.

Loading...

திங்கள், 22 ஜூன், 2009

அரபு நாட்டில் வீட்டுவேலை செய்யும் அபலை பெண்கள்!

அரபு நாட்டில் வீட்டுவேலை செய்யும் அபலை பெண்கள்!

அரபிகளின் வீட்டில் வேலைசெய்வதை சிறைத்தண்டனை அல்லது நரக வாழ்க்கைக்கு ஒப்பிடலாம். இதில் பெரும்பாலும் மாட்டும் பெண்களை இரண்டு விதமாக சொல்லலாம். ஒன்று அவ்வளவாக படிக்காத பெண்கள். வீட்டுவேலைக்கெனவே வருபவர்கள். மற்றொன்று கொஞ்சம் படித்த பெண்கள். ஏஜென்ட்டுகளால் ஏமாற்றபட்டு மாட்டுபவர்கள்.

முன்பெல்லாம் நிறைய இலங்கை முஸ்லிம் தமிழ் பெண்கள் இந்த பணிகளில் இருந்தார்கள். இப்போது இந்தோனேசிய பெண்கள் இந்த இடத்தை நிரப்பி விட்டார்கள். இவர்களுக்கு ஒரு சுதந்திரமும் கிடையாது. இருபத்திநான்கு மணி நேரமும் வேலைக்கு ஆயத்தமாகவே இருக்கவேண்டும். தூக்கத்தில்கூட எழுப்பி வேலைசெய்ய சொல்வார்கள். இதில் ஒழுங்காக சம்பளமும் உணவும் கிடைத்தாலே, அது அவர்களின், கெட்டநேரத்தில் நல்லநேரம் எனலாம்.
இன்று துப்புரவு பணிகளை அரசில் செய்யும் அரபிகள் கூட பணிப்பெண்களை வைத்துக்கொண்டு சரியாக சம்பளமும் கொடுக்காமல், உணவும் கொடுக்காமல் கொடுமைபடுத்தும் நிகழ்ச்சிகள் நிறைய உண்டு. போதாக்குறைக்கு பாலியல் தொல்லை வேறு. இந்த அபலைப்பெண்களால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை. தூதரகங்கள்கூட இவர்களை கண்டுகொள்வதில்லை. இதிலிருந்து தப்பிக்க சிலர் முயற்சி செய்வர். அப்படி தப்பிக்க முயற்சி செய்த ஒரு பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் இது.

இனி இளகிய மனதுள்ளவர்களும், பதினெட்டு வயசிற்கு கீழ் உள்ளவர்களும் தயவுசெய்து படிக்காதீர்கள்.

ரியாத் நகராட்ச்சியினர் துப்புரவு பணியில் ஈடுபட்டபோது, ஒரு கருப்பு பாலுதின் பையில் மனித உறுப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவர்கள் சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு பெண்ணின் உடல் எட்டு துண்டுகளாக வெட்டப்பட்டு எட்டு கருப்பு பைகளில் கட்டி குப்பைதொட்டியில் கொட்டப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அப்பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள் என தெரியவந்தது.

இந்த உடல் பாக்கிஸ்தானிகள் அதிகம் வாழும் இடத்தில் கொட்டப்பட்டிருந்தது. உடல் கிடைத்த சில மணிநேரத்திலே அனைத்து குற்றவாளிகளும் பிடிக்கப்பட்டனர்.

இனி நடந்த சம்பவத்தை பார்போம். இந்த பிலிப்பீனோ பெண்மணி ஓரளவு படித்தவள். அரபியின் வீட்டில் சம்பளமும் கொடுக்காமல் கொடுமையும் படுத்தியதால், பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் வெளியேறி, டாக்ஸி பிடித்து பிலிப்பின்ஸ் தூதரகம் சென்றுள்ளார். போகும் போது, பாகிஸ்தானி டாக்ஸி ஓட்டுனரிடம், தன் பிரட்சினைகளை சொல்லி, இதை தூதரகத்தில் சென்று முறையிடப்போகிறேன் என சொல்லியிருக்கிறாள். அந்த பெண்ணின் போதாத காலம். நேரமாகிவிட்டதால் தூதரகம் மூடியிருந்தது. இனி அரபியின் வீட்டிற்கு சென்றால் ஆபத்து என கூறிய பெண்ணை, பாக்கிஸ்தானி, நான் மனைவி மக்களோடு தங்குகிறேன். இன்று, நீ என்வீட்டில் தங்கு, நாளை காலை நான் உன்னை தூதரகத்திற்கு அழைத்து செல்கின்றேன் என கூறியுள்ளான்.

இதை நம்பிய பெண் அவனுடன் சென்று்ள்ளாள். அங்கு சென்றதும் ஒருகூட்டம் பிரம்மச்சாரி பாக்கிஸ்தானிகள், இவளை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து, சின்னா பின்னமாக அனுபவித்து கொன்று் விட்டார்கள். ஆனால் இந்த பெண் அவளின் உடம்பில் அந்த டாக்ஸி லைசென்ஸ் எண்ணை எழுதி வைத்திருந்திருக்கிறாள். இது அந்த பாகிஸ்தானி நாய்களுக்கு தெரியவில்லை. இதை வைத்தே இதில் சம்பந்தமுடைய எட்டு பாகிஸ்தானிகளை காவல்துறையினர் சிலமணி நேரத்தில் கைது செய்தனர்.

ஆனால் சவுதி அரேபியாவில், பத்திரிகைகளின் குரல்வளை நெரிக்கப்பட்டிருப்பதால் இதுபோன்ற செய்திகள் வெளிவருவதில்லை.

இந்தியா, ஸ்ரீலங்கா, இந்தோனேசியா போன்ற் நாடுகள் வீட்டுவேலைக்கு பெண்களை அனுப்புவதை தடை செய்யவேண்டும். காரணம் அரபி பெண்கள், இந்த வேலைகாரிகளை அடிப்பது மிகவும் சகஜம். பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் வீட்டுவேலைக்கு அரபு நாடுகளுக்கு பெண்களை அனுப்ப தடை விதித்துள்ளது. இதைபோல எல்லா நாடுகளும் தடைவிதித்தால் வேலைக்காரிகள் இல்லாமல் கஷ்டப்பட்டு அரபிகள் திருந்த வாய்புள்ளது. அந்த வாய்ப்பை உருவாக்குவது நமது கடமையும் கூட.

8 கருத்துகள் :

Vijay Anand சொன்னது…

Very good posting.
Thanks Maria selvaraj.

குடுகுடுப்பை சொன்னது…

சுவனப்பிரியன் பிலீஸ், அவருதான் சவுதியின் தீவிர ஆதரவாளர். அங்கே வசிப்பவர். மாற்றுக்கருத்துக்களுக்கும் பதில் சொல்பவர் இங்கே வந்து என்ன சொல்றாருன்னு பாப்போம்

Selvaraj சொன்னது…

Vijay Anand said...

Very good posting.
Thanks Maria selvaraj.

//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!//

Selvaraj சொன்னது…

குடுகுடுப்பை said...

சுவனப்பிரியன் பிலீஸ், அவருதான் சவுதியின் தீவிர ஆதரவாளர். அங்கே வசிப்பவர். மாற்றுக்கருத்துக்களுக்கும் பதில் சொல்பவர் இங்கே வந்து என்ன சொல்றாருன்னு பாப்போம்

//வாங்க குடுகுடுப்பை! நான் சவுதி அரேபியாவில் நிறைய வருடங்கள் வேலைபார்த்தவன்//

sarathy சொன்னது…

சமிபத்தில் பணி முடிந்து
வீடு திரும்பிய நேரம்.
ஒரு சிங்கள பெண்
தான் பணிபுரிந்த வீட்டில் தன்னை
கொடுமைபடுத்துவதால் தமாமிலிருந்து
ஏதோ ஒரு வாகன ஓட்டுனரை கெஞ்சி
ராஸ்தனுரா வந்து, கடைத்தெருவில்
நின்று கொண்டிருந்தார்.

அதுவும் பர்தா கூட அணியாமல்...

எங்களுக்கோ நெருங்கி பேசவும் பயம்..

எங்களின் சிங்கள ஓட்டுனர்
அவரிடம் விசாரித்ததில்
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில்
தன்னை கொண்டுவிடுமாறு கேட்டிருக்கிறார்.

அவர் என்ன செய்ய முடியும்???

எங்களின் பண உதவியையும்
மறுத்துவிட்டு சென்ற அப்பெண்மணியின்
நிலைமை???

அழுத கண்களும், வீங்கிய முகமும்
இன்னும் மறையவில்லை.

Selvaraj சொன்னது…

sarathy said...

அழுத கண்களும், வீங்கிய முகமும்
இன்னும் மறையவில்லை.

//பெரும்பாலான பணிப்பெண்களின் நிலைமை இதுதான். ஒருமுறை ஷிமிசியிலுள்ள, ரியாத் சென்ட்ரல் மருத்துவமனையில் சுயநினைவு இழந்த நிலையில் அடித்து துன்புறுத்தப்பட்ட இந்தோனேசிய பணிப்பெண் அனுமதிக்கப்பட்டார். ஒரு போலீஸ்காரனின் வீட்டில் பணிபுரிந்த இவளை பணிமுடிந்ததும் தனி அறையில் வைத்து பூட்டிவிடுவானாம். சில நேரங்களில் மட்டுமே உணவு கொடுத்துவந்துள்ளான். சம்பளம் கேட்ட இவளின் நகத்தை எல்லாம்கூட பிடுங்கியுள்ளான்.இதனால் நோயால் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்ததும் மருத்துவமனையில் கொண்டு போட்டுவிட்டு போய்விட்டான். இதன் விளைவாக சிலமாதங்கள் மட்டும் இந்தோனேசிய தூதரகம் வீட்டுவேலைக்கு தடை விதித்திருந்தது//

ராஜ நடராஜன் சொன்னது…

இதில் குற்றங்களை அரபியர்கள் மீது சுமத்திப் பயனில்லை.குடும்பப் பாங்கான அரபிகளும் இருக்கிறார்கள்.மனித வளம் தூதரகங்கள் மூலமாக அனுமதிக்கப் படாமல் தனி மனித அல்லது நிறுவனங்கள் மூலமாக நிகழ்வதன் காரணமே மனிதக் கடத்தல் எனும் ஹுயூமன் ட்ராபிக்கிங் நிகழ்வதற்கு காரணமாகி விடுகிறது.ஒரு வீட்டில் பணி புரிந்து தூதரக அடைக்கலம் புக இயன்ற பெண்ணுக்கு மட்டுமே தூதரகம் உதவிக்கு முன் வருகிறது.மேலும் இறையாண்மை பேசும் எந்த ஆசிய நாட்டு தூதரகங்களும் நியாயம் என்ற நிலையில் தங்களது நாட்டுக்கான அழுத்தங்களை அரபிய தேசத்தின் மீது தரும் நிலையில் இல்லை.ஒரு தேசம் பணிப்பெண்களை அனுப்ப மறுத்தால் இன்னொரு தேசம் அதற்கு தயாராக இருக்கிறது.

சார்க் போன்ற மாநாடுகளில் இது போன்ற விசயமெல்லாம் கூட்டு முயற்சியாக அலசப் பட்டதா எனத் தெரியவில்லை.மாநாடுகள் பாகிஸ்தான்,இந்திய விவகாரங்களை மட்டுமே முன்னிறுத்தி சென்றிருக்கின்றன.

Selvaraj சொன்னது…

ராஜ நடராஜன் said...

ஒரு வீட்டில் பணி புரிந்து தூதரக அடைக்கலம் புக இயன்ற பெண்ணுக்கு மட்டுமே தூதரகம் உதவிக்கு முன் வருகிறது.

//இந்த அபலை பெண்களுக்கு, தூதரகங்களுக்கு சென்று முறையிட வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தை யாரும் தொட்டதாகக்கூட தெரியவில்லை//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!