.

Loading...

வெள்ளி, 19 ஜூன், 2009

ஒழித்து செய்தால்... அழைத்து சொல்லும்!

ஒழித்து செய்தால்... அழைத்து சொல்லும்!


பக்ரைனின் அந்த பரபரப்பான மாலை வேளையில் வாடகை கார் ஓட்டும் அரபியை காவல்துறையினர் விசாரணை செய்ய அழைக்கினறனர். அரபி எந்த தப்பும் செய்யவில்லை. அப்படியென்றால் எதற்கு?

பிரபல சல்மானியா மருத்துவமனையில் குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்மணி, குழந்தை பிறந்ததும், அதை அங்கே விட்டுவிட்டு தலைமறைவு ஆகிவிட்டார். மருத்துவமனை ஊழியர்கள், போலீஸ் வலைவீசி தேடுவதைபோல தேடியும் பெண்மணி கிடைக்கவில்லை. எனவேதான் காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது. மருத்துவமனை பதிவேடுகளில் அனுமதிக்கபட்டபோதுள்ள தகவலின்படி இந்த அரபியின் பெயர்தான் தந்தை எனவும், அவனுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் சரியாக பதியப்பட்டிருந்தன. இதன் அடிப்படையிலேயே காவல்துறையினர் அரபியை விசாரித்தனர்.

அரபிக்கு இப்போது விஷயம் புரிந்தது.
அதற்கு முந்தைய நாள் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர், இவனுடைய காரை பிடித்து மருத்துவமனை சென்றுள்ளார். இறங்கும்போது அவசரமாக வந்ததால் பணம் எடுக்க மறந்து விட்டேன். உன் பெயர் மற்றும் முகவரியை கொடு. பின்னர் உனக்கான பணத்தை தருகிறேன் என சொல்லி அரபியின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பெற்றுக்கொண்டாள். அவளுக்கு இக்குழந்தை தவறான வழியில் உருவானதால் மருத்துவமனையில் அரபியின் விவரங்களை கொடுத்துவிட்டு தலைமறைவு ஆகிவிட்டாள். ஏனெனில் அங்குள்ள சட்டப்படி கருவை கலைக்கமுடியாது.

இந்த உண்மையை காவலர்களிடம் அவன் எவ்வளவு எடுத்துசொல்லியும் அவர்கள் நம்பவில்லை. போலீஸ் என்றாலே அப்படித்தானே! அது எந்த ஊர் போலீஸ் ஆக இருந்ததாலும். அரபிகளும் பெண் விசயத்தில் குறைந்தவர்களல்ல! விட்டால் நாலுக்கு மேலேயும் கட்டுவார்கள். எனவே வலுக்கட்டாயமாக அரபியை கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்கின்றனர்.
மருத்துவ பரிசோதனையின்படி அது அரபியின் குழந்தை இல்லை என் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

இனிதான் பிரட்ச்சனையே ஆரம்பமாகிறது.
உங்களை சிரமப்படுத்தியதற்கு வருந்துகிறோம். நீங்கள் போகலாம் என சொல்லுவதற்கு பதில். மருத்துவ அறிக்கையின்படி உனக்கு பிள்ளையே பிறக்காது, என சொல்லிவிட்டார்கள்.
கொதித்துப்போன அரபி பக்கத்தில் நினறவர்களை அடிக்காத குறைதான். காரணம் அவன் ஆறு குழந்தைகளுக்கு தந்தை என்பதுதான். விஞ்ஞானம் ஒருபோதும் பொய்க்காது என விளக்கி சொல்லி அரபியை சமாதானப்படுத்தி அனுப்புகின்றனர்.

வீட்டிற்கு சென்ற அரபி, மனைவியை விஞ்ஞானம் ஒருபோதும் பொய்க்காது என்னும் விளக்கத்துடன், பிடிபிடி என பிடிக்க அப்புண்ணியவதி உண்மையை கக்குகிறாள். வேறு ஒன்றுமில்லை. ஆறு குழந்தைகளுமே உன் தம்பிக்கு பிறந்ததுவென. சோர்ந்துபோன அரபி பின்னர் மருத்துவமனையிலுள்ள அந்த குழந்தையை தத்தெடுத்துக்கொண்டான்.
பாருங்கள்! ஒரு உண்மை எவ்வாறு வெளிப்பட்ட தென்று. உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை! அதுமட்டுமல்ல, ஒழித்து செய்தால்... அழைத்து சொல்லும்.

8 கருத்துகள் :

கலையரசன் சொன்னது…

கரைக்டா சொன்னீங்க பாஸ்!

அந்த வரும் Mouse movement ஸ்க்ரோலிங் ஸ்கிரிப்டை,
கொஞ்சம் இந்த rkarasans@gmail.com க்கு அனுப்ப முடியுமா?

Selvaraj சொன்னது…

கலையரசன் said...

கரைக்டா சொன்னீங்க பாஸ்!

அந்த வரும் Mouse movement ஸ்க்ரோலிங் ஸ்கிரிப்டை,
கொஞ்சம் இந்த rkarasans@gmail.com க்கு அனுப்ப முடியுமா?


//தாராளமா அனுப்பலாமுங்க! அப்படி அனுப்பினால் நீங்க மட்டும்தானே பயனடைய முடியும். எதுக்கும் நேரம் கிடைக்கும் போது, அதை ஒரு பதிவாக வெளியிட்டால் இன்னும் பலபேர் பயனடைவார்களல்லவா?//

பெயரில்லா சொன்னது…

நீங்க எழுதுனாலே என்னன்னு வந்து பார்த்துடுவேன். நல்லா இருக்கு

Selvaraj சொன்னது…

shirdi.saidasan@gmail.com said...

நீங்க எழுதுனாலே என்னன்னு வந்து பார்த்துடுவேன். நல்லா இருக்கு.

//உங்கள் கருத்திற்கு நன்றிகள்!//

நாகா சொன்னது…

சுவாரஸ்யமான நிகழ்வு அல்லது கதை :)

Selvaraj சொன்னது…

நாகா said...

சுவாரஸ்யமான நிகழ்வு அல்லது கதை :)


//உண்மை சம்பவம் நண்பரே! அரபியை ஏமாற்றிய பெண் ஆசியாவை சேர்ந்தவர்//.

malar சொன்னது…

ஒழித்து செய்தால்... அழைத்து சொல்லும்!

நூறில் ஒரு வார்த்தை ..............

Selvaraj சொன்னது…

malar said...
ஒழித்து செய்தால்... அழைத்து சொல்லும்!

நூறில் ஒரு வார்த்தை ..............


//ஆமாங்க!//

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!