட்டேன! நீங்கள் போங்கள் என்றான் மீண்டும். வந்தவர் மளமளவென அழத்தொடங்கி விட்டார். என்னாச்சையா உங்களுக்கு? என இலக்கிய செல்வன் வினவினான்.

இல்லையா, இதமாதிரி எனக்கும் ஒருபிள்ளையுண்டு, அத கண்டாலே எனக்கு வெறுப்பு. அத நான் எடுத்து கொஞ்சியதே கிடையாது. பக்கத்தில் வந்ததாலும் விரட்டிவிடுவேன் என்றான்.ஆனா நீங்க நேர்மாறா இருக்கீங்க. அதுவரை அமைதியாக இருந்த இலக்கிய செல்வன் இப்போது கேட்டான் நீ மனிதனா? அது உன்னோட இரத்தமில்ல? அழுதுகொண்டே நின்றான்.

இலக்கிய செல்வன் சொன்னான், நீங்கள் மீண்டும் விடுமுறையில் செல்கிறீர்கள். அந்த குழந்தையோடு ஒருமாதமும் செல்வழிக்கிறீர்கள்.

நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஆகையால் இலக்கிய செல்வன் அவருக்கு மீண்டும் ஊர் போய்வர ஏற்பாடு செய்தார். முழுக்க முழுக்க அக்குழந்தையோடு செலவழித்து விட்டு மீண்டும் வந்தார். குழந்தைக்கும் சந்தோசம், அவருக்கும் சந்தோசம். இதன்பின் இலக்கிய செல்வனை சந்தித்த அவர், ஒரு மிருகத்தை மனிதனாக ஆக்கியதற்கு நன்றி என்றார். கூடவே, வருவதற்கு இரண்டு நாளைக்கு முன் அக்குழந்தை இறந்து விட்டதாகவும் சொன்னார். ஆனாலும் தன மனதிலிருந்த ஒரு பெரிய பாரம் இறக்கி வைக்கப்பட்டதாகவும், தான் இப்போது சந்தோசமாக இருப்பதாகவும் சொன்னார். இதைக்கேட்ட இலக்கிய செல்வனுக்கும் சந்தோசமாகவே இருந்தது.

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html

0 comments :

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!