வெளிநாட்டிலிருந்து பிறர் கடிதங்களைக்கூட கொண்டு செல்லாதீர்!
இது ரியாத்தில் பொறியாளராக வேலை பார்க்கும் என் நண்பருக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவம்.
நண்பரின் குடும்பம் விடுமுறையில் ஊரிற்கு சென்றுவிட்டதால், சில மாதங்கள் ரியாத்தின் பத்தாவிலுள்ள ஒரு பிரபலமான(?) தமிழரின் உணவகத்தில் உணவருந்தி வந்தார். பின்னர் தான் ஊரிற்கு செல்லும் பொது இந்த உணவகத்தின் உரிமையாளர், நண்பரிடம் ஒரு கடிதத்தை கொடுத்து இந்தியாவில் போனதும் அங்கிருந்து அனுப்பிவிடுங்கள் என சொல்லி கொடுத்துள்ளார்.
பொதுவாகவே குறிப்பாக அரபு நாடுகளில் இப்படி ஒரு பழக்கம் உண்டு. யாராவது ஊரிற்கு செல்வதென்றால் தெரிந்தவர்களெல்லாம் கடிதங்களை கொண்டுவந்து ஊரில்போய் அனுப்ப சொல்லி கொடுப்பார்கள்.
சரி, இனி விசயத்திற்கு வருவோம். நண்பர் மும்பை விமானநிலையத்தின் கஸ்டம் அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டார். அவரிடமோ குழந்தைகளுக்கு வாங்கப்பட்ட சில மிட்டாய்களை தவிர ஒன்றுமில்லை. இந்த மிட்டாய்களின் கூடவே அந்த உணவக உரிமையாளரின் கடிதத்தையும் வைத்துள்ளார். மிட்டாய்களின் ஈரப்பதத்தால் அக்கடிதமும் ஈரமாகி போயுள்ளது. கடிதத்தை எடுத்து மேலும் கீழும் பார்க்க ஆரம்பித்த அதிகாரிகள் நண்பரை தனியாக விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். காரணம் அக்கடிதம் சங்கேத பாஷையில் எழுதப்பட்டிருந்ததுதான்.
நண்பர் உண்மையை சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்கள் நண்பரை விட சம்மதிக்கவில்லை. காரணம் இது உண்டியல் எனப்படும் பணபரிமாற்றத்திற்கு பயன் படுத்தக்கூடிய, அதாவது அந்நிய செலாவணியை ஏமாற்றி நடத்தப்படுகின்ற உலகளாவிய பண பட்டுவாடாவிற்கு பயன் படுத்தக்கூடிய சங்கேத பாஷை. இதன் பின்னணியில் பெரிய கும்பல் இருப்பதை உணர்ந்த அதிகாரிகள் உஷாராகிவிட்டார்கள். குற்றவாளிகளை பிடிக்க அல்ல, பணத்தை கறக்க!
ஒருவழியாக நண்பரை, அவர்கள் முன்பு வைத்து, ரியாத்திற்கு சம்பந்தபட்ட உணவக உரிமையாளரிடம் பேச வைத்துள்ளனர். உணவகத்தின் தொலைபேசி எண் ஞாபகம் இருந்ததால் அவர் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. நண்பரோ அப்பாவி! அவரின் நல்லகாலம் உணவக உரிமையாளர், அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு சென்றுவிடுங்கள். இல்லையெனில் இதனால் நிறையபேர் பாதிக்கபடுவார்கள். உங்களுக்கு அப்பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என சொல்லியுள்ளார்.
கடைசியாக நண்பரிடமிருந்த ஐம்பதாயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு அவரை விட்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார். ஆனால் வீட்டை அடைந்த இரண்டாம் நாளே கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு வெட்டிய ஐம்பதாயிரம் ரூபாயையும் உண்டியல்காரர்கள் கொண்டுவந்து கொடுத்துள்ளனர்.
ஒருவேளை அக்கடிதத்தை கொடுத்தவர், எனக்கு தெரியாது என சொல்லி இருந்தால், என்ன ஆகியிருக்கும் என நினைத்து பாருங்கள். எனவே வெளி நாட்டிலிருந்து ஊரிற்கு செல்பவர்கள் பிறரின் பொருட்களையோ, கடிதங்களையோ கொண்டு செல்லாதீர்கள். அவை உங்களை ஆபத்தில் மாட்டி விடலாம்.
பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.
.
Loading...
திங்கள், 15 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!
9 கருத்துகள் :
Ivlo matter iruka .. Nandri
உங்களுக்கு தெரிந்த அனுபவங்களை, உலகு பயனடைய இவ்வாறு எழுதுவது கர்த்தரின் மனதில் உங்களுக்கு ஒரு இடம் கிடைக்க வழிவகுக்கும்.
நன்றி.
correct
யாத்ரீகன் said...
Ivlo matter iruka .. Nandri
//ஆமாங்க! வருகைக்கு நன்றி!!//
shirdi.saidasan@gmail.com said...
உங்களுக்கு தெரிந்த அனுபவங்களை, உலகு பயனடைய இவ்வாறு எழுதுவது கர்த்தரின் மனதில் உங்களுக்கு ஒரு இடம் கிடைக்க வழிவகுக்கும்.
நன்றி.
//உங்கள் கருத்துக்கு நன்றி//
pukalini said...
correct
//உங்கள் கருத்துக்கு நன்றி//
தமிழினி said...
உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது ....
//என் பதிவை பற்றிய கருத்துக்கு பதிலாக உங்களின் தள விளம்பரத்தை பதிவு செய்துள்ளீர்கள். நான் என் template ஐ விட, என் பதிவிற்கே முக்கியத்துவம் கொடுப்பவன்//
ஹூம்! பாவம் தான் அந்த நண்பரும் & கடிதம் கொடுத்தவரும்.
வடுவூர் குமார் said...
ஹூம்! பாவம் தான் அந்த நண்பரும் & கடிதம் கொடுத்தவரும்.
//நீங்களும்தான் பாவம்! இல்லையென்றால் கடிதம் கொடுத்தவரையும் பாவம் என்று சொல்லியிருக்கமாட்டீர்களல்லவா?//
கருத்துரையிடுக